வெள்ளி, 4 டிசம்பர், 2020

சுகமளிக்கும் செபம்

சுகமளிக்கும் செபம்

என் இயேசுவே 
என் இறைவா 
எனக்காக பிறந்து வாழ்ந்து 
எனக்காக இறந்த 
என் இயேசுவே 
காக்கின்ற தெய்வமே 
உன் கையில் என்னை 
ஒப்படைக்கின்றேன்

இயேசுவே 
உன் காயங்களால் 
என் மனக்காயங்களை ஆற்றும். 
உம் இரக்கத்தால் 
என் நோய்களை குணமாக்கி 
என்னை கழுவி  தூய்மையாக்கும்.
 
உமது பரிசுத்தமான சிலுவையினால் 
என்னை தாங்கும்.
என் ஏக்கத்தையும், 
கோபத்தையும், 
ஏமாற்றத்தையும் 
உமது பரிசுத்த சிலுவையில் 
ஒப்புக் கொடுக்கிறேன்

இயேசுவே 
எனக்கு ஆற்றலையும், 
ஆறுதலையும், 
அமைதியையும், 
ஆசீரையும் தாரும். 

இயேசுவே உமக்கு நன்றி... 

ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...