வியாழன், 9 செப்டம்பர், 2021

தன்னிலை உணர்வதே மாற்றத்திற்கான வழி...(10.9.2021)

தன்னிலை உணர்வதே மாற்றத்திற்கான வழி

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்த சமூகத்தில் நீ விரும்பும் மாற்றமாக நீ இரு என்றார் காந்தியடிகள். தன்னை மாற்றிக் கொள்ளாத எவனாலும் சமூகத்தை மாற்ற இயலாது என்பார்கள்.

மாற்றம் அனைவரும் விரும்பும் ஒன்று. ஆனால் யாரும் மாற விரும்புவது இல்லை அதாவது தங்களை மாற்றிக் கொள்ள விரும்புவது இல்லை.
முதல் வாசகத்தில் பவுல் தன்னை மாற்றிக்கொண்டார் எனவே பலரை இயேசுவை நோக்கி மாற்றமடைய வைப்பதற்கான கருவியாக மாறினார்.
கண்டு அனுபவித்த இயேசுவின் சாட்சியாக அவர் மாறியதன் விளைவே அவரை பின்தொடர்ந்து அவரது வார்த்தைகளை கேட்டு பலரும் இயேசுவை நோக்கி மாற்றம் அடைந்தவர்களாக மாறினார்கள் என்பது வரலாறு நமக்கு தருகின்ற பாடமாக உள்ளது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன்னை திருத்திக் கொள்ளாத ஒருவனால் அடுத்தவரை திருத்த இயலாது என்ற செய்தியினை இறைவன் அழகாக எடுத்துரைக்கின்றார்.

நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நாம் பிறரை குற்றவாளிகள் என அடையாளம் காணுகின்ற போது நாம் குற்றவாளிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்து போகின்றோம். நாம் விரும்புவது போல நமது எண்ணத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் மாற்றம் அடைய வேண்டும் என எண்ணுகிறோம் ஆனால் நாம் மாறுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற கேள்வியை இன்று நாம் நமக்கு உள்ளாக எழுப்பி பார்ப்போம். 
தன்னை மாற்றிக் கொள்ளும் பொழுதுதான் தரணியில் மாற்றமானது உருவாகுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. தன்னை மாற்றிக் கொள்ளாது தனக்காக சமூகத்தில் உள்ள அனைத்தும் மாற வேண்டுமென என்ன கூடியவர்களாக நாம் இருப்போம் ஆனால் குருடன் குருடனுக்கு வழிகாட்டுவது போலத்தான் நமது வாழ்வு இருக்கும்.

தன் நிலையை உணர்வதே மாற்றத்திற்கான வழி என்று கூறுவார்கள் நாம் எத்தகைய பாதையில் பயணம் செய்கின்றோம் எத்தகைய கண்ணோட்டத்தோடு அனைவரையும் நோக்கு கின்றோம் என்று நம்மையே நாம் சுய ஆய்வு செய்து பார்ப்போம்....
மாற்றத்தை முதலில் நமதாக மாற்றுவோம்.... .
 தன்னிலை உணர்வோம் மாற்றத்திற்கு வழிவகுப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...