முதல் வாசக முன்னுரை
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் நாம் வாசிக்கவிருக்கும் முதல் வாசகமானது இறைவாக்கினர் எசாயா எழுதிய நூலில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
இஸ்ரயேல் மக்கள் பாலஸ்தீன அடிமைத்தனத்திலிருந்து போது பலவிதமான துன்பங்களை சந்தித்தார்கள். அத்துன்பங்களின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்து போனார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை தரும் செய்தியாக எசாயா இறைவாக்கினர் அவர்களுக்கு உரைத்த இறைவாக்கு பகுதியைத்தான் இன்றைய நாளில் நாம் வாசிக்கவிருக்கிறோம்.
துன்பத்திலிருந்த மக்களுக்கு எசயாவின் வார்த்தைகள் ஆறுதலை தந்தது. அதுபோலவே இன்று பலவிதமான துன்பத்திலுள்ள நமக்கும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கும் என்ற மனநிலையோடு இன்றைய முதல் வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக