கடவுளின் திருவுளத்தை அறிவதே திருச்சட்டம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா உண்மையான தெய்வம் யார்? யாவே இறைவனா? அல்லது பாகால் தெய்வமா? என்ற வகையில் அவர் மெய்யான தெய்வத்தை உணர்ந்து கொள்ள தான் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் நிரூபிக்க முயலுகிறார்கள் அதில் வெற்றியும் கண்கிறார். வரலாற்றின் அடிப்படையில் இந்நிகழ்வு நிகழ்ந்ததா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறது. மதத்தின் பெயரால் பரப்பப்பட்ட பல தப்பறை கொள்கைகளுக்கு கொள்கைகளுக்கு மாற்றாக யாவே இறைவனை வழிபட கூடியவர்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. எனவே தான் உண்மையான இறைவனை நிரூபிக்க அவர்களால் இயன்றது. இன்றும் இந்த நிகழ்வு நிகழ்ந்த இடமாக கார்மேல் மலை அடையாளம் காட்டப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து திரு சட்டத்தை நிறைவேற்றுவதற்காக உலகத்திற்கு வந்ததாக, இயேசு சொல்கிறார்.
திருச்சட்டம் என்பது மோசே வழியாக மக்களுக்கு கொடுக்கப்பட்ட சட்டங்களை குறிக்கும்.
இத்திருச்சட்டம் என்கிற மோசேயின் சட்டத்தினை, கடவுள் கொடுத்திருந்தாலும், அதனுடைய முழுமையான புரிதல், அதனை விளக்கக்கூடிய பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இல்லை. அவர்கள் அதனை தவறாகத்தான் மக்களுக்குப் போதித்தார்கள். அதனுடைய உண்மையான அர்த்தத்தை போதிக்கவில்லை. ஆனால், இயேசு அந்த புரிதலை தனது போதனையின் மூலமாக முழுமைப்படுத்துகிறார். அந்த முழுமையை, உண்மையென பரிசேயர்களாலும், மற்றவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திருச்சட்டம் பற்றிய இயேசுவின் பார்வை... நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து செய்ய வேண்டும். அவரின் திருவுளத்திற்கு ஏற்றதா? என்று ஆராய்ந்து செய்ய வேண்டும்.
இந்த இறைவார்த்தை பகுதி வழியாக இறைவன் இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் அனுதினமும் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயல்களும் இந்த இறைவனின் திருவுளத்திற்க்கு ஏற்ற செயல்களா? என்ற கேள்வியை எழுப்பி பார்க்க நமக்கு அழைப்பு தருகிறது. நமது செயல்கள் அனைத்துமே கடவுளுக்கு ஏற்றது என நாம் எண்ணுகிறோம் என்றால் இறைவனுக்கு தொடர்ந்து நன்றி கூறவும் ஒருவேளை நமது செயல்களில் பல நேரங்களில் கடவுளின் திருவுளம் செயல்படுவது போல இல்லை என்ற எண்ணம் இதயத்தில் உருவாகிறது என்றால் இனி வருகின்ற நாட்களில் கடவுளின் திருவுளம் எது என்பதை அறிந்து செயல்படுகின்ற மனிதர்களாகிட இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம் ....
நமது இதயத்தை எண்ணங்களை ஆய்ந்து அறிகின்ற இறைவன் நம்மை நல் வழி நடத்துவார் எனும் நம்பிக்கையோடு இன்றைய நாளை இனிய நாளாக தூங்குவோம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக