கற்பித்தவற்றை கடைபிடிப்போம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் வழியாக உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகமானது கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் வாழ்வு நிச்சயம் என்பதை எடுத்துரைக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் நாம் நம்மை சரி செய்து கொண்டு மற்றவரை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற சிந்தனையை நமக்கு வழங்குகிறது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் வாழ்ந்த போது பலவற்றை நமக்கு கற்பித்தார். அவர் கற்பித்த அனைத்தையும் நாமும் கற்பிக்கின்ற மனிதர்களாக இருக்கிறோம். ஆனால், அதை பின்பற்றுகின்ற மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் இறைவன் இன்றைய நாளில் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்க்கை பாடமாக உள்ளது. கடவுள் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவர் நமக்கு கற்பித்தவைகளை இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அவர் கற்பித்தவைகளை நாம் பின்பற்றவும், நாம் பின்பற்றுவதை மற்றவருக்கு கற்பிக்கக் கூடிய மனிதர்களாக இருக்கவும் இந்த நாள் நமக்கு அழைப்புத் தருகிறது.
அழைக்கும் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்தவர்களாய், இறைவன் உணர்த்திய பாடங்களை உணர்ந்துகொள்வோம்; இறைவன் கற்பித்தவற்றை கற்றுக்கொள்வோம்; கடைபிடிப்போம்; வாழ்வாக்குவோம். பிறர் வாழ்வாக்க நாம் துணை நிற்க, இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக