தூய கன்னி மரியாவின் துயரங்கள்
அன்புக்குரியவர்களே! இன்று நாம் தாய் திருஅவையாக இணைந்து தூய கன்னி மரியாவின் துயரங்களை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நல்ல நாளில் உங்களோடு இறைவனது வார்த்தைகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எண்ணிக்கையில் இஸ்ரயேல் மக்கள் மிகுதியாக இருந்ததால் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை கண்டு அஞ்சினார்கள். எனவே அவர்களை அடிமைகளாக வேலை வாங்குவதற்கு பயன்படுத்தினார்கள். அவர்களின் துன்பத்தை இறைவன் கண்ணோக்கினார் இன்பமாக மாற்றினார். ஏன்பது விவிலியம் அறிந்த அனைவரும் அறிந்ததே.
விவிலியத்தில் தொடக்கநூல் 1: 28 ஆம் வசனத்தில் “பலுகிப் பெருகி மக்கள் இனங்களை நிரப்புங்கள்” என்கிறது. இவ்வார்த்தைகளின் அடிப்படையில் கூட்டகாம இணைந்து வாழ்ந்த மனிதர்கள் சுயநலத்தால் தனித்து வாழ தொடங்கினார்கள். கூட்டுக் குடும்பம் தனி குடும்பமாக மாறியது. அதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் என்று இருந்த நிலை மாறி, நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலை உருவாகி, இன்று நாமே இருவர் நமக்கு ஏன் மற்றொருவர் என்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் அன்னை மரியாவின் வியாகுலங்கள் வழியாக இன்று சமூகத்தில் குடும்பத்தின் அச்சாணியாக இருக்கும் அன்னையர் சந்திக்கின்ற சவால்களை, தியாகங்களை சிந்திக்கவும் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
பல வீடுகளில் உணவு சூடாக இருந்தால் கணவன் உண்பார். சுவையாக இருந்தால் மட்டுமே பிள்ளைகள் உண்பார்கள் ஆனால் பல இடங்களில் மீதம் இருந்தால் மட்டும் உண்ணக்கூடிய தாய்மார்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மண்ணில் நாம் பிறப்பதற்கு முன்பாக நமக்காக இறைவனிடத்தில் ஜெபிக்க தொடங்கியவர் நம் தாய். நம் சுகத்திற்காக தன் சுகத்தை தியாகம் செய்தவர். தியாகத்தின் மறு உருவம் ஒவ்வொரு தாயும்.
இவரே உம் தாய் (யோவான் 19:27) என்ற வார்த்தைகளின் அடிப்படையில் ஆண்டவர் இயேசு நமக்கு விட்டுச்சென்ற அன்பு தாயாம் அன்னைமரியா தன் வாழ்வில் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தவர். அன்னை மரியாவை வியாகுல அன்னை என்று அழைப்போம். வியாகுல அன்னை என்பது கன்னி மரியாவுக்கு அளிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். மரியா தன் வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இப்பெயர் வழங்கப்படுகின்றது.
1. சிமியோனின் இறைவாக்கு
2. எகிப்துக்குத் தப்பி ஓடுதல்
3. பன்னிரெண்டு வயதில்
4. கல்வாரி சிலுவைப் பாதையில்
5. இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தில் உயிர்துறந்த போது
6. இயேசுவின் திருவுடல் அன்னையின் மடியில்
7. இயேசுவின் தூய உடல் கல்லறையில்
மரியாவின் இந்த 7 துயரங்களை நினைவுகூறுவதன் வழியாக அன்னையிடமிருந்து வாழ்வுக்கான பாடங்களை கற்றுக்கொள்ள திருஅவை இன்று நம்மை அழைக்கின்றது.
இயேசுவோடு இருந்தவர்களில் முதன்மையானவராக இருந்தவர் அவருடைய தாய் அன்னை மரியாள். தான் பெற்று வளர்த்த மகன் குற்றவாளி என்ற முத்திரை குத்தப்பட்டுஈ தன்னால் காப்பாற்ற முடியாத அந்நிலையை ஒரு தாய் அனுபவிப்பது கொடுமையிலும் கொடுமையான நிகழ்வு. அன்னை மரியாள் நடப்பவற்றை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நடப்பவற்றை ஏற்றுக் கொள்கிறாள். தன்னுடைய மகனின் வேதனையை பார்க்க சகிக்காது அவர் ஓடிவிடவில்லை மறாக அவரது வேதனையில் பங்கெடுக்கிறாள், பகிர்ந்து கொள்கிறாள். மற்றவரின் வேதனையில் பங்கெடுப்பது பகிர்ந்து கொள்வதும் கிறிஸ்தவ வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்பதை அன்னை மரியாவின் வாழ்வு நமக்கு எடுத்துரைக்கிறது.
குருத்துவ வாழ்வை மேற்கொண்டு இருக்கக்கூடிய நாம் நமது குடும்பத்தில் உள்ளவர்களோடு உரையாட, உறவாட நேரம் ஒதுக்கவும். நம்மாலான சின்னஞ்சிறு உதவிகளை அவர்களுக்கு செய்ய முயல்வோம்.
முற்றும் துறந்த முனிவராலும் துறகக்க இயலாதது தாயன்பு என்று கூறுவார்கள். குருத்துவ வாழ்வு பயிச்சியில் பார்க்கும் பல பெண்களில் பலரை அம்மா என்று அழைக்கின்றோம். அவர்கள் நலனில் அக்கறை காட்ட கூடியவர்களாக இருக்கின்றோம். ஆனால் பத்து மாதம் நம்மை சுமந்து பெற்றெடுத்த தாயிடம் பத்து நிமிடம் பேசுவதற்கு தினமும் நேரம் ஒதுக்கக்கூடியவலர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்… அன்னை மரியாவின் துன்பங்களை நினைவுகூறும் இந்நாளில் நம் பெற்றோர் நமக்காக செய்த தியாகங்களை நினைவு கூறுவோம். இயேசுவின் அனைத்து விதமான பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டு அவரின் விருப்பமே தன் விருப்பம் என வாழ்ந்த அன்னை மரியாவை போல, நமது குடும்பத்தின் விருப்பமே தன் விருப்பம் என கருதி வாழும் நமது தாய்மார்களை நன்றியோடு நினைத்துப் பார்த்து, அவர்கள் செய்கின்ற தியாகங்களை உணர்ந்து கொண்டு, எப்போதும் அவர்களை நன்றியோடு நோக்கக் கூடிய நல்ல மனிதர்களாக மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம் குறிப்பாக நம் வீடுகளில் இருக்கக்கூடிய நமது பெற்றோரின் உடல் நலத்திற்காக இறைவனிடத்தில் தொடர்ந்து இறைவேண்டல் செய்து மன்றாடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக