இறைவன் இயேசுவில் அன்புக்குரிய அன்பான இறைமக்களே!
உங்கள் அனைவரையும் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று “மனித மனங்களில் கலங்குவது அணுகுண்டுகளால் அல்ல... மாறாக அன்பற்ற இதைங்களால் தான்...” விண்ணையும், மண்ணையும் உருவாக்கிய கடவுள் மனிதர்கள் அனைவரையும் தம் உருவிலும், சாயலிலும் உருவாக்கினார் என தொடக்கநூல் 1-ஆம் அதிகாரம் 18 -ஆம் வசனத்தில் நாம் காணலாம். இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் நம் கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்ய வேண்டும் என்ற மோசேயின் கட்டளையை நமக்கு நினைவு படுத்துகிறார். இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக கடவுள் படைப்பனைத்திற்கும் முதன்மையானவர். அவரால் அனைத்தும் படைக்கப்பட்டன. இவ்வுலகில் உள்ள அனைத்தும் அவரோடு இணைந்து உள்ளன என்பதை புனித பவுல் கொலேசய நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக நாம் நல்ல சமாரியனாக வாழ அழைக்கப்படுகிறோம். கடவுளை முழு உள்ளத்தோடும் முழு இதயத்தோடும் அன்பு செய்வது என்பது சக மனிதனை கடவுளின் சாயலாக பார்ப்பதும், மனிதனை மனிதன் அன்பு செய்ய வேண்டும் என்பதே இன்றைய நாளில் நமக்கு இறைவன் தரக் கூடிய செய்தியாக உள்ளது. நாம் ஒருவர் மற்றவர் மீது இரக்கம் காட்டுவதும், அன்பு காட்டுவதும் இறைவனுக்கே செய்வதாகும். இதன் அடிப்படையில் இன்றைய நாளில் நாம் அனைவரும் ஒருவர் மற்றவரை அன்பு செய்பவர்களாகவும், ஒருவர் மற்றவரின் துயரத்தில் பங்கெடுக்க கூடியவர்களாகவும் இருப்பதற்கான வரம் வேண்டி இந்த திருப்பலியில் பக்தியோடு இணைவோம். மனிதர்களை அன்பச் செய்யவும், அவர்களிடம் இரக்கம் காட்டவும் தவறிய நேரங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுவோம். நல்ல சமாரியனாக மாற முழுமனதுடன் இணைவோம் இத்திருப்பலியில்.
செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019
மனிதனை மனிதன் அன்பு செய்ய வேண்டும் 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக