வெள்ளி, 10 செப்டம்பர், 2021

செயல்களே ஒருவரை அடையாளம் காட்டுகின்றன...(11.9.2021)

செயல்களே ஒருவரை அடையாளம் காட்டுகின்றன.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இன்றைய முதல் வாசகம், நற்செய்தி வாசகம் நாம் நமது செயல்களால் இந்த சமூகத்தில் அறியப்பட வேண்டும் என்ற செய்தியினை நமக்கு வழங்குகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் தன் நிலையை உணர்ந்தவராய், தன்னை இறைவன் ஏற்றுக் கொண்டார், அவருக்கு முன் மாதிரியான ஒரு பணியாளனாக தான் விளங்க வேண்டும், என்பதற்காக இறைவன் தனக்கு செய்தருளிய அனைத்து விதமான நன்மைகளையும் எண்ணிப்பார்த்து, கடவுளுக்கு திருத்தூதர் பவுல் நன்றி தெரிவிக்கின்ரார் என்று முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம்.

பவுலை போலவே ஒவ்வொருவரும் முன்மாதிரிகளாக திகழ்வதற்கு இறைவன் அழைக்கின்றார். நாம் முன்மாதிரிகளாக வேண்டுமென்றால் நமது செயல்கள்தான் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். 
எப்படி ஒவ்வொரு மரமும் அதன் கனியால் அறியப்படுகிறதோ அதுபோல ஒவ்வொரு மனிதனும் அவனது செயல்களை குறித்தே இந்த சமூகத்தில் அடையாளம் காட்டப்படுகிறார்கள்.
நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில் நலமான நல்ல பணிகளை முன்னெடுக்க கூடிய இயேசுவின் பணியாளர்களாக நாம் மாறிட வேண்டும்.  அவ்வாறு நாம் இருப்போம் என்றால் நாம் பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டை போல நிலைத்து நிற்க முடியும். நமது அடித்தளமானது ஆண்டவர் இயேசுவில் உறுதியாய் அடித்தளம் இடப்பட்டிருக்கும். 

ஆண்டவர் இயேசுவின் மீது அடித்தளம் இடப்பட்டவர்களால் இந்த சமூகத்தில் நாம் வலம் வரவேண்டும் என்பது தான் இறைவன் விரும்பக் கூடிய ஒன்றாகும். அதற்கு நாம் நமது செயல்கள் மூலமாக நாம் ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் என்பதை வெளிக்காட்டக் கூடிய முன்மாதிரிகளாக மாறிட வேண்டும் என இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.  இறைவனின் அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் இந்த சமூகத்தில் பவுலைப் போல முன்மாதிரிகளாக திகழ இறை அருளை வேண்டுவோம். 
நமது செயல்கள் நம்மை ஆண்டவரின் சீடர்கள் என வெளிக்காட்டட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...