ஆழத்திற்கு செல்ல ஆவிக்குரிய வாழ்வு அவசியம்
ஓய்வு என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது அல்ல ஒன்றல் இருந்து இன்னொரு செய்கைக்கு சென்று மூளையின் பயன்படாத பக்கங்களையும் புழக்கத்திற்கு கொண்டு வருவது என இறையன்பு அவர்கள் கூறுவார்.
நாள் முழுவதும் கடினப்பட்டு உழைத்து எந்த ஒரு மீன் பாட்டையும் கண்டிராத சூழ்நிலையில் பேதுரு நம்பிக்கை இழந்து ஓய்வெடுத்த நேரத்தில் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் மீண்டும் கடலுக்குள் சென்று இயேசு கூறிய இடத்தில் வலைவிரித்து பல மீன்களை அள்ளி வந்தார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தருகின்ற செய்தியாக இருக்கிறது.
வாழ்வில் முடங்கி போகின்ற சூழலிலும் கடவுள் நம்மை முடங்கி விடாது பாதுகாப்பார். நம்மை வைத்து நலமான பல நல்ல காரியங்களை இச்சமூகத்தில் செய்வார். அதற்கு நாம் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களாய் நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர கூடியவர்களாய் இருக்க வேண்டும். நம் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கை அதிக படவேண்டும், ஆழப்படப்பட வேண்டுமாயின்... நாம் நம்மை உணர வேண்டும், நம்மை நாம் உணரும்போது தான் நம்முள் உறைந்திருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ள முடியும். இறைவனை அறிந்து கொள்வது தான் ஆவிக்குரிய வாழ்வு என இன்றைய முதல் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. கடவுளின் திருவுளத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள கூடியவர்களாய் இந்த சமூகத்தில் நாம் பயணம் செய்ய இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் அவருக்கு அழைப்பு தருகின்றார்.
நாம் நமது வாழ்வில் கொலோசையர் நகர மக்களைப்போல அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்த அவற்றைச் செய்து அவருக்கு ஏற்புடையவராய் நடந்து கொள்ள வேண்டும.
பிறருக்கு பயன் தரக்கூடிய வகையில் நற்செயல்களைச் செய்து கடவுளைப் பற்றிய அறிவில் நாளும் வளர வேண்டம். வளருகின்ற சூழ்நிலையில் அல்லது நமது குழந்தைகளை இவ்வாறு வளர்கின்ற சூழ்நிலையில் பலவிதமான தடைகளை நாம் சந்திக்க நேரலாம். பல நேரங்களில் ஏமாற்றங்கள் நமக்கு பரிசாக கிடைக்கலாம். எப்படி பேதுரு கடினமாக உழைத்தும் மீன்பாடு எதுவும் கிடைக்காமல் இருந்ததோ அது போல நமக்கும் அதே சூழ்நிலை உருவாகலாம். ஆனால் நம்பிக்கை இழக்காத மனவுறுதியோடு பொறுமையோடும் நாம் கடவுளை நம்பி அனைத்து விதமான நல்ல பணிகளையும் முன்னெடுக்க கூடியவர்களாய் இச்சமூகத்தில் செயல்பட வேண்டும் அவ்வாறு செயலாற்றும் போது இறைவன் தாமே நம்மோடு இருந்து பேதுருவை ஆழத்திற்கு சென்று வலையை வீசும் என வழிநடத்தியது போல நம்மையும் வழிநடத்திக் நலமான நல்ல பணிகளை நம்மை கொண்டு இச்சமூகத்தில் செய்யக்கூடிய உண்மை பணியாளர்களால் நம்மை மாற்றிட துணைபுரிவார்.
ஏசுவின் பாதையில் இணைந்து அவரை போலவே இந்தச் சமூகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டக் கூடிய நல்ல பணியாளர்கள் மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக