செவ்வாய், 7 செப்டம்பர், 2021

மரியாவுக்கு பிறந்தநாள் பரிசு தர விருப்பமா?...(8.9.2021)

மரியாவுக்கு பிறந்தநாள் பரிசு தர விருப்பமா?...

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்று தாய் தருபவையாக இணைந்து நாம் அனைவரும் அன்னை மரியாவின் பிறப்பு விழாவை கொண்டாடி கொண்டிருக்கின்றோம்.
திருஅவை குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பிறந்த நாளை கொண்டாடுகிறது..

இயேசுவின் பிறப்பு விழா 
மரியாவின் திறப்புவிழா 
திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழா இவைகள் மட்டுமே திருஅவையில் கொண்டாடப்படுகின்ற பிறப்பு விழாக்கள் ஆகும் .

ஒரு குழந்தை பெற்றோர் வழியாக அறியப்படும் ஆனால் இங்கு குழந்தையின் வடிவாகவே பெற்றோர்கள் அறியப்படுகின்ற நிலை இந்த மூவருக்கும் உண்டு....

இயேசுவை குறித்து பேசுகின்ற போது இயேசுவின் தாய் மரியா அறியப்படுகின்றார். அதுபோலவே மரியாவை குறித்து பேசுகின்ற போது தான் மரியாவின் பெற்றோரான சுவக்கின் அன்னம்மாள் அறியப்படுகிறார்கள். இது திருமுழுக்கு யோவான் உடைய பிறப்புக்கும் பொருந்தும்.

ஒரு குழந்தையை வைத்து அதன் பெற்றோரை அறிந்து கொள்ளுதல் என்பது அந்த குழந்தை இந்த சமூகத்தில் ஏத்தகைய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது என்பதைப் பொறுத்து அமைகின்றது.

மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இந்த சமூகத்தில் ஏதோ ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கும். வாழ்வின் நோக்கம் என்ன என தேடிக்கொண்டே மனித வாழ்வு பயனபடுகிறது. பலர் தங்கள் வாழ்வின் நோக்கம் இதுதான் எனக் கண்டுணர்ந்து அதற்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து மகத்துவமான செயலில் ஈடுபடுகிறார்கள். அதுபோலவே மரியாவின் பிறப்பு இயேசுவை இவ்வுலகத்திற்கு கொண்டுவருவதற்கு உதவியாக அமைந்தது. திருமுழுக்கு யோவானின் பிறப்பு கூட இயேசுவை முன்னறிவிப்பதற்கான ஒரு காரணமாக அமைந்தது. 
பிறப்பு ஒரு எதார்த்தமாக இருந்தாலும் இறப்பு என்பது ஒரு சரித்திரமாக மாற வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இயேசுவின் இறப்பு சரித்திரமாக மாறியது. அதுபோலவே இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியாவின் இறப்பு சரித்திரமாக மாறியது. அன்னை மரியாவை சிலுவையில் தொங்கும் போது இயேசு நம் அனைவருக்கும் தாயாக தந்தார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் மூதாதையர் பட்டியலில் இடம் பெறுகிறது. இந்த மூதாதையர் பட்டியலில் இறுதியில் அன்னை மரியா யோசேப்பின் மனைவி எனவும் இயேசுவின் தாய் எனவும் அறிமுகப்படுத்தப்படுகிறார். 

ஏசுவின் தாயாக மாறுவதற்கு இந்த மரியாள் தன் வாழ்வில் செய்த தியாகங்கள் ஏராளம். மரியாவைப்  இளமைப்பருவம் பற்றிய குறிப்புகள் எதுவும் விவிலியத்தில் இல்லாத சூழ்நிலையலும் மரியாவைப் பற்றிய பல புத்தகங்களில் மரியாவின் குழந்தை பருவத்தை பற்றி படிக்கின்ற போது மரியா சிறுவயது முதலே கடவுளுக்கு அஞ்சி, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழக்கூடிய ஒரு பெண்மணியாக இந்த சமூகத்தில் வாழ்ந்தார் என்பதை கண்டுணர முடிகிறது. 

மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகிலே மகத்துவமான பணிகள் பல ஆற்றிடுவதற்காகவே இறைவன் படைத்திருக்கிறான். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு மரியாவின் பிறப்பு எப்படி மகத்துவமாக மாறியதோ அதேபோல நமது பிறப்பும் மகத்துவமானதாய் மாற வேண்டுமெனில் ஆண்டவருக்கு அஞ்சி கூடியவர்களாகவும் அந்த ஆண்டவரை மனதில் நிறுத்திக்கொண்டு இந்த சமூகத்தில் அடுத்தவர் நலனில் உதவக்கூடிய வகையில் நலமான பணிகளை முன்னெடுக்க கூடியவர்களாக நாம் மாறிட வேண்டும்.

 அகிலத்தின் நன்மைக்காக அத்தனை இடர்களையும் ஏற்றுக்கொண்டு அன்னை மரியா இயேசுவை தன் வயிற்றில் சுமந்து இயேசுவின் தாய்யாக மாறினார். அந்தத் தாய் நமக்கு தந்த இயேசு கிறிஸ்துவால் தான் நாம் அனைவரும் பாவத்தில் இருந்து மீட்கப்பட்டு இன்று நலமான வாழ்வை பரிசாக்கி கொண்டிருக்கிறோம்.

அன்னை மரியாவை போல நமது வாழ்வும் அடுத்தவர்களுக்கு பலன் தரக்கூடிய ஒரு வாழ்வாக மாறிவிட வேண்டும்.  இதுவே அன்னை மரியாவுக்கு பிறந்தநாள் பரிசாக நாம் கொடுக்கின்ற விலைமதிப்பில்லாத பரிசாக அமையும்.
எந்த ஒரு தாயும் தன் பிள்ளையின் நல்வாழ்வையும், நல் குணத்தையும் கண்டு மகிழ கூடியவளாக தான் இருப்பாள். நம் தாயான அன்னை மரியா நம்மை குறித்து மகிழ வேண்டுமாயின் நாம்  பொன்னோ, பொருளோ பரிசாக கொடுப்பதை விட இனி வருகின்ற நாட்களில் எல்லாம் நாமும் அன்னை மரியாவை போல அடுத்தவர் நலனில் அக்கறை காட்டக் கூடிய நல்லதொரு பிள்ளைகளாக வாழ்ந்து காட்டுவோம் என்ற ஒரு உறுதிப்பாட்டை உள்ளத்தில் ஏற்போம்.  வெறும் உறுதியாக மட்டும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மேற்கொண்ட உறுதிப்பாட்டை செயலாக்க  முயல்வோம். அந்தச் செயல்தான் அன்னை மரியாவுக்கு நாம் அளிக்கும் மதிப்பில்லா பரிசாகும். 

 வாருங்கள் நம் தாய் அன்னை மரியாவுக்கு பிறந்தநாள் பரிசை கொடுத்து மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...