உலகிற்கு உப்பாக இருப்பதற்கு இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார். உப்பு உவர்ப்பற்று போனால், அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும் என்றும் இயேசு கூறுகிறார்.
இயேசு என்ன அர்த்தத்தில் இங்கே சொல்கிறார் என சிந்திக்கும் போது? பாலஸ்தீனத்தில் பொதுவாக சாதாரண ஏழை மக்களின் வீடுகளிலும், வீட்டிற்கு வெளியே ஓடுகள் பதித்த அடுப்புகள் காணப்படும். இந்த அடுப்பில் சூடு இருக்க தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, அடுப்பின் அடியில் ஓட்டிற்கு கீழே உப்பு கொட்டப்பட்டு, அதன் மேல்தான் ஓடுகள் பதிக்கப்படும். ஏனென்றால், உப்பு வெப்பத்தை அதிகநேரம் தக்கவைக்கும் தன்மையுடையது. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த உப்பு, வெப்பத்தை தாங்கும் ஆற்றலை இழந்துவிடும். அப்போது, அது வெளியே எடுக்கப்பட்டு, கொட்டப்படும். இயேசு இந்த பிண்ணனியில், உப்பைப்பற்றிச்சொல்லியிருக்கலாம்.
அதுப்போலவே “மிதிபடும்“ என்கிற வார்த்தை பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களிடையே . யூதநம்பிக்கையை கைவிட்டு, வேறு தெய்வத்தை வணங்கிவிட்டு, மீண்டும் தாய்மதத்திற்கு திரும்பும் யூதர்களுக்கு, மனம்மாறியதற்கு அடையாளமாக, தாய்மதத்திற்கு திரும்பிய யூதர், தொழுகைக்கூடத்தின் நுழைவாயிலில், மக்கள் நுழையும் வாயிலருகில், நெடுஞ்சாண்கிடையாக படுத்துக்கிடக்க வேண்டும். தொழுகைக்கூடத்திற்கு வரும் மக்கள் அவர் மீது மிதித்துச்செல்வர். இதனுடைய பொருள்: நம்பிக்கைக்குரிய வாழ்வை வாழ மறுத்த என்னை தண்டியுங்கள் என்பதாகும். இந்த பிண்ணனியில், இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு பயன்தரக்கூடிய வாழ்க்கை. சாரிபாத்தில் வாழ்ந்த ஏழைக் கைம்பெண் தனக்கும் தன் பிள்ளைக்கும் அடுத்த வேலைக்கு வழியில்லை என்ற நிலையிலும் கூட இறைவாக்கினரின் வார்த்தைகளை இதயத்திலிருந்து அவரின் பசியைப் போக்க முயன்றார் ஆண்டவரும் அவரது வாழ்வில் புதுமை நிகழச் செய்தார் என முதல் வாசகத்தில் நம் வாசிக்க கேட்டோம். மற்றவர்களுக்கு உதவும் நோக்கில் நமது வாழ்வு அமைகிறது என்றால் நமது வாழ்வு மலைமீது உள்ள நகர் போலவும், உப்பாகவும், விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்கு போலவும் பலருக்கு பயன் தரும் இத்தகைய வாழ்வை நமது வாழ்வாக்கி கொள்ள இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் இன்றைய நாளில்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக