செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

புனித கார்மேல் அன்னையின் விழா 2019


இறைவன் இயேசுவில் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இன்று நம் தாய் திருஅவை புனித கார்மேல் அன்னையின் விழாவினை நினைவுகூற நம்மை அழைக்கின்றது. எபிரேய மொழியில் “கார்மேல்" என்ற சொல்லுக்கு “தோட்டம்" என்பது பொருள். “தூய கார்மேல் அன்னை" அல்லது "தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனித உத்தரிய மாதா" என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களாகும்.
கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை அன்னை மரியாளின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே அன்னை மரியாளுக்கு “கார்மேல் அன்னை” என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பது வரலாற்றிலிருந்து அறியப்படக்கூடிய மரபு உண்மை. மேலும் 15ம் நூற்றாண்டில், அன்னை மரியாளின் உத்தரியம் என்னும் அருளிக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. அன்னை மரியாளே உத்தரியத்தை “புனிதர் சைமன் ஸ்டாக்”  என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக நம்பப்படுகின்றது. இதனையே ஜூலை மாதம் 16ம் நாள், கத்தோலிக்க திருஅவையில் கார்மேல் அன்னையின் விழா மற்றும் கார்மேல் உத்தரிய திருவிழாவாகவும் திருஅவை நினைவு கூறுகின்றது.
எனவே இந்த நல்ல நாளிலே நாம் அனைவரும் திருஅவையோடு இணைந்து புனித கார்மேல் அன்னையின் பெயரை தாங்கியுள்ள துறவற அவைகளுக்காகவும், அதில் பணிபுரிந்து மரித்தவர்களுக்காகவும், புனித கார்மேல் அன்னையின் பெயரைத் தாங்கியுள்ள ஒவ்வொருவருக்காகவும் செபித்து, புனித கார்மேல் அன்னையின் வழியாக இறையருளை பெற பக்தியோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...