“ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள், ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்” (1 தொச. 5:11)
இறைவன் இயேசுவில் அன்புக்குரிய அருட்தந்தையர்களே, அன்பு நண்பர்களே! உங்கள் அனைவரையம் இன்றைய கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய முதல் வாசகம் வழியாக புனித பவுல் ஆண்டவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் தெசலோனிக்கர் பகுதி மக்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆண்டவரின் இரண்டாம் வருகையை எப்படி எதிர்கொள்வது?, அதற்கு நாம் நம்மை எப்படி தயாரித்துக் கொள்வது? என்பது பற்றி எடுத்துக்கூறி அப்பகுதி மக்களை தீமையை விட்டுவிட்டு உண்மையின் ஒளியில் வாழ ஊக்கப்படுத்துகிறார். அதுபோலவே இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு தனது பொதுபணியைத் தொடங்குகிறார்.
ஓய்வு நாட்களில் தொழுகைக்கூடங்களில் கற்பிப்;பது,
அதிகாரத்துடன் போதிப்பது,
தீய ஆவிகளை விரட்டுவது,
குற்ற உணர்வுடன் வாழும் மக்களின் பாவங்களை மன்னிப்பது
என பல பணிகளை மக்களுக்குச் செய்து, துன்புற்ற அம்மக்களின் துயர்துடைத்து துணிவு பெற்றவர்களாகவும், ஒருவர் மற்றவரை ஊக்கமூட்டுபவர்களாகவும் மாற்றுகிறார். இத்தகைய ஊக்கமூட்டும் உன்னதரின் பலியான இத்திருப்பலியில் இணைந்து நாமும் ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்தும் இயேசுவின் உண்மை சீடராக வாழ அருள் வேண்டி பக்தியோடு இணைவோம் இத்தெய்வீகத் திருப்பலியில்.
சகோ. சகாய ராஜ் ஜே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக