வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருக்குடும்ப திருவிழா - 2 (27.12.2020)

 திருக்குடும்ப திருவிழா

திருப்பலி முன்னுரை: 

இறைவன் திருமுன் திருக்குடும்பமாகவும், திருக்குடும்பங்கள் ஆகவும் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கங்களையும், வாழ்த்துக்களையும் இன்முகத்தோடு கூறிக்கொள்கிறேன். இன்றைய திருக்குடும்ப விழாவினை கொண்டாட திருச்சபையால் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். குடும்பம் என்றால் கொடு ூ இன்பம் குடும்பம் அதாவது இன்பத்தை கொடுப்பதுதான் குடும்பம் என்று வரையறுக்கப்படுகிறது. ஆம் அன்பிற்கினியவர்களே ஒவ்வொரு குடும்பத்தினரும் இன்பத்தை பிறருக்கு வழங்கினால் நல்ல குடும்பமாக வளரும் என்பதில் அய்யமில்லை. மேலும் இன்றைய நாளில் “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்ற சொல்லி எல்கனாவும், அன்னாவும் தம் குழந்தைக்கு சாமுவேல் என்று பெயரிட்டதுடன் அக்குழந்தையை இறைவனுக்கு அர்ப்பணித்ததை முதல் வாசகம் வழியாகவும் நம் தந்தையாம் கடவுள் நம்மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளார் என்பதையும் அத்தகைய தந்தையிடம் நாம் கேட்பதையெல்லாம் பெற்றுக் கொள்ள என்ன வழி என்பதை இரண்டாம் வாசகம் வழியாகவும் மேலும் பிளளைகள பெற்றோருக்கும், மனைவி கனவனுக்கும், அனைவரும் இறைவனுக்கும் பணிந்திருக்க வேண்டும். மொத்தத்தில் “இறைவனுக்கு பணிந்திருக்கும் குடும்பம் சமுதாயத்தில் தலை நிமிர்ந்திருக்கும்” என்பதை நற்செய்தி வாயிலாகவும் இறைவன் நம்மிடம் பேசவிருக்கிறார். ஆம் பிரியமாணவர்களே இன்று குழந்தைகளாகவும், இளைஞர் இளம் பெண்களாகவும், பெற்றோர்களாகவும் நாம் ஒருவொருவருக்கொருவர் பணிவுடன் வாழ்கிறோமா? என்று சற்று சிந்தித்து பார்ப்போம். வளர்ச்சியின் அடிநாதம் பணிவு என்பார்கள். எனவே நம் குடும்பங்கள் இறைவனுக்கு பணிந்து திருக்குடும்பமாக மாற இறைவனிடம் பணிந்து இத்திருப்பலியில் தொடர்ந்து மன்றாடுவோம். 

முதல் வாசக முன்னரை: (சாமு 1:20-22, 24-28)

நாம் கேட்கவிருக்கும் முதல் வாசகத்தில் “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று கூறி ஒரு பெற்றோர் தம் குழந்தைக்கு எவ்வாறு பெயரிடுகிறார் என்பதையும் அவ்வாறு இறைவனுக்குப் பணிந்து இறைவன் கொடுத்த கொடையை இறைவனுக்கே கையளித்து அர்ப்பணித்தார்கள் அந்த பெற்றோர்கள், ஏன் அவ்வாறு பெயரிடுகிறார்கள்? ஏன் இறைவனுக்கு அர்பணிக்கிறார்கள்? அதனால் என்ன பயனை அடைகிறார்கள்?  யார் அந்த குழந்தை? யார் அந்தப் பெற்றோர்கள்? தேரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறீகளா? வாருங்கள் கேட்டறிவோம். 

இரண்டாம் வாசக முன்னுரை: (1 யோவா 3: 1-2, 21-24)

இந்த உலக நட்புகளை ஒரே வார்த்தைகளில் அடக்க முடியும் என்றால் அது அன்பு என்ற வார்த்தையே. அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல் அன்போ இன்பம் என்றால் அன்புக்கு விளையேது சொல்  என்று நாம் பாடல் பாடியிருப்போம். அத்ததைகய அன்பை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. இறைவன் நம்மீது எவ்வாறு அன்;பு கொள்கிறார் தெரியுமா? நாம் அவர்மீது அன்பு கொள்கிறோமா? அன்பே உருவான நம் இறைவனிடம் நாம் கேட்பது எல்லாம் கிடைக்கிறதா? அவ்வாறு நாம் கேட்பது எல்லாம் பெற்று கொள்ள நம் என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் கேட்டறிவோம். 

மன்றாட்டுகள்

1. பெற்றோர்களுக்கு பணிந்து நடந்த இயேசுவே.. நாங்கள் எங்களுடைய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், உமக்கும் பணிந்து வாழ தேவையான பணிவையும், உமது ஆசீரையும் தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறோம. 

2. எல்லாம் வல்ல இறைவா, அன்று உமக்குப் பணிந்து, உமது திருவுளத்தை நிறைவேற்ற தங்களை முழுவதும் இறைத் திட்டத்திற்கு அர்பணித்த உமது திருக்குடும்பம் போல் எங்களது ஒவ்வொரு குடும்பமும், உமக்கு பணிந்து, உமது இறைத்திட்டத்தின்படி வாழ வரமருள வேண்டுமென்று எல்லம் வல்ல இறiவா உம்மை மன்றாடுகிறோம். 

3. குடும்பம் என்பது ஒரு குட்டித் திருச்சபை என்பதை மறைக்கல்வி வாயிலாக உணர்த்தும் எங்கள் அன்பு தெய்வமே.. எங்கள் குடும்பங்கள் வறுமை, நோய், வேலையின்மை, கருத்துவேறுபாடு போன்ற பல்வேறு குறைகளுடன் பயணிக்கின்றன. அவற்றையெல்லாம் சரிசெய்து உமக்கேற்ற ஒரு சிறு திருச்சபையாக வாழ, வளர உதவிட வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

4. ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும் இதுவே என் கட்டளை என்று கட்டளையிட்ட எங்கள் ஆயனே, உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் உமது அன்பு கட்டளைக்கு கடைபிடித்து உம்மோடு இணைந்த ஒரு அன்பு நிறைந்த  ஆன்மீக வாழ்வு வாழ தேவையான அருளை வழங்கிட வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவா உம்மை மன்றாடுகிறோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...