சனி, 11 செப்டம்பர், 2021

ஏன் கேட்டார் நான் யார் என்று?(12.9.2021)

ஏன் கேட்டார் நான் யார் என்று?

இறைவன் இயேசுவின் அன்புக்குரியவர்களை இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
1. நான் யார்? என்று இயேசு பேதுருவிடம் கேட்ட கேள்வி ஏன் என்ற சிந்திக்கவும், 
2. நமது வாழ்வில் எத்தகைய கேள்விகளை நாம் எழுப்ப வேண்டும்,  
3. நாம் பின்பற்றுகின்ற ஆண்டவர்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்ன? 

என்பதை உணரவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்படுகின்றோம்.

1. நான் யார்? என்று இயேசு பேதுருவிடம் கேட்ட கேள்வி ஏன்?

இயேசு தன்னை யார் என மக்கள் கூறுகிறார்கள் என்று தம் சீடர்களை பார்த்து கேட்கிறார். நற்செய்தி ஆசிரியர்களுள் ஒருவரான மாற்கு நற்செய்தியாளர் "இந்த கேள்வியை" கேட்டு தன்னுடைய நற்செய்தியின் மையக்கருத்து என்ன என்பதையும்,  தான் அந்த இயேசுவின் மீது கொண்டிருந்த புரிதலையும் பதிலாக தருகிறார். மெசியா என்பதுதான் மார்க் நற்செய்தியின் மைய சிந்தனையாகும்.

நான் யார்? என்ற இயேசுவின் கேள்வி தன்னைப் பற்றி அறிந்து கொள்வதற்காக என்று நாம் என்னிடலாகாது மாறாக தான் ஆற்றுகின்ற பணியை தன்னுடன் இருப்பவர்கள் எவ்வாறு உணர்ந்து இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான ஒரு முயற்சி என்று கூட நாம் அதனை பார்க்கலாம். 


2. நமது வாழ்வில் எத்தகைய கேள்விகளை நாம் எழுப்ப வேண்டும்?

வாழ்வில் அவ்வப்போது இயேசுவைப் போல நாமும் நாம் செய்கின்ற பணியினையும் கேள்விக்கு உட்படுத்தி சீர்தூக்கிப் பார்த்து நலமான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்பது வாழ்வில் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. நான் செய்வது எல்லாம் சரி என்ற மன நிலையோடு நாம் தொடர்ந்துகொண்டே இருக்காது அவ்வப்போது நம்மையே நாம் திரும்பி பார்ப்பதும் சுய ஆய்வு செய்வதும் வளர்ச்சியின் உச்சகட்டம் என்பதை உணர்ந்திட வேண்டிய தருணம் ஆகத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக நாம் நமது செயல்பாடுகளை குறித்து நாமே நமக்கு கேள்விகளை கேட்டு தெளிவான பாதையில் இலக்கை நோக்கி இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.

3. நாம் பின்பற்றுகின்ற ஆண்டவர்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்ன

 

செயலில் இல்லாத நம்பிக்கை செத்த நம்பிக்கை.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவருக்கு துன்பம் தேவையில்லை என்று கூறக்கூடிய பேதுருவை இயேசு கடிந்து கொள்கிறார். ஏனெனில் அது மனிதருக்குரிய இயல்பாக பார்க்கப்படுகிறது. துன்பமும் கலந்த இந்த மனித வாழ்வில் இரண்டையும் ஏற்றுக் கொண்டு பயணம் செய்வது என்பது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. வாழ்வில் இன்பம் மட்டுமே எனக்கு வேண்டும் என்ற மனநிலையோடு நாம் பயணிப்போம் என்றால் அது ஒரு நிலையான மன நிறைவையும் தருகின்ற பாதையாக இருக்காது. இவர் இயேசுவைப் போல அனைத்தையும் ஏற்றுக் கொண்டு இந்த சமூகத்தில் அவரின் உண்மை சீடர்களாக நம்பிக்கையோடு அந்த நம்பிக்கையை செயலில் வழிகாட்டக்கூடிய நல்ல மனிதர்களாக நாம் தொடர்ந்து பயணிக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.

ஆண்டவர் இயேசுவின் ஒவ்வொரு செயல்பாடுகளும் இயேசுவை பற்றி சிந்திக்க வைத்தது. இந்த இயேசுவை பின் தொடரக் கூடிய நாமும் அவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை வார்த்தைகளால் அல்ல செயல்களால் வெளிகாட்ட இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக யாக்கோபு நமக்கு அறிவுறுத்துகிறார்.

வாருங்கள் நம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நாம் என்பதை நமது செயல்களால் இச்சமூகத்தில் வெளிகாட்டுவோம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...