இறைவனுக்கு ஊழியம் புரிகின்ற மனிதர்களாகிட....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று தாய் திரு அவையானது திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவை கொண்டாடுகிறது. மண்ணில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையுமே கடவுள் இந்த உலகத்தை இன்னும் அதிகமாக அன்பு செய்து கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் என்று கூறுவார்கள். மனிதர்களாகிய நாம் இம்மண்ணில் பிறந்ததற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. மனிதர்களாகிய நாம் இந்த மண்ணில் பிறந்து இருக்கிறோம் என்றால் நமது பிறப்பிற்கான காரணத்தைக் கண்டு கொள்ள இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
திருமுழுக்கு யோவானின் பிறப்பு இந்த உலகத்தில் ஆண்டவரின் வழியை ஆயத்தம் செய்வதற்கான ஒரு வாழ்வாக அமைந்தது, பிறப்பாக அமைந்தது. திருமுழுக்கு யோவானின் பிறப்பு ஆண்டவர் இயேசுவுக்கான பாதையை தயாரிக்கின்ற ஒரு வாழ்வாக அமைந்தது. நமது வாழ்வும் ஆண்டவருக்கு பணி புரியக்கூடிய, ஆண்டவரின் மக்களாக ஆண்டவருக்கு ஊழியம் செய்யக் கூடிய மனிதர்களாக இருப்பதற்கான ஒரு வாழ்வாக அமைய இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா தன்னை ஆண்டவரின் ஊழியர் எனக்கூறி பெருமைப்படுகிறார். அவரைப் போல நீங்களும் நானும் பெருமைப்பட கடமைப்பட்டுள்ளோம்.
அது போலவே இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கடவுள் மனிதர்களை பார்த்து பார்த்து படைத்தார்; அனைவரையும் தனது இதயத்திற்கு நெருக்கமானவராக, அன்புக்குரியவர்களாக தேர்ந்தெடுத்தார் என்பதை எடுத்துரைக்கின்றார். இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றக்கூடிய நாம் நமது வாழ்வில் நாம் பிறந்தோம்; வாழ்ந்தோம்; இறந்தோம் என்று நகர்ந்து விடாது, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இறைவனுக்கு உகந்தவர்களாக, இறைவனின் இதயத்திற்கு நெருக்கமான இறைவனுக்கு ஊழியம் புரிகின்ற மனிதர்களாக வாழ இறையருள் வேண்டி தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக