இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்று நாம் தாய் திரு அவையாக இணைந்து தூய கன்னி மரியாவின் துயரங்களை நினைவு கூறுகிறோம். அல்லது வியாகுல அன்னையின் திரு நாளை நினைவு கூறுகின்றோம்.
அன்னை மரியாள் ஏழுவிதமான துயரங்களை தன் வாழ்நாளில் சந்தித்ததாக திருஅவை கூறுகிறது. அதனை நினைவு கூர்ந்து நாமும் வாழ்வுக்கான பாடத்தைக் கற்றுக் கொள்ள திருஅவை அழைப்பு தருகின்றது இந்த நல்ல நாளில்....
1. சிமியோனின் இறைவாக்கு உன் உள்ளத்தை ஒரு வா ஊடுருவும்...
2. குழந்தை இயேசுவை தூக்கிக்கண்டு எகிப்துக்கு ஓடியது நிலை..
3. காணாமல்போன இயேசுவை தேடியது நிலை....
4. சிலுவையோடு பயணம் செய்த இயேசுவை வழியில் சந்தித்த தருணம்....
5. சிலுவையின் அடியில் எதுவும் செய்ய இயலாத நிலையில் தன் கண் முன்பாக தன் மகன் துடிதுடித்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த நேரம்....
6. இறந்த மகனின் உடலை மடியில் வைத்து புலம்பிய தருணம்...
7. தான் பெற்ற மகன் தனக்கு முன்பாக மண்ணக வாழ்வை நிறைவு செய்து கல்லறைக்குள் அடக்கப்பட்ட துயர நிகழ்வு....
இத்தகைய 7 துன்பங்களில் அன்னை மரியாவின் துயரங்களை பட்டியலிடுகிறது திருஅவை...
அன்னை மரியாள் இயேசுவின் வாழ்வில் நடப்பவற்றை என்னவென்று அறிந்து கொள்ள இயலாத நிலையிலும், நடக்கும் அனைத்தையும் இறைவனது திட்டம் என கருதி ஏற்றுக்கொண்டு இயேசுவோடு அவரது பாதையில் தானும் பயணம் செய்கிறாள்.
இந்த அன்னையை போன்ற தான் இயேசுவின் விழுமியங்களின் படி வாழ்வை அமைத்துக்கொள்ள வந்திருக்கக்கூடிய நாம் ஒவ்வொருவருமே அடுத்தவரின் துன்பத்திற்கான காரணத்தைத் தேடி கொண்டு இருப்பதற்கு பதிலாக துன்புறும் மனிதனின் துன்பத்தில் பங்கு எடுக்கவும், அந்த துன்பத்தை பகிர்ந்து கொள்ளவும் முன் வர வேண்டும். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் மேன்மையாக கருதப்படுகிறது.
நாம் வாழும் இந்த உலகத்தில் அன்னை மரியாவை போல துன்பத்தில் வாடுகின்றவர்களின் துயரத்தில் பங்கு எடுக்கவும், அவர்களின் துன்பத்தை பகிர்ந்து கொள்ளவும் இறைவனது அருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம் இந்த நாளிலே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக