ஆவியை கொடுக்கும் வார்த்தைகள்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
ஆண்டவர் இயேசு வாழ்வு தரும் உணவாகிய நற்கருணை பற்றியும், தனது திரு இரத்தத்தை பற்றியும் நம்மேல் அவர் கொண்டிருக்கும் அன்பு பற்றியும் இந்த நாட்களில் நம்மோடு உரையாடிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய வாசகத்தில் ஆண்டவரின் வார்த்தைகளை புரிந்து கொள்ளாத சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் முணுமுணுக்க ஆரம்பிக்கின்றனர்.
ஆண்டவராம் இயேசுவின் இறைத் திருவுளம் எதுவென புரிந்துகொள்ள இயலாமல் தங்களது முணுமுணுப்புகளில் மூழ்கி போனவர்களாய் தமது சுய அறிவை மட்டுமே சார்ந்தவர்களாக இன்று ஆண்டவர் இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள்.
ஆனால்,
உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.
திருப்பாடல்கள் 119:103
என்ற திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகளுக்கேற்ப,
ஆண்டவரின் வார்த்தைகள் ஆவியும் உயிருமாகும். ஆண்டவரின் வார்த்தைகள் நம்பத்நக்கவை என்பதை நம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வோம். ஆண்டவரின் வார்த்தைகள் நமது அன்றாட வாழ்வில் நாம் செல்ல வேண்டிய பாலை நிலப்பயணத்தையும், நாம் மேற்கொள்ள இருக்கின்ற ஒவ்வொரு புதிய காரியத்தையும் ஆண்டவரின் திருப்பாதம் அர்ப்பணிப்போம்.
ஆண்டவரின் திருவுளம் என்ன என்பதை கேட்டு உணர்ந்து கொள்ளக்கூடிய, அதனை மன உறுதியோடு செயல்படுத்தக்
கூடிய இறையருள் வேண்டி இன்றைய திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக