செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

நிமிர்ந்து நிற்போம் Article 2019

நிமிர்ந்து நிற்போம்
அன்பு நண்பர்களே! கிரிக்கெட் மோகம் தலைவிரித்து ஆடும் இன்றைய சூழலில் தன்னம்பிக்கை பேச்சாளர் திரு. சுகிசிவம் அவர்கள் கூறுவார் கிரிக்கெட் விளையாட்டை வெறிகொண்டு பார்க்கும் நாம் அதிலிருந்து வாழ்க்கையை உணர முயல வேண்டுமென்று. கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் பந்தை அடித்து மதிப்பெண்கள் எடுக்க முயலும் போது எத்தனை பேர் அவரை சுற்றி அவரை தோற்கடிப்பதற்காக நிற்கிறார்கள் என்று பார்க்கும் போது 11 நபர்கள். அதுதான் வாழ்க்கை நாம் வாழ்வில் முன்னேற செல்ல விரும்பினால் நம்மை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கூட்டமே காத்திருக்கும் என்கிறார். அவர்களை எதிர்கொண்டு நிமிர்ந்து வாழ முதலில் நாம் பழக வேண்டும். எப்படி கிரிக்கெட்டில் விளையாட்டில் 11 பேர் இணைந்து ஒருவரை வீழ்த்த வேண்டுமென்ற எண்ணத்தில் சுற்றி நிற்கும் போது, மட்டையைப் பிடித்துள்ள ஒருவர் அவர்களை எதிர்கொண்டு விளையாடுகிறாரோ அதுபோல நாமும் அனைவரையும் நிமிர்ந்து நின்றவர்களாய் எதிர்கொள்ள வேண்டும்.
திருவிவிலியத்தில் நிமிர்ந்து நின்று செயல்பட்டவர்கள் பற்றி பலவற்றை நாம் காணலாம். உதாரணமாக இயேசு கொலை செய்யப்பட இழுத்துச் செல்லப்பட்ட போது கூடியிருந்த அனைவரும் இயேசுவின் அருகில் வர எண்ணினார்கள். ஆனால், படைவீரர்களுக்கு பயந்து ஓடினார்கள். ஆனால் அவர்கள் மத்தியில் நிமிர்ந்து நின்றால் துணிவோடு ஒரு பெண். அவள் பெயர் வெரோனிக்கா. இயேசுவின் அருகில் வந்து இயேசுவின் முகத்தை துடைத்தால்.
இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றதால் யூதருக்கு அஞ்சி நடுங்கிய சீடர்கள் ஒரு வீட்டின் மாடியறையில் முடங்கிக் கிடந்தார்கள். ஆனால், அவர்கள் தூய ஆவியைப் பெற்றதும் இயேசுவைப் பற்றி பேச அஞ்சி நடுங்கியவர்கள்  நெஞ்சம் நிமிர்ந்தவர்களாய் மக்கள் கூட்டத்தின் முன் வந்து நின்று துணிவோடு அறிவித்தார்கள் இயேசுவே மெசியா என்று.
இயேசுவைப் பற்றி நெஞ்சம் நிமிர்த்தி துணிவோடு எடுத்துரைத்து வீரமரணம் அடைந்தவர்கள் தொடக்ககாலத் திருஅவையில் பலர். அதிலும் குறிப்பாக திருவிவிலியத்தில் நாம் வாசிக்கலாம் புனித ஸ்தேவான் அவர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எடுத்துரைத்து கல்லடி பட்டு வீர மரணம் அடைந்தார் என்பதை.
இவ்வாறு பலரை நாம் மேற்கோள்கள் காட்டலாம் விவிலியத்திலிருந்து. இயேசுவைப் பற்றி அறிவித்தால், அவரைப் பற்றிய உண்மையை கூறினால் துன்பம் பரிசாக கிடைக்கும் என்பதை அறிந்திருந்தும் அதை பொருட்படுத்தாது நெஞ்சம் நிமிர்த்தியவர்களாய் துணிந்து நின்றவர்கள் இயேசுவின் சீடர்கள்.
இவர்களே போலவே துணிந்து நின்ற பலரை நாம் நம் நாட்டிலும் காணலாம்.
இன்றைய நாளில் நம் சமூகத்தில் நிலவும் அநீதிகளை எதிர்த்தாலும், உண்மையை கூறினாலும,; நாமும் கடத்தப்பட நேரலாம் சமூகபோராளி முகிலனை போல, கொலை செய்யப்படலாம் கௌரி இலங்கேசு போல, பொய் வழக்குகளாள் ஜோடிக்கப்பட்டு சிறை செல்ல நேரிடலாம் மாணவி நந்தினி போல, ஏன் சில நேரங்களில் சமூக விரோதிகள் என்ற பெயரில் சுட்டு வீழ்த்தப்படலாம் ஸ்டெர்லைட் போராளிகளை போல. இதற்கெல்லாம் தயாராக நாம் இருக்கிறோமா? என சந்திப்போம்.
இயேசுவின் சீடர்கள் உண்மையை உலகுக்கு உரைத்தபோது எவ்வாறு பல இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்களோ அதுபோலவே நாமும் எதிர் வருவது எதுவாயினும் சரியான இலக்கை நோக்கி இயேசுவின் வழியில் உண்மையை உரக்கச்சொல்லி விரைந்து செல்வோம் நெஞசம் நிpர்ந்தவர்களாய். துணை வருவார் இறைவன் நெஞ்சம் நிமிர்த்தி துணிந்த உள்ளம் கொண்ட பல மனிதர்கள் வழியாக வாருங்கள் எதிர்கொள்வோம் நாம் சமூகத்தை இயேசுவோடு இணைந்து நெஞ்சம் நிமிர்ந்தவர்களாய்.

என்றும் அன்புடன் உங்கள்
ஜே. சகாயராஜ்
இரண்டாம் ஆண்டு இறையியல்
தூய பவுல் இறையியல் கல்லூரி
அம்மாபேட்டை
திருச்சி மறைமாவட்டம்


1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...