மாற்றத்தின் பாதையை நோக்கி ....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே
இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
இன்றைய முதல் வாசகத்தில் எபேசு நகரில் தனது பணியை முடித்துவிட்டு பவுல் எருசலேம் நோக்கி செல்கிறார் எனவே நகர மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் அவரது உரையின் சாரம்சம் எப்பொழுதும் இணைந்திருப்பதுதான். நான் உங்களுக்குக் கற்பித்த பற்றி குறித்து அதில் பல கற்பனைகளை புகுத்தி குழப்பம் உண்டாக்க கூடிய நபர்கள் உங்களுக்கு மத்தியில் வருவார்கள் ஆனால் நீங்கள் எப்போதும் இணைந்திருங்கள் என்று ஒற்றுமையை குறித்து அவர்களோடு உரையாடுகிறார் அதேசமயம் தனது எதிர்காலத்தை குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு தந்தையாம் இறைவனிடம் வேண்டுகிறார் அவரின் வேண்டுதலும் ஒற்றுமையை மையப்படுத்தியே அமைகிறது.
ஒற்றுமைதான் பலம் என்பதை இயேசு முழுமையாக அறிந்திருந்தார். எனவேதான் மூன்றாண்டுகளாக பலவிதமான கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த சீடர்களை ஒன்றுபடுத்தி உறுதிபடுத்தி அவர்களுக்குள் இருந்த ஐயங்களை எல்லாம் போக்கி அவர்களை இறையாட்சி பணிக்கு தகுதி உள்ளவர்களாக மாற்றுகின்ற பணியில் ஈடுபட்டார்.
இந்த சீடர்கள் அனைவருமே இயேசுவோடு இருந்தவர்கள் அவர் செய்த புதுமைகளைக் கண்ணால் கண்டவர்கள் அவர் வார்த்தைகளை காதால் கெட்டவர்கள் அவர் செய்த அரும் அடையாளங்களைக் உடனிருந்து பார்த்தவர்கள் ஆனாலும் பல நேரங்களில் மனித இயல்புக்கு ஏற்ப இயேசுவின் மீதான அய்ய நிலையிலே அவர்கள் இருந்தார்கள் ஆனால் இவர்களின் மனநிலை எவ்வாறு இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்ற மனநிலையை இயேசு கொண்டிருந்தார் அந்த மனநிலையை தனது சீடர்கள் மத்தியில் உருவாக்கவும் முற்பட்டார் ... அதன் விளைவுதான் இயேசுவின் விண்ணேற்பு க்கு பிறகு திருஅவையில் பல விதமான கருத்து மோதல்கள் எழுந்து நேரங்களிலெல்லாம் சீண்டல்கள் ஒன்றுகூடி தூய ஆவியாரின் துணையோடு கலந்தாலோசித்து ஒரு மனதோடு ஒற்றுமையாக இருந்து சவால்களை எதிர்கொண்டு சாதனை படைத்த மனிதர்களாக விளங்கினார்கள்.
இன்றைய இந்த இறைவார்த்தை பகுதி நமது வாழ்வுக்கு தருகின்ற வாழ்வுக்கான பாடம் நாமும் ஒற்றுமையோடு இந்த சமூகத்தில் ஒருவர் மற்றவருடன் பயணிக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்துள்ள நாம் சாதி மத இன பாகுபாடுகளையும் கருத்து மோதல்களையும் புறம்தள்ளி ஒன்றுபடுவோம் இயேசுவின் இறையாட்சி மண்ணில் மலர்வதற்கான மாற்றத்தின் பாதையை நோக்கி ....
Nice fr
பதிலளிநீக்கு