இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவரை அன்போடு ஏற்றுக் கொண்டு இன்புற்று வாழவேண்டும் என்ற செய்தியினை இறைவன் இன்றைய நாளில் நமக்குத் தருகின்றார் ஆனால் பல நேரங்களில் பலர் அடுத்தவரை நேசிப்பதை விட நேசிப்பவர்களாக நடிப்பவர்கள் ஆகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட கை சூம்பிய ஒருவரை இயேசு கிறிஸ்து நலன் தர எண்ணியபோது இயேசுவின் செயலில் குற்றம் சாட்ட கூடிய மனிதர்களாய் அவரை கூர்ந்து நோக்கி அவர்கள் தான் அதிகமாக இருந்தார்கள் அவர்களின் உள்ளத்தை அறிந்த இயேசு அவர்களிடம் நல்லதை செய்வதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பிய போது அவர்கள் மௌனத்தையே பதிலாக தந்தார்கள்.
ஆனால் இயேசுகிறிஸ்து அவர்களுக்கு நலமான பணியைச் செய்ய வேண்டும் என்பதை நான் தனது செயலால் வெளி காட்டினார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாமும் ஒவ்வொரு நாளும் கண்ணில் காணக்கூடிய மனிதர்களையும் நம் அருகில் இருக்கக்கூடிய மரபுகளையும் அன்போடு அரவணைத்து அவர்களின் வாழ்வில அக்கரை கொள்ளக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் வாழ்ந்திட அழைக்கப்படுகின்றோம்.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அனைவரையும் ஒன்றாக கருதினர் அனைவரையும் அன்பு செய்தார் அவரை பின்பற்றுகின்ற நாம் எப்போதும் அந்த கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு எல்லா நேரத்திலும் அடுத்தவரை அன்பு செய்யவும் இயேசுவின் சீடர்கள் என்பதை வாழ்வு வழியாக வெளி காட்டவும் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
அன்பால் அனைவரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டுமென்றால் நமது உள்ளம் ஆனது அன்பால் நிரப்பப்பட வேண்டும் இன்றைய முதல் வாசகத்தில் பவுல் நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஊக்கம் பெற்று அன்பால் ஒன்றாக்க வேண்டும் என அழைப்பு தருகின்றார் பவுலின் வார்த்தைகள் நமது வாழ்வில் வெளிப்பட வேண்டும் நமது உள்ளம் ஊக்கம் பெற வேண்டும் என்றால் நமது இதயம் நிரப்பப்பட வேண்டும் அப்போதுதான் நாம் அடுத்தவரை அன்போடு அரவணைத்து ஒன்றாக இச்சமூகத்தில் ஆண்டவரின் சீடர்கள் என்பதை வெளிக்காட்டக் கூடிய மனிதர்களாக வாழ முடியும் பழைய வாழ்வை நாம் பரிசாக இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக