அணுபவங்கள் சீடராக நெறிப்படுத்தட்டும்...
இயேசுவின் அன்பு நண்பர்களே...
கவிஞர் கண்ணதாசன் இறைவனிடத்தில் இவ்வாறு உரையாடியதாக எழுதிவைத்தார்.
மனையாள் சுகம் யாதெனக் கேட்டேன், மணந்து பார் என்றார் இறைவன். நட்பு யாதெனக் கேட்டேன், பழகிப் பார் என்றார் இறைவன். அனைத்தையும் நான் தான் ஆய்ந்து அறிந்து அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீ எதற்கு? என்றேன். அதற்கு இறைவன் என்னை கூர்ந்து பார்த்துச் சொன்னார், அந்த அனுபவமே நான் தான் என்று
கண்ணதாசனின் இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப, அனுபவம் கற்றுத் தருகின்ற பாடத்தை ஆயிரம் ஆசிரியர்கள் இணைந்தாலும் கற்றுத் தர இயலாது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.
கல்வி என்பது ஏட்டில் இருப்பதை மட்டும் இதயத்தில் இணைப்பது அல்ல மறாக நமக்குள் இருப்பதை வெளிக் கொண்டு வருவதாகும். இதற்க்கு நாம் தங்கியுள்ள இந்த இல்லம் பல வாய்ப்புகளை வழங்குகிறது. கிடைக்கின்ற வாய்ப்புகளை கொண்டு அணுபவங்கள் பல பெற்று அந்த அனுபவத்தின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆழமாக அறிந்து கொள்ள இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
இயேசு இந்த மண்ணில் மனிதனாக வாழ்ந்த போது தன்னுடைய சீடர்களுக்கு அனுபவத்தின் வாயிலாக பலவற்றை கற்றுத்தந்தார்.
லூக்கா நற்செய்தி 6 அதிகாரம் 1 லிருந்து 5 வசனங்களில் நாம் வாசிக்கனலாம். இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளை சட்டத்தை கடைப்பிடிக்காது கதிர்களைக் கொய்து கசக்கி அதனை உண்டு கொண்டிருந்தார்கள் என குற்றம்சாட்டப்பட்டனர். ஆனால் இயேசு ஓய்வுநாள் சட்டத்தின் நோக்கம் என்ன என்பதை எடுத்துரைத்தவராய் சட்டத்தை விட மனித நேயம் மதிப்புமிக்கது என்பதை தன் அனுபவத்தின் வழியாக சீடர்களும் அனுபவித்து புரிந்து கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
மேலும் மாற்கு நற்செய்தி 7; அதிகாரம் 5 முதல் 20 வசனங்களில் இயேசுவின் சீடர்கள் மூதாதையரின் மரபை பின்பற்றாது விருந்து உண்பதற்கு முன்பாக கைகளை கழுவாமல் விருந்து உண்கிறார்கள் என பரிசேயர் சதுசேயர் குற்றம் சாட்டிய போது எழுத்துக்களால் எழுதப்பட்டதை தூக்கிக் கொண்டு வெளிவேடம் தரிப்பதை விட உண்மையான உள்ளார்ந்த மாற்றமே அவசியமானது என்று வாழ்வுக்கான பாடத்தை அணுபவ வழியில் தந்தவர் இந்த இயேசு.
மேலும் லூக்கா நற்செய்தி 5; அதிகாரம் 33 லிருந்து 39 வரை உள்ள வசனங்களில் நாம் வாசிக்க கேட்கலாம். இயேசுவின் சீடர்கள் நோன்பு இருக்கவில்லை என்பதை குற்றம்சாட்டி உன்னுடைய சீடர்கள் மூதாதையரின் சட்டங்களை மதிக்கவில்லை என குற்றம் சாட்டிய போது மகனோடு இருக்கும் பொழுது மன விருந்தினர்கள் நோன்பு இருக்க வேண்டிய அவசியம் அல்ல என எடுத்துரைத்து நோன்பின் உண்மையான நோக்கம் என்ன என்பதை வாழ்வின் தொர்த்தத்தை எடுத்துக்கூறி அணுபவ வழியில் அறிவு புகட்டியவர் இந்த இயேசு.
இன்று நாம் வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகத்தில் கூட இந்த இயேசு தன்னுடைய சவை முன் அறிவித்த போது அவர் அறிவித்ததை காதில் பெரிதாக எடுத்துக் கொள்ளாது தங்களுக்குள்ளாக தங்களில் யார் பெரியவர்? என்ற விவாதத்தை அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இயேசு நினைத்திருந்தால் அந்த நிமிடமே அவர்களிடத்தில் உங்கள் முதல்வனாக இருக்க வேண்டும் இருக்க விரும்புபவர் அனைவருக்கும் தொண்டராக இருக்கட்டும் எனக் கூறி இருக்கலாம். ஆனால் இயேசு அவ்வாறு செய்யவில்லை மாறாக அவர்களை உரையாட விட்டு பின் உள்ளத்திற்க்கான பாடத்தை கற்பித்தார். முதன்மையான இடம் என்பது பெருமை கொள்வதற்கு அல்ல மாறாக மற்றவருக்கு பணியாற்றுவதற்கு என கற்பித்தார். இயேசுவின் இந்த பாடத்தை புரிந்துக் கொள்ளயாத பலர் பணியாளனாக பணி புரியவதை மறந்து பதவியில் இருப்பது கொண்டு அடுத்தவரை தனக்கு பணி புரிய வைப்பவர்களாகவே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர்.
வாழ்வில் நாமும் பலவிதமான நிலைகளைக் கடந்து வந்திருப்போம். ஏன் குருமடத்தில் கூட பல விதமான பொருப்புகளில் தலைமை வகித்திருப்போம். நாம் கடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும் நமக்குப் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தந்திருகின்றன. நாம் பெற்ற அனுபவங்கள் எல்லாமே நம்மை நலமான வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்கு வழி காட்டவேண்டும். இயேசுவோடு இருந்தபோது இயேசுவின் சீடர்கள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள்தான் அந்த இயேசு கிறிஸ்து மண்ணில் மரித்து உயிர்த்து விண்ணேற்றம் அடைந்த பிறகும் இயேசுவின் சீடர்களை நலமான பாதையில் இயேசுவின் சாட்சிகளாக வலம் வர வைத்தது.
இன்று இயேசுவை நமது முன்மாதிரியாகக் கொண்டு, நமது அணுபவங்களின் அடிப்படையில் அவரை பின்பற்றக்கூடிய நமது செயல்களை சீர்தூக்கி பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.
ஒருமுறை ஒரு சாலை ஓரத்தில் ஒருவன் குழி வெட்டிக் கொண்டே சென்றான். மற்றொருவன் அந்த குழியை மூடி கொண்டே வந்து கொண்டிருந்தான். அதை வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்த ஒரு பெரியவர் குழியை மூடுபவனை கூப்பிட்டு கேட்டாராம். என்னப்பா தம்பி அந்த பையன் குழியை வெட்டி விட்டு போகிறான். நீ அதை மூடிகிட்டே போகிறியே ஏன் என்று கேட்டாராம். அதற்கு குழியை மூடுபவன் சொன்னான். குழி வெட்டுவது அவனுடைய வேலை. மரம் வைப்பது இன்னொருவனுடைய வேலை. குழியை மூடுவது என்னுடைய வேலை. இன்று மரம் வைப்பவன் வேலைக்கு வரவில்லை. அதற்காக நான் என் வேலையை நிறுத்தி விடக்கூடாது அல்லவா எனவே தான் என் வேலையை நான் பார்க்கிறேன் என கூறினாறாம்.
பல நேரங்களில் நமது பணியும் இந்த குழியை மூடுபவனின் பணியை போலத்தான் இருக்கின்றது. கடமையை செய்கின்றோம் என்ற பெயரில் பல நேரங்களில் கடமைக்காக செயல்படுவார்கள் தான் நாம் இருக்கின்றோம்.
வகுப்பில் ஒருவர் கேள்விகளை எழுப்புகிறார் என்றால் வகுப்பை திசை மாற்றுவதற்காக அல்ல மாறாக தெளிவுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இங்கும் அதற்கான வாய்ப்புக்கள் பல கொடுக்கப்படுகின்றன. எதையும் செய்வதற்கு முன்பாக ஏன்? எதற்காக? என்ற கேள்விகள் நமக்குள்ளாக எழுப்பி பார்த்து தெளிவுகளை பெற்றுக்கொண்டு அணுபவங்களின் அடிப்படையில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும். அனுபவங்களின் அடிப்படையில் முதல்வனாக இருந்து பணியாளருக்கு உரிய பணிகளை நாம் செய்கின்ற போது இந்த சமூகத்தில் சிலர்; பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படலாம். எள்ளி நகையாடப்படலாம். இன்றைய முதல் வாசகமான சாலமேனின் ஞான நூல் இதையே வழியுருத்துகிறது. பொல்லார் நீதிமான்களின் செயலை எள்ளி நகையாடி பலவிதமான இன்னல்களை உருவாக்குவார்கள் என்று. இந்த சூழ்நிலைகளில் நாம் வாழ்வில் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக யாக்கோபு கூறக்கூடிய கட்சி மனப்பான்மை, போட்டி, பொறாமை போன்றவைகளை விட்டுவிட்டு விண்ணகம் சார்ந்த நற்பண்புகளான அமைதி, பொறுமை, அனைத்திலும் சமநிலை, அடுத்தவருக்கு உதவுதல், இரக்கம் காட்டுதல் போன்ற பண்புகளோட இந்த சமூகத்தில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நாம் பயணம் செய்து இயேசுவின் உண்மை சீடர்களாக நாம் திகழ வேண்டும்.
இயேசுவின் உண்மை சீடர்களாக மாறிட வேண்டும் என்றால் நாம் அவரை முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆவரை ஏற்றுக்கொள்வத என்பது நம்மையே நாம் முதலில் ஏற்றுக் கொள்வதாகும். இதையே இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக “சிறு குழந்தையை ஏற்றுக் கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என் தந்தையை ஏற்றுக் கொள்கிறார் என்று கூறுப்பிடுகிறார். குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனென்றால் குழந்தையிடம் காணப்படக்கூடிய அன்பு, இரக்கம், கனிவு, கள்ளம் கபடம் அற்ற நிலை போன்றவைகள் எல்லாம் இறைவனது பண்புநலன்களாகக் கருதப்படுகின்றன. இத்தகைய பண்புகள் குழந்தைகளாக இருந்து இன்று இளைஞர்களாகவும் மூத்தவர்களாகவும் வளர்ந்து இருக்கக்கூடிய நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தவைகள்தான். வளர்ச்சி என்ற பெயரில் இந்த பண்புகளை எல்லாம் நாம் வளர்ப்பது விட்டுவிட்டு சிறுபிள்ளைத்தனமாக கருதப்படுகின்ற கட்சி மனப்பான்மை, போட்டி, பொறாமைகளை நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய வளர்ச்சியை இறைவன் விரும்புவது அல்ல மாறாக சிறு குழந்தைகளுக்கே உரிய பண்புகளான கள்ளம் கபடமற்ற நிலையையும், அன்பும், இரக்கமும், சமத்துவமும் தான் இறைவன் விரும்புவனவாகும். இவைகள் எங்கோ இருப்பவை அல்ல நாம் குழந்தைகளாக இருந்த போது நம்மில் இருந்தவை. நமக்குள் வளர்ச்சியற்று இருக்கும் இப்பண்புகளை நம் அனுபவங்களின் அடிப்படையில் வளர்த்துக்கொண்டு இந்தச் சமூகத்தில் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறிட இறைவனது அருளை வேண்டுவோம். இறைவன் தம் தூய ஆவியாரின் கனிகள் வழியாக நம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து இத்திருப்பலியில் பங்கேற்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக