அனைவரும் வாழ்வு பெற!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு தனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் உண்மையில் வாழ்வு பெறுவர் என்கிறார்.
ஆண்டவரது உடலும் இரத்தமும் அனைவருக்கும் வாழ்வு தரும் என்கிறார்.
இன்றைய முதல் வாசகத்திலும் திருச்சபைக்கு எதிராக செயல்பட்டு வந்த பவுல் ஆண்டவர் இயேசுவை சந்தித்த பின்பாக மூன்று நாள் உணவு உண்ணாமல் இருப்பதையும் தான் இழந்து போயிருந்த வாழ்வின் ஒளியை பெற்றுக் கொள்ள ஆண்டவர் இயேசுவை அவர் மீண்டுமாக சந்திக்க வேண்டும் என ஆண்டவருக்காக காத்திருப்பதையும் நாம் வாசிக்கிறோம்.
இன்று ஆண்டவர் இயேசு இந்த உலகில் அனைவருக்கும் வாழ்வு தந்து கொண்டிருக்கிறார். அன்று அவரது உடலையும் இரத்தத்தையும் உணவாக வழங்கிய ஆண்டவர் இன்றும் கூட பல்வேறு நபர்களுக்கு பல்வேறு இடங்களில் பல்வேறு தேவைகளில் நம் ஆண்டவர் இயேசுவை போல நமது உடலையும் இரத்தத்தையும் உணவாக வழங்கிட அழைப்பு தருகின்றார்.
இன்று இரத்த தானம் என்பது உயிரை காக்கின்ற தானமாக இருக்கின்றது. நமது இரத்தம் பல்வேறு நபர்களின் உயிரையும் வாழ்வையும் காப்பாற்ற கூடியதாக இருக்கின்றது. எனவே இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக அவரைப்போல நாமும் தேவையில் இருப்போருக்கு நமது ரத்தத்தை தானமாக வழங்கி வாழ்வு கொடுக்க நல் மனம் கொண்டு இரத்த தானம் வழங்கி பிறருக்கு வாழ்வு தரக் கூடியவர்களாக மாறிட இறையருள் வேண்டி இந்த திருப்பலியில் இணைந்து செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக