வியாழன், 31 ஜூலை, 2025

தளரா மனத்துடன் நன்மைகளை முன்னெடுப்போம்! (7-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இன்றைய வார்த்தையானது ஆண்டவர் இயேசுவின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான பாடத்தை கற்றுக் கொண்டு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து நன்மைகளை செய்த போதும் கூட அவரது உறவுகள் அவரை ஏற்றுக் கொள்ளாத நிலையை சந்தித்தார். பல நேரங்களில் பலவிதமான இன்னல்களையும் இடையூறுகளையும் தன் வாழ்வில் அவர் சந்திக்க நேர்ந்தது. நன்மைகளை மட்டுமே முன்னெடுத்திருந்தாலும் உடன் இருப்பவர்கள் அவரை உணர்ந்து கொள்ளாத சூழலை சந்தித்தார். இது போன்ற சூழலை நாமும் நமது வாழ்வில் சந்திக்க நேரிடலாம். அப்படி சந்திக்கின்ற போதெல்லாம் மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையோடு இயேசுவை மனதில் இருத்தி நன்மைகளை செய்பவர்களாக மட்டும் நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கிறது. மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ளவில்லை என்றாலும் கூட, அவர்களை ஏற்றுக் கொண்டு நம்மால் இயன்ற நன்மைத்தனங்களை தொடர்ந்து முன்னெடுப்பவர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

இன்றே செய்வோம்! (6-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!



 இன்றைய இறைவார்த்தையானது நாம் நமது வாழ்வில் அனுதினமும் பின்பற்ற வேண்டியவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நாம் எப்போதுமே ஆண்டவருக்கு உகந்தவர்களாக இருக்க வேண்டுமாயின் நம் கடமைகளை அவ்வப்போது செய்கின்றவர்களாக இருக்க வேண்டும். இன்று செய்ய வேண்டிய பணிகளை நாளை என்று தள்ளிப் போடுகின்ற ஒரு நிலையை நாம் முற்றிலுமாக தவிர்க்க, பழைய தோற்பையில் புதிய மதுவை ஊற்றுவதை சுட்டிக் காண்பித்து இயேசு நமது வாழ்வில் அன்றன்றைய நாளுக்குரிய கடமைகளை அன்றே முடிப்பதற்கான அழைப்பை கொடுக்கிறார். இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக நம் கடமைகளை ஒவ்வொரு நாளும் சரிவர செய்ய இறைவனிடத்தில் ஆற்றல் வேண்டுவோம். இன்றைய நாளில் இறைவன் நமக்கென கொடுத்து இருக்கின்ற பணிகளை இறைவனின் துணையோடு சிறப்பாக செய்து முடித்திட இறையருள் வேண்டி இணைந்து ஜெபிப்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

நம்பிக்கையற்ற மனம் கடவுளின் செயலைத் தடுத்துவிடும். (1.08.2025)

“புனித நாளில் ஆண்டவரைச் சந்திப்போம்; நம் உள்ளத்தைத் திறப்போம்”


இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் மோசேயை மூலமாக இஸ்ரயேலருக்குக் கொடுக்கின்ற பல விழாக்கள், ஓய்வு நாள்கள் குறித்து பேசுகிறார். இது வெறும் கலாச்சார நிகழ்வுகள் அல்ல, ஒவ்வொன்றும் இறைசந்திப்புக்கான நேரங்கள்.

  • பாஸ்கா, புளிப்பற்ற அப்பப் பண்டிகை, அறுவடைக் கொண்டாட்டங்கள், பாவக் கழுவாய் நாள், கூடாரப் பெருவிழா என ஆண்டுதோறும் மக்களைக் கூடி ஆண்டவரை மகிழ்வோடு வழிபட அழைக்கும் நாட்கள்.
  • இவற்றில் முக்கியமாக “இறைமக்களாய் ஒன்று கூடி ஓய்வு நாளைப் புனிதமாய்க் கடைப்பிடியுங்கள்” என்பது திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது.

🔹 இன்றைய சூழலில் நாம்  ஓய்வு நாளைப் புனிதமாய் கடைப்பிடிக்கிறோமா?
🔹 வாராந்திர திருப்பலிக்கு செல்லும் அந்த நேரத்தை நாம்  ஆண்டவரைச் சந்திக்கும்  நாளாக காண்கிறோமா?

ஓய்வு நாள் என்பது வேலை செய்யாத நாளல்ல;
அது நம்மை நமது ஆண்டவரைச் சந்திக்க அழைக்கும் நாள்.

இன்றைய நற்சொய்தி வாசகத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வருகிறார். அவர்களுக்குள் ஒருவராக வசித்து வளர்ந்த இயேசுவின் வார்த்தைகள், வல்ல செயல்கள் – இவை அவருடைய ஊரார் மனதில் வியப்பை மட்டும் இல்லாமல், நம்பிக்கை குறையை ஏற்படுத்துகின்றன.

  • “இவர் தச்சரின் மகன் அல்லவா?” – என்று பழைய (தந்தையின் தொழிலை அடிப்படையில்)  தகுதியைக் கொண்டு அவரது ஆற்றலை மறுக்கிறார்கள்.
  • இயேசுவின் செயல்கள் அவர்களுக்குத் தெரியும், ஆனால் தற்குப் பின்னிலுள்ள இறைவனின் செயலை அவர்கள் உணரவில்லை.

🔹 நம்முடைய வாழ்க்கையிலும் இறைவன் புதியவிதமாக செயல் படும்போது, நாம் அதை ஏற்க தயங்குகிறோமா?
🔹 பழைய நினைவுகள், பழைய மதிப்பீடுகள், நம் பார்வையை மூடுகிறதா? சிந்திப்போம்....

நம்பிக்கையற்ற மனம் கடவுளின் செயலைத் தடுத்துவிடும்.

எனவே இயேசு சொல்வதுபோல், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர, இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்ற அவல நிலையை நம்முடைய குடும்பத்திலும் சமூகத்திலும் மாற்ற வேண்டியது நம் கடமை.
ஒவ்வொரு திருப்பலியும், ஒவ்வொரு வார இறுதியும் — நம்மை மாற்றும் சந்திப்பாக இயேசுவின் சந்திப்பு  இருக்கட்டும்.

இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...


என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

புதன், 30 ஜூலை, 2025

நாமும் ஒரு திருஉறைவிடம்! (31.07.2025)

நாமும் ஒரு திருஉறைவிடம்!



அன்பான சகோதர சகோதரிகளே,

இன்று நாம் வாசித்த முதல் வாசகத்தில், இறைவனின் மக்கள் எகிப்திலிருந்து விடுதலையடைந்து பாலை நிலத்துக்குப் பயணிக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் அமைந்தது...  ஆண்டவர் கொடுத்த கட்டளையின்படி, மோசே திருஉறைவிடத்தை அமைக்கிறார். அது வெறும் கூடாரம் அல்ல; இறைவனுடன் சந்திப்பு நடைபெறும் இடம். அந்த கூடாரத்தின்மேல் ஆண்டவரின் மாட்சி மேகமாக இறங்கி வருவது, மக்கள் மத்தியில் இறைவன் வாசிக்கிறார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

மேகம் கூடாரத்தை மூடுகிறது – இது இறைவனின் நெருக்கம், ஆனால் அந்த நெருக்கம் ஒருவிதமான மர்மத்தையும் (mystery) கொண்டிருக்கிறது. மோசே கூட உள்ளே நுழைய முடியவில்லை! இறைவன் எப்போதும் நம்மோடு இருப்பவர் – ஆனால் அவ்வபோது நாம் அவரை முழுமையாக உணர முடியாமல் போவதுபோல் – அந்த மேகம் நம்மை மறைக்கும்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பயணிக்கும்போது கூட, ஆண்டவர் நம்மை வழிநடத்துவதை மறக்கக்கூடாது. இஸ்ரயேல் மக்கள் மேகம் எழும்பும் போதுதான் பயணிக்கிறார்கள்; அது எழாமலிருந்தால் நிலைத்திருக்கிறார்கள். நம் வாழ்க்கையிலும் ஆண்டவர் வழிகாட்டும் காலம் வரும்; காத்திருக்க வேண்டிய நேரமும் வரும்.


இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் உவமை வழியாக...வலை கடலில் வீசப்படுகிறது – எல்லா மீன்களும் அதில் வந்து விழுகின்றன. பிறகு நல்லவை தனியாக வைக்கப்படுகின்றன; கெட்டவை வெளியே எறியப்படுகின்றன.

இது நம்மை இரு நிலைகளிலும் சிந்திக்க வைக்கிறது:

  1. நாம் நல்ல மீன்களா? அல்லது தீயவைகளா?
  2. நாம் கடலான உலகில் வாழும் போது மற்றவர்களை இழுத்துக்கொண்டு வருகிறவைகளா? அல்லது வெளியே தள்ளுகிறவைகளா?

நாமும் ஒரு திருஉறைவிடம்!
அன்புள்ளவர்களே, பழைய உடன்படிக்கை பரிசுத்த கூடாரத்தில் ஆண்டவர் வாசிக்கிறார். இன்று நமக்கு இயேசுவின் மூலம் புதிய உடன்படிக்கையின் பேரில், நாம் ஒவ்வொருவரும் இறைவனின் உறைவிடமாகவே இருக்க அழைக்கப்படுகிறோம் (1 கொரிந்தியர் 6:19).

எனவே

  • ஆண்டவரின் மேகத்திற்குக் கீழாக அமைதியாக காத்திருப்போம்
  • அவர் எழும்பும் பொழுது நாமும் பயணிக்கத் துணிவோம்
  • இயேசுவின் இரண்டாம் வருகையில் , நாம் நல்ல மீன்களாய் தேர்வு செய்யப்பட நம்மை தயார் படுத்துவோம்.

இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...


என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறை மாவட்டம் 

செவ்வாய், 29 ஜூலை, 2025

இறை அனுபவம் உங்கள் வாழ்வை மாற்றும் (30.7.2025)

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,


இன்றைய வாசகங்கள் இறை அனுபவம் ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றுகிறது. என்பதை நமக்கு உணர்த்துகிறது ...

முதல் வாசகத்தில், மோசே சீனாய் மலையில் கடவுளோடு நேரில் பேசினார். அந்த சந்திப்பில் அவர் முகம் ஒளிமயமாக மாறியது. ஆனால் மோசேக்கே அது தெரியவில்லை! கடவுளின் ஒளி அவரை மேம்படுத்தியது, மாற்றியது, ஆனால்  மற்றவர்கள் அதை பார்த்து அச்சமடைந்தனர்.
இது நமக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை கற்று தருகிறது ....
நாம் எவ்வளவு நேரம் இறைவனுடன் செலவழிக்கிறோமோ, அவ்வளவு நம்முடைய வாழ்க்கையில்  மாற்றங்கள் நிகழ்கிறது எனவே, நம்மால் மற்றவர்களின் வாழ்வில் ஒளியூட்ட முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு இரு சிறிய உருவகங்களை கொடுக்கிறார்:

  1. நிலத்தில் புதையல் கண்டவர்.
  2. விலை உயர்ந்த முத்தை கண்ட வணிகர்.

இருவரும் ஒரே செயலையே செய்கிறார்கள்: தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த ஒரு பொக்கிஷத்திற்காக தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள். அல்லது தங்களிடம் இருப்பதையெல்லாம் இழக்கத் துணிந்து அந்த பொக்கிஷத்தை தமதாக்கிக் கொள்கிறார்கள். 
அவர்கள் வாழ்க்கையின் மையமும் மாறுகிறது.

இறை அனுபவத்தின் வெளிப்பாடும் இதுவே:

  • மோசே, கடவுளின் அருகாமையை அனுபவித்ததால், அவரின் உடலும் முகமும் ஒளிர்ந்தது.
  • நற்செய்தியின் கதாபாத்திரங்கள், விண்ணரசின் மதிப்பை உணர்ந்ததால், தங்களுடைய பழைய வாழ்வை விட்டுவிட்டு புதிய ஒன்றைப் பிடித்தனர்.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தருகின்ற அழைப்பாக கீழ்க்கண்ட கேள்விகளை இதயத்தில் எழுப்பி சிந்திக்கலாம் ....

  • நாம் இறைவனுடன் நேரம் செலவழிக்கிறோமா?
  • இறைவனது  வார்த்தையை நம் இதயத்தில் புதையல் போல் மதிக்கிறோமா?
  • இறைவனுக்காக  எதை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்?

நிறைவாக, இந்த நாள் நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் எதை முதன்மைப்படுத்துகிறோம் என்பதை சிந்திப்போம்...

அன்புள்ள சகோதர, சகோதரியே,
விண்ணரசு ஒரு விலை உயர்ந்த புதையல். அதை நம்முடைய வாழ்க்கையில் பெற, நாம் இறைவனோடு  ஆழமான  உறவை கட்டியெழுப்புவோம். அப்போது மோசேபோல் நாமும் ஒளியூட்டும் மனிதர்களாக இருப்போம்!

இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...


என்றும் அன்புடன் 

அருள்பணி. ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

திங்கள், 28 ஜூலை, 2025

தூய மார்த்தாவின் விழா (28.7.2025)

தூய மார்த்தாவின் விழா 

வாழ்வில் நம்பிக்கை மாபெரும் முத்து!


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
இன்றைய நாள் நமக்கு மிகச் சிறப்பான நாளாகும். ஏனெனில், இன்றைய நாள், இயேசுவின் அன்பு தோழியரான தூய மார்த்தாவின் விழா தினம். இவர் மூலம் நமக்கு ஒரு அழகான வாழ்வின் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

1. நம் வாழ்க்கையில் இறைவனுக்கு முதன்மை கொடுக்கவேண்டும்

மார்த்தா இயேசுவை தனது வீட்டில் வரவேற்கிறார். அவருக்காக விருந்துப் பரிமாற, பரபரப்புடன் அலைகிறார். ஆனால் இயேசு கூறுகிறார்: "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே."
அந்த "ஒன்று"  — இறைவனோடு நேரம் செலவிடுதல் ஆகும்.
இன்றைய உலகில் நாமும் பல காரியங்களில் குழப்பமடைகிறோம். ஆனால் இறைவனுக்காக நேரம் ஒதுக்கினாலே நம் வாழ்வில் குழப்பங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும் .

2. அசையா நம்பிக்கை கொண்ட மார்த்தா

இரண்டாவது வாசகத்தில், லாசர் இறந்த பிறகு மார்த்தா சொல்கிரார்
"ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்."
அதே நேரத்தில், “நீரே மெசியா! நீரே இறைமகன்!” என்கிறார். இது மிகப்பெரிய நம்பிக்கையின் அறிக்கை.
நமக்கு சந்தேகங்கள் வரும். அச்சமும் வரலாம். ஆனால், தூய மார்த்தாவைப் போன்று நம்முடைய நம்பிக்கையை நிலைத்திருக்க வேண்டும். இயேசு சொல்கிறார் "நம்புகிறவருக்கு எல்லாம் கூடும்."

3. விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்

தூய மார்த்தா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விருந்தோம்பலில் ஈடுபட்டார்.
இது ஒரு பெரிய தூய பணியாகவே திருச்சபை மதிக்கிறது.
இன்றைய நம் சமூகத்திலும், பலர் பட்டினியோடு இருக்கிறார்கள். நாம் உணவோடு மட்டுமல்ல, அன்புடன், கருணையுடன் மற்றவர்களை வரவேற்க வேண்டும். இதையும் மார்த்தாவிடமிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம். 

4. மார்த்தாவின் இறுதி வாழ்க்கை — சாட்சி

 மார்த்தா, இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பின்பு, பிரான்சில் உலா வந்து நற்செய்தியைப் பறைசாற்றினார் . குழப்பங்களில் வாழ்ந்த மக்களைக் காப்பாற்றினார். ஆண்டவர் இயேசுவைப் பற்றி ஐயம் கொள்ளுகிற மக்களின் நம்பிக்கைக்கு பதில் அளித்தார். இறுதியில் ஒரு துறவற அவையை நிறுவி, அங்கே தான் இறைவனுக்காக தன் வாழ்நாள் இறுதியில்   வாழ்ந்தார்.

5. மார்த்தாவிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை...

  • நம் வாழ்வில் இறைவனுக்கே முதன்மை கொடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் நம்பிக்கையில் நிலைத்திருக்க வேண்டும்.
  • இயன்றவரை அன்போடு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
  • நம் வீடுகள் , இயேசுவை வரவேற்க எந்நாளும் ஆயத்தமாக இருக்க  வேண்டும்.

எனவே சகோதர சகோதரிகளே  
தூய மார்த்தாவின் வாழ்வு மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டியது:

இறைவனில் நம்பிக்கை வைத்துப் வாழும் வாழ்க்கை மட்டுமே வெற்றியான வாழ்க்கை.”

இன்றைய இந்த விழா நாளில், நாமும் தூய மார்த்தாவைப் போன்று நாளும் ஆண்டவர் இயேசுவை நம் உள்ளம் என்னும் வீட்டில் எதிர்நோக்கியவர்களாக இறைவனுக்கு உகந்த வகையில் வாழ இறையருள் வேண்டுவோம்... இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.... 


ஞாயிறு, 27 ஜூலை, 2025

நம்பிக்கையில் வேரூன்றும் வாழ்க்கை... (28.7.2025)

நம்பிக்கையில் வேரூன்றும் வாழ்க்கை


அன்பு சகோதரர்களே மற்றும் சகோதரிகளே,

இன்றைய முதல் வாசகத்தில் நாம்  மோசே மலைமேல் கடவுளோடு நேரில் உரையாடிக்கொண்டிருக்கும் போது, கீழே மக்கள் பொன்னால் உருவாக்கிய கன்றுக்குட்டியைத் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். இவர்கள் கடவுள் செய்த நன்மையை மறந்து , தங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டதை க் காண்கிறோம். இங்கே கடவுளோடு உரையாட மலை மேல் ஏறிய மோசேவின்  தாமதத்தை ஏற்க முடியாமை, மனவெறுப்பு, மற்றும் நம்பிக்கையின்மையின் விளைவாக ஒரு பெரும்  பாவச் செயலை செய்கின்றனர்.

காத்து வந்த கடவுளை மறந்து தன் மனம் போன போக்கில்உருவங்களை வடித்து தெய்வங்கள் என கருதினார்கள்...

நாம் கடவுளுக்காக காத்திருக்கத் தெரியவில்லையென்றால், நமது இருதயம் எதை தெய்வமாக மாற்றிக் கொள்கிறது?

என சிந்திப்போம் , நாமும் சிக்கல்கள் வந்தால் தீர்வுக்காக கடவுளை நோக்காமல் உடனடி பதில்களைத் தேடி, பாவ வழிகளில் நம்மை செலுத்திக் கொள்கிறோமா? சிந்திக்கவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. 

நம்மோடு இருப்பவர்கள் தவறு இழைக்கின்ற போது மோசே செய்த செய்த செயல் நம் செயலாக மாறிட வேண்டும்....
அவர் பாவத்தை மன்னிக்குமாறு ஆண்டவரை நோக்கி மன்றாடுகிறார்.... செய்த தவறை மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி உறவுகளைப் பிரித்துக் கொண்டு வாழ்வதை நிறுத்தி தவறிழைத்தவர்கள் மனம் மாறிட இறைவனிடத்தில் இறைவேதலை முன்னெடுக்கின்ற நபர்களாக தவறிய நபர்களுக்காக வரைந்து பேசுகின்ற நபர்களாக நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்தவே ஓசையின் வாழ்வு நமக்கு அழைப்பு தருகிறது. 

இதை மையப்படுத்தியே என்ற இனச் செய்தி வாசகமும் அமைகிறது இயேசு கூறும் கடுகு விதை உவமை நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது:

கடுகு விதை மிகச் சிறியது. ஆனால் அது வளரும்போது பெரிய மரமாகிறது.

அது வளரவேண்டுமானால், அது நிலத்தில் விதைக்கப்பட வேண்டும்.
அது மழையையும், வெயிலையும், பொறுமையையும் கடக்க வேண்டும்.
அதனால்தான் அது உயரே வளர முடியும்... அதில்  வானத்தின் பறவைகள் தங்கக் கூடியதாக மாற முடியும் 

அதைப்போலவே, நம் நம்பிக்கை வாழ்க்கையும் தொடக்கத்தில் மிகச் சிறியதாகத் தோன்றலாம். ஆனால், நாம் அதை வளர்த்தால், அது மற்றவர்களுக்கு நிழலும், தங்கும் இடமுமான நற்பணி மரமாக மாறும்.  அதுபோலவே நமது சின்னஞ்சிறிய செயல் மிகப்பெரிய தாக்கத்தை இந்த சமூகத்தில் உருவாக்கும் என நம்பிக்கை கொள்வோம்.  இத்தகைய ஆழமான நம்பிக்கையோடு ஆண்டவர் நம் குரலுக்கு செவி கொடுப்பார் என்ற உறுதியோடு காத்திருக்க நாம் பழகிட வேண்டும். 

எனவே அன்பு சகோதரமே...மோசே போல பாவத்திற்குள் விழும் மக்களுக்காக இறைவனை நாளும் நாடுவோம் .
கடுகு விதையைப் போல காத்திருந்து  நம் நம்பிக்கையை நிலைத்திருக்க செய்வோம்...
புளிப்பு மாவைப் போல நம் வாழ்வால் மற்றவர்களும் இறைநம்பிக்கையில் மாற்றம் அடையட்டும்.

என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறைமாவட்டம் .

சனி, 26 ஜூலை, 2025

இறைவன் நீதி உடையவரும் இரக்கம் உடையவரும் ஆவார் (27.7.2025)

இறைவன் நீதி உடையவரும் இரக்கம் உடையவரும் ஆவார்

அன்பான சகோதரர் சகோதரிகளே,

இன்றைய வாசகங்கள் அனைத்திலும் நாம் காணும் முக்கியமான ஒரு உண்மை 
நம் இறைவன் நீதி உடையவரும், இரக்கம் மிகுந்தவரும் ஆவார்.

🕊️ 1. ஆபிரகாமின் மன்னிப்புக்கான வேண்டுகோள் (தொடக்க நூல் 18:20-32):

ஆபிரகாம், ஒரு நடுவனாகவே இருந்து, சோதோம் நகரை நோக்கி இறைவனிடம் வேண்டுகிறதை நாம் பார்கிறோம்.
"ஐம்பது நீதிமான்கள் இருந்தால் காப்பாற்றுவீரா?" என்று ஆரம்பித்து, "பத்துப் பேர் இருந்தாலும்?" என்று இறுதி வரை இறைவனிடம் பேசிக்கொள்கிறார்.
இது நமக்கு ஒரு முக்கிய பாடத்தை தருகிறது:

  • நாம் இறைவனிடம் விடாமுயற்சி உடன் வேண்ட வேண்டும்.
  • நீதிமான்களின் ஜெபத்தால்  ஒரு சமூகம்கூட பாதுகாக்கப்படுகிறது.

✝️ 2. பவுலின் கல்வி – குற்றங்களை மன்னிக்கின்ற இறைவன் (கொலோசையர் 2:12-14):


சிலுவையில் இயேசு நம் பாவங்களை அழித்தார்....

  • நம்மை மறுக்காமல், மன்னிக்கின்ற இரக்கமுள்ள கடவுளைக் காட்டுகிறது.
  • நாம் புதிய மனிதராக வாழ அழைக்கப்படுகிறோம்.
  • நம்மிடம் எதிர்மறை நினைவுகள் இருந்தாலும், இறைவன் நம்மை தாயின் கரம் போல திரும்பிப் பார்க்கிறார்.

🙏 3. இயேசு கற்றுத்தந்த ஜெபம் (லூக்கா 11:1-13):

நம்முடைய இறைவன் ஒரு தந்தை என்று இயேசு நமக்கு உணர்த்துகிறார்.
அவர் கற்றுத்தந்த ஜெபம் – "தந்தையே…" என்றழைக்கும் அந்த தொடக்கமே, நம்மை உற்சாகமடையச் செய்கிறது.

  • நம் தேவைகள் அனைத்திற்கும் வேண்டலாம்.
  • நம்மை சோதனையில் இரக்க வேண்டாம் என்று வேண்டலாம்.
  • நம்முடைய உறுதியான வேண்டுகோள்களால், அவர் நிச்சயமாக பதிலளிக்கிறார்.

"தட்டுங்கள் – திறக்கப்படும்" என்பது மனப்பூர்வமான ஜெபத்தின் வலிமையை உணர்த்துகிறது.

  • கடவுள் ஒருபோதும் கேட்கும் ஜெபங்களை மறுக்காதவர்.
  • ஒரு நபரின் நீதியும், அந்த சமூகத்துக்கே வாழ்வை தர முடியும் (ஆபிரகாம்).
  • நம் பாவங்களை மன்னித்து, நம்மை புதிய வாழ்க்கைக்கு அழைப்பவர் (பவுலின் வார்த்தைகள்).
  • அன்பும் இரக்கமும் நிறைந்த ஒரு தந்தையாக நம்மை செவிமடுக்கிறவர் (இயேசுவின் போதனை).

அன்பின் சகோதரர்களே,
இன்றைய வாசகங்கள் நம்மை ஆழமான ஒரு உண்மையுடன் சந்திக்க அழைக்கின்றன:
நாம் ஒரு இரக்கமிக்க, நீதி உடைய, பதிலளிக்கும் இறைவனை கொண்டுள்ளோம்.
நாம் செய்யவேண்டியது – நம்பிக்கையோடும், இரக்கத்தோடும், உண்மையோடும் அவரிடம் ஜெபிக்கிறதுதான்.

இயேசு சொன்னார்:

"விண்ணகத் தந்தை, தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!"

நாமும் கேட்போம். நிச்சயமாக நமக்கும் தூய ஆவி தரப்படும்.

ஆமென்.


வியாழன், 24 ஜூலை, 2025

“உடன்படிக்கையில் நிலைத்திருக்க ...”(26.7.2025)

 “உடன்படிக்கையில் நிலைத்திருக்க ...”

 தூய ஜோக்கிம் மற்றும் அன்னம்மாள்

அன்புடைய சகோதர சகோதரிகளே,
இன்றைய நற்செய்திப் வாசகங்களும், இன்று திரு அவை நினைவு கூறுகின்ற  தூய ஜோக்கிம் மற்றும் அன்னம்மாள் தம்பதியர் வாழ்வும் ஆண்டவரோடு ஒன்று இருக்கின்ற உடன்படிக்கையில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுகிறது ...

உடன்படிக்கையின் வழியாக  – கடவுளுடன் ஒரு உறவு

மோசே, மக்கள் மற்றும் கடவுளுக்கு இடையில் ஏற்படுத்தும் உடன்படிக்கையில், இரத்தம் ஒரு புனிதமான அடையாளமாக உள்ளது.

  • இது கடவுளுடன் ஏற்படுத்தப்படும் உறவைச் சான்றுப்பெறும் ஒரு பிணைப்பு.
  • மக்கள், “ஆண்டவர் சொன்னதை நாங்கள் செய்வோம்” என்று ஒப்புக் கொள்கின்றனர்.
  • மோசே, “இந்த இரத்தம் ஆண்டவர் உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம்” என்று உறுதி செய்கிறார்.

இன்றைய நம் வாழ்விலும், நாம் கடவுளோடு உடன்படிக்கை செய்து வாழ்கிறோமா?

பல நேரங்களில் பல விதமான உடன்படிக்கைகளை நாம் கடவுளோடு செய்வது உண்டு ஆனால் கடவுளின் முன்னிலையில் நாம் செய்கிற உடன்படிக்கையில் எந்த அளவிற்கு நிலை திருக்குறள் என்பதுதான் இந்த நாளில் நாம் நமக்குள் எழுதி பார்க்க வேண்டிய கேள்வியாக இருக்கிறது ...  நீ எதை செய்தால் நான் அதை செய்வேன் என்ற மனநிலையில் இருந்து மாறுபட்டவர்களாய் இறைவனோடு இணைப்பில் இருக்க நாம் இதயத்தில் உறுதி ஏற்போம்.... இதை மையப்படுத்தியே இன்றைய நற்செய்தி வாசகத்தையும் நாம் உற்று நோக்க கடமைப்பட்டிருக்கிறோம் ... 

🌾அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள்

இயேசு எடுத்துரைக்கும் நல்ல நிலத்தில் விளைந்த  கலைகள் உவமை – நம் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நம்மைச் சூழ்ந்துள்ள சூழ்நிலையையும் எடுத்துக் கூறுகிறது.

  • நம் வாழ்வில் நம்மை சோதிக்கவும் சலிப்படையவும் பின்னடையவும் செய்கின்றன  “களைகள்” – நம் வாழ்வில்எல்லா நிலைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன.
  • ஆனால் கடவுள் நமக்காக திட்டமிட்டுள்ள அறுவடை நாள் வரும் வரை துணிவுடன் வாழ அழைக்கப்படுகிறோம்.

இந்த இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு எடுத்து உரைப்பது

  • தாமதமாக இருந்தாலும், நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம்.
  • நம்மை துன்புறுத்துவோருக்கு பதில் துன்பத்தை தராமல்  இரக்கம் கொள்ள வேண்டும். 
  •  நம்மை அறுவடைக்குத் தயார்படுத்தும் கடவுளின் கருணை முகமாக நாம் செயல்கள் அமைந்திட வேண்டும். அதற்கான உடன்படிக்கையை இறைவனோடு என்னாளும் செய்யக்கூடியவர்களாகவும் அதில் நிலைத்திருப்பவர்களாகவும் நம் வாழ்வை நாம் நெறிப்படுத்த வேண்டும். 

 தூய ஜோக்கிம் மற்றும் அன்னம்மாள் – நம்பிக்கையின் நாயகர்கள்

அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், விரக்தி, எதிர்பார்ப்பு, ஜெபம், அர்ப்பணிப்பு என்பவை இடம்பெற்றுள்ளன என்பதை அவர்களின் வாழ்வு மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். 

  • குழந்தையற்ற துக்கம் – பல ஆண்டுகள், ஆனாலும் ...
  • நம்பிக்கையை இழக்காத ஜெபம் இவர்களிடத்தில் இருந்தது. 
  • இறுதியில், கடவுளின் கருணையால் வானதூதரின் வழிகாட்டுதலோடு அன்னை மரியாள் இவர்களிடத்தில் பிறக்கிறார்.
  • காத்திருந்து கடவுளின் அருளால் பெற்றுக் கொண்ட மரியாவை  கோவிலில் அர்ப்பணிப்பு செய்வது இவர்கள் கடவுளோடு வந்த உடன்படிக்கையை உணர்த்துகிறது.  

இன்று நினைவு கூறப்படுகின்ற இவர்களின் வாழ்வு இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் ...

  • நம்முடைய குடும்ப உறவுகளை, நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? மேலும்  அர்ப்பணம் உணர்வோடு அவர்களோடு இணைந்து ஆண்டவருக்கு உகந்த பாதையில் பயணிக்கின்றோம்?  
  • இறைவன் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகிய குழந்தைகளை எப்படி இறைவனுக்குரிய பாதையில் ஒவ்வொரு நாளும் நாம் வழி நடத்துகிறோம்?  
  • ஆண்டவர் இயேசுவை அறிந்தவராக நம் மத்தியில் நம் குடும்பங்களில் வாழுகிற முதியவர்களை நாம் எப்படி பராமரிக்கிறோம்?
சிந்தனைகளுக்காக அல்ல நாம் செயல்பாடு மாற்றம் பெற வேண்டும் என்பதன் அடிப்படையில் இக்கேள்விகளை நமக்குள் எழுப்பி பார்த்து நம்முள் நல்லதொரு மாற்றத்தை விதைத்துக் கொண்டு தாத்தா பாட்டிகளின் பாதுகாவலராக இருக்கின்ற புனித சுவக்கின் அன்னாளை நினைவு கூறுகிற இந்த நன்நாளில் நாமும் நம் மத்தியில் இருக்கின்ற முதியவர்களை பேணி பாதுகாப்போம் என்ற உடன்படிக்கையை இறைவனின் முன்னிலையில் ஏற்படுத்திக் கொண்டு அந்த உடன்படிக்கையில் நிலைத்திருக்க இறையருள் வேண்டுவோம் ... ஆயிரக்கணக்கான இடர்பாடுகள் நம் மத்தியில் இருந்தாலும் அனைத்தையும் உற்று நோக்குகிற இறைவன் நாம் செய்கிற நன்மைத்தனங்களின் நிமிர்தமாக நமக்கு ஆசிகளை வழங்குவார்

என்றும் அன்புடன் 
அருள்பணி ஜே. சகாயராஜ் 
திருச்சி மறையமாவட்டம் 


செவ்வாய், 22 ஜூலை, 2025

திருத்தூதர் யாக்கோபு விழா... (25.7.2025)

 திருத்தூதர் யாக்கோபு விழாo

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே!


இன்று நாம் திருத்தூதரான தூய யாக்கோபுவின் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இயேசுவின் நெருங்கிய சீடர்களுள் ஒருவராக விளங்கிய தூய யாக்கோபு, நம் இறைவனுக்கும் நமக்கும ஓர் இணைப்பு பாலமாக இருக்கின்றார். அவருடைய வாழ்வின் இரண்டு முக்கியமான அம்சங்களை நாம் இன்றைய வாசகங்களின் அடிப்படையல் நம்முடைய வாழ்க்கையிலும் பிரதிபலிக்க அழைக்கப்படுகிறோம்.

1. இயேசுவுக்காக துன்பங்களை ஏற்கும் மனபான்மை

இன்றைய முதலாவது வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்:

"இயேசுவின் சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்."
நாம் வாழும் வாழ்க்கையில் துன்பங்கள், சவால்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் ஒரு கிறிஸ்துவராக, நாம் இவை அனைத்தையும் இயேசுவுக்காக ஒப்புக்கொள்கிறோமா?

தூய யாக்கோபு, இயேசு கேட்ட “நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் நீங்கள் குடிக்க இயலுமா?” என்ற கேள்விக்கு “ஆம்” என்று துணிந்து பதிலளித்தார். அந்த “ஆம்” என்பது வெறும் வார்த்தை அல்ல, தன் உயிர் துறத்தலின் வழியாக அவர் அதை நிறைவேற்றி காட்டினார். இவரே மறைசாட்சியாக உயிர்நீத்த முதல் திருத்தூதர்.

2. சவால்கள் வந்த போதும் நம்பிக்கையைத் தழுவும் மன உறுதி

தூய யாக்கோபு ஆரம்பத்தில் ஒரு உணர்ச்சிவயப்பட்ட, சினம் கொள்ளும் மனிதராக இருந்தாலும், இயேசுவின் பயிற்சியிலும் மரியன்னையின் வழிகாட்டலாலும்  அவர் மன உறுதி பெற்று, துன்பங்களைக் கடந்து நற்செய்தி அறிவிப்பில் அர்ப்பணமாகி, சாட்சியாக உயர்ந்தார்.

இன்று நாமும் நம்மை நோக்கிக் கேட்கவேண்டும்:

  • சவால்கள் வந்தபோது மனம் சோர்வடைகின்றோமா ?
  • அல்லது தூய யாக்கோபைப் போல இறைவனின் துணையோடு அதை எதிர்கொண்டு  வருகிறோமா?

நம்மைத் தடுக்கும் எல்லா மனித முயற்சிகளையும்  கடந்து, இறைச்செயலை மேற்கொள்வது தூய யாக்கோபின் பணி மூலம் நமக்குப் உணர்த்தப்படுகின்ற வாழ்வுக்கான பாடம்.

3. தன்னலமின்றி இறைவனுக்காக வாழும் வாழ்க்கை

தூய யாக்கோபு, தான் வாழ்ந்த உலகில் தன் நற்செய்தி அறிவிப்பு பணியால் உலகை மாற்ற இயேசுவுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தார். நம்மும் இப்படித் தான், நம்முடைய வாழ்க்கையைத் தனக்கென அல்ல, இயேசுவுக்கென வாழும்போது, நிச்சயமாக இறைவனின் அருளும் ஆசிகளும் நம்மில் உறுதியாகும்.

தூய யாக்கோபுவைப் போல நாமும்:

  • சவால்கள் வந்த போதும் நம்பிக்கையோடு நிலைத்து நிற்கலாம்....
  • இயேசுவுக்காக துன்பங்களை ஏற்றுக்கொள்ளலாம்.....
  • தன்னலமின்றி இறையாட்சிக்காக வாழலாம்....

இந்த திருநாளில் நாம் ஒவ்வொருவரும் தூய யாக்கோபுவைப் போல இயேசுவுக்காக நம் வாழ்வை அர்ப்பணித்து, நம்முடைய நம்பிக்கையைச் செயலாக்கும் சாட்சிகள் ஆக வாழ இறையருள் வேண்டுவோம்....இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்....

என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாயராஜ் திருச்சி மறைமாவட்டம் 

ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாவோம் ... (24.7.2025)

 “ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாவோம் ”



இன்றைய வாசகங்கள்  ஆண்டவரின் வருகைக்கு நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதையும், அவருடைய வார்த்தையை நாம் ஏற்கும் மனநிலையை எப்படி உருவாக்க வேண்டும் என்பதையும் நமக்குக் கற்பிக்கின்றன.

 விடுதலை பெற்று வந்த இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலை அடிவாரத்தில் தங்குகிறார்கள். ஆண்டவர் அவர்கள் அனைவருக்கும் முன்பாக இறங்கி வர உள்ளார். ஆனால் அவர் வருவதற்கு முன்பு ஒரு தயாரிப்பு வேண்டும்:

  • தங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
  • தம் துணிகளைத் துவைக்க வேண்டும்.
  • மூன்றாம் நாளுக்காக கடவுளைக்கான தயாராக வேண்டும்.

ஆண்டவர் தூயவர். அவரை நாம் காண விரும்புகிறோம் என்றால், நாமும் தூயவராக இருக்க வேண்டியது அவசியம்.

இந்தச் நிகழ்வில் நாம் பார்ப்பது:

  • இறைவனைச் சந்திக்க மக்கள்  பயம்  கொண்டனர்.
  • ஆனால், மோசே ஒரு நடுநிலையிலிருந்தார் – இறைவனுடன் நெருக்கமாகப் பேசும் தைரியம் கொண்டவராக.

நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆண்டவரைத்  சந்திக்க விரும்புகிறோம் என்றால், ஒழுக்கமுள்ள வாழ்க்கையும், மனதைத் தூய்மைப்படுத்தும் முயற்சியும் தேவை.

சீடர்கள் இயேசுவிடம், “ஏன் உவமைகள் வழியாகப் பேசுகிறீர்?” என்று கேட்டார்கள்.

இயல்பாக மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ளவே உவமைகள்...

புகைப்படம் எடுத்தாலும் படம் தெரியாதவர்கள் போல, நம் உள்ளம் இறைவாக்கை ஏற்கும் நிலைக்கே செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் மையம்...

நம்முடைய ஆன்மீக நிலையை சோதிக்க வேண்டிய நேரம் இது...

இதையே இரு வாசகங்களும் நம்மை சிந்திக்க வைக்கின்றன:

  • ஆண்டவரை நாம் எதிர்நோக்குகிறோமா?
  • நம்முடைய உள்ளம் கடவுளுடைய வார்த்தைக்குத் திறந்திருப்பதா?


இஸ்ரயேலர்  இதே வார்த்தையை ஏற்காமல்.. இறைவனை எதிர்கொள்ளவும் அஞ்சி.. புறங்கூறியும் பயந்தும் வாழ்ந்து  இருந்தனர்.


ஆனால் இயேசுவின் சீடர்கள் இறைவார்த்தையை கேட்கத் தயாராக இருந்ததால், அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

எனவே இன்றைய இறைவா வார்த்தையின் அடிப்படையில் ...

  • நம் உள்ளங்களை தூய்மையாக்குவோம்.
  • இறைவனின் வார்த்தையை ஆழமாக கேட்போம்.
  • ஆண்டவரோடு நமக்குள்ள நெருக்கம் மேம்பட நம்மை நாம்  ஆகுவோம்.
என்றும் அன்புடன் 
அருள்பணி ஜே. சகாய ராஜ் 
திருச்சி மறை மாவட்டம் 

விளைச்சலை கொடுக்க வாருங்கள்...

விளைச்சலை கொடுக்க வாருங்கள்...


இன்றைய வாசகங்கள்:

  1. மத்தேயு 13:1-9
  2. விடுதலைப் பயணம் 16:1-15

அன்பிற்கினிய சகோதரர்,  சகோதரிகளே,
இன்றைய வாசகங்கள் இரண்டும்  நம் இறைவன்  நம்பிக்கைக்குரியவர். அவர் விதைக்கப்படுகிற வார்த்தைகளின் வழியாக  நம்பிக்கையை, நாள்தோறும்  நமக்குத் தருகிறார்.


விதைப்பின் உவமை 

இயேசு இந்த உவமையின் மூலம் விதைப்பவர் விதைக்கிறார் – ஆனால் விதைகள் பல்வேறு நிலங்களில் விழுகின்றன:

  • சில வழியோரம் – பறவைகள் விழுங்கும்
  • சில பாறைமயமான இடத்தில் – வேர் இல்லாததால் கருகிவிடும்
  • சில முட்செடிகளில் – நெருக்குண்டு வளர முடியாது
  • ஆனால் சில நல்ல நிலத்தில் – 100, 60, 30 மடங்காக விளையும்

இதில் முக்கியமான அம்சம்: நம்முடைய இருதயம் எந்த நிலமாக இருக்கின்றது?
நாம் இறைவனுடைய  வார்த்தையை எவ்வாறு ஏற்கின்றோம்?
நம் வாழ்க்கையில் எவ்வளவு ஊக்கத்துடன், நம்பிக்கையுடன் நம் செயல்களைப் பிரதிபலிக்கிறோம்? என்று சிந்திக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம் ...

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரவேல் மக்கள் பசிக்கொண்டு பாலைநிலத்தில் முனுமுனுத்தனர் . அவர்களின் குறைபாடுகள் நியாயமானவை போலத் தோன்றினாலும், அவர்கள் மறந்துவிட்டனர்:
இறைவன் அவர்களை எகிப்தில் இருந்து விடுவித்தார்.

மக்கள் தனக்கு எதிராக இருந்த போதும் கூட கடவுள் அவர்களை கைவிடவில்லை.மாறாக:

  • மாலையில் இறைச்சியை (காடை) தந்தார்
  • காலையில் மன்னா எனும் வானத்திலிருந்து இறங்கும் அப்பத்தைத் தந்தார்

மக்கள் “மன்னா” என்று கூறியதற்குக் காரணம் – “இது என்ன?” என அறியாதபோது வந்த வியப்பின் அடையாளம்.
இது என்ன? – நம்முடைய வாழ்விலும் இந்தக் கேள்வி பல சமயங்களில் எழுகிறது:
“நான் எதற்காக இந்த நிலையிலிருக்கிறேன்?”
“என் தேவைகளை எப்படி கடவுள் தீர்க்கப்போகிறார்?”

அதற்கான பதில் இதுவே:

"இது ஆண்டவரின் அப்பம். அவர் உங்களை உணவளிக்கிறார்."

இன்றைய இறை வார்த்தை நம் வாழ்வுக்குத் தரும் படம்

  1. இறை வார்த்தையை நாம் ஏற்று நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
  2. முனுமுனுக்காமல் நம்புங்கள் 
  3. உங்கள் உள்ளத்தில் விதைக்கப்படும் வார்த்தையை வளர்க்க மனதைத் திறந்து வைத்திருங்கள்.
  4. தினமும் இறைவனை நம்புங்கள் 

எனவே அன்பர்களே என்றும் குறைவுபடாத  நம்பிக்கையோடு, ஆண்டவரின் வார்த்தையை நம்முள் விதைக்கச் செய்வோம் இறைவனின் அருளை பெறுவோம்!"


திங்கள், 21 ஜூலை, 2025

"ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" (22.7.2025)

"ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?"


அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே,

இன்றைய நற்செய்திவாசகத்தில் மரியா அழுதாள் என வாசிக்கிறோம். அவர் அழுகைக்கு காரணம் அவர் அன்பு கொண்டிருந்த ஆண்டவரின் உடலைக் காணவில்லை. அவரது அன்பும் நம்பிக்கையும்  இயேசு மரணித்த போதும் குறையவில்லை. மரணத்திற்குப் பின் கூட அவர் ஆண்டவரை தேடிக்கொண்டிருந்தார்.

1. அழுகை ஒரு மனிதப் பழக்கம் – ஆனால் இறையுணர்வு கொண்டது

மரியா அழுதது போன்று நம் வாழ்க்கையிலும் சில  அழுகைகள் இருக்கின்றன – 

அன்புக்குரிய ஒருவரின் இழப்பு, 

நம்பி இருந்த ஒன்று நடைபெறாமல் போவது . 

ஆனால் இந்த அழுகையில் ஒரு இறை நம்பிக்கை இருக்கும்போது நமது நம்பிக்கை வீணாகாது. இதற்கு உதாரணம் மரியாவின் அழுகை.  மரியாவின் அழுகையும் தேடலும் இயேசுவின்  இறுதி சந்திப்பிற்கு வழிவகுத்தது.

2. "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" — இயேசுவின் இரு முக்கியமான கேள்விகள்

  • இயேசு நம்மையும் இவ்வாறு கேட்கிறார்: "ஏன் நீ அழுகிறாய்? அல்லது கவலைப்படுகிறாய் ?"
  • "யாரை, எதை நீ தேடுகிறாய்?"
    இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது நமது கடமை நாம் உலக காரியங்களை  தேடுகிறோமா? அல்லது உயிரோடு எழுந்த ஆண்டவரைத் தேடுகிறோமா?

3. மரியா ‘தோட்டக்காரர்’ என்று நினைத்தவர் இயேசுவே!

சில சமயங்களில் நாமும் கடவுளை உணரமுடியாமல் வேறு ஏதோவென்று எண்ணுகிறோம். ஆனால் அவர் மரியா என்று பெயர் சொல்லி அழைத்தது போல நம்மை பெயரால் அழைக்கும் போது நம் உள்ளம் விழிக்கிறது.

  • நம்மை ஒரே ஒரு வார்த்தையால் இயேசு அழைக்கிறார்: அது நம் பெயரால்
  • அவர் நம் பெயர் சொல்லி அழைக்கும் போது அவருக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்பு வெளிப்படுகிறது.

4. "ரபூனி!" — மரியாவின் அறிதல்

  • மரியா “ரபூனி” என பதிலளிக்கிறாள் — அதாவது போதகரே!
  • இதுவே உண்மையான நம்பிக்கையின்  பதில்: ஆண்டவரை மீண்டும் கண்டதும் அவரைப் போதகராக ஏற்கிறாள். நம்மை அனுதினமும் இறை வார்த்தை வழியாக அழைக்கின்ற இறைவனின் குரலை கேட்டு நாமும் பதில் கூறுகிறோமா? சிந்திப்போம்... 

5. பணிக்குச் செலுத்தும் இயேசு: “நீ என் சகோதரர்களிடம் செல்”

  • மரியா இயேசுவை கண்டு கொண்ட மகிழ்ச்சியை  தனக்குள் வைத்துக்கொள்ளவில்லை.
  • அவர் சீடர்களிடம் சென்று அறிவிக்கிறார்: “நான் ஆண்டவரைக் கண்டேன்!”
    இது தான் நம் அழைப்பு. உயிர்த்த இயேசுவை நாமும் காணும் பொழுது, அதை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். உயிர்த்த ஆண்டவரை நாம் கண்டு கொள்வதற்கான வழி அவர் நமது வாழ்வில் நாம் அறியாத வேலையில்... நமக்கு வந்த இடர்பாடுகளின் மத்தியில்... அவர் நம்மில் இருந்து செயலாற்றியதன் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள முடியும். 
எனவே அன்புக்குரியவர்களே ஆண்டவரை கண்டு  கொள்ளவும் ...அவரது குரலுக்கு செவி கொடுத்து அவர் கொடுத்த பணியை ஆர்வத்தோடும் அச்சமின்றியும் செய்வதற்கான ஆற்றல் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...

என்றும் அன்புடன் 
அருள் பணி ஜே. சகாயராஜ் 
திருச்சி மறை மாவட்டம் 

சனி, 19 ஜூலை, 2025

"வரவேற்பும் விழிப்பும் – இறைத்திட்டத்தின் வெளிப்பாடு" (20.7.2025)

 "வரவேற்பும் விழிப்பும் – இறைத்திட்டத்தின் வெளிப்பாடு"



அன்புள்ள சகோதர சகோதரிகளே,

இன்றைய மூன்று வாசகங்களும் நம்மை ஒரே திசையில் அழைத்து செல்கின்றன:
இறைவனை வரவேற்பதும், அவருடைய வார்த்தையை கவனமுடன் கேட்டு வாழ்வில் நிறைவேற்றுவதும், அவரது மறைந்திருந்த திட்டங்களை நம்முள் நிறைவேற்ற அனுமதிப்பதும். நம் வாழ்வில் பின்பற்றப்பட வேண்டும் ...


1. இறைவனை வரவேற்பது: ஆபிரகாம் – பேராதரவு மிகுந்த விசுவாசம்

இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம்... 
ஆபிரகாம் வெயிலின் உச்சியில் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், மூன்று மனிதரை நோக்கிச் சென்று வரவேற்கிறார்.
அவர்களை அடியளவில் வணங்கி, தண்ணீர் தர, உணவு தர, விருந்தோம்பல் செய்ய முனைகிறார்.

இந்தச் செயலில் நம்மால் காணப்படுவது:

"விருந்தோம்பல் என்பது ஒரு மனிதருக்கான செயல் அல்ல; இறைவனை நேரடியாக வரவேற்பதற்கான புனிதமான அனுபவமாகிறது."

பின்னர் அந்த மூவரும் இறைவனாகவே தங்களை வெளிப்படுத்துகிறார்கள். இதில் 
மறைந்திருந்த ஒரு மாபெரும் செய்தி:
சாராவுக்குப் பிள்ளை பிறக்கப் போவதென்பது, இந்த விருந்தோம்பலில் வெளிப்படுத்தப்படுகிறது.

ஆபிரகாம் இறைவனை இறைவன் என்று  அறியாமலே வரவேற்றார். ஆண்டவரின் ஆசியைப் பெற்றார் நாமும் அவ்வாறே நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுகிறது ... 


2. மறைந்திருந்த இறைத்திட்டம் வெளிப்படுகிறது: திருத்தூதர் பவுல்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் சொல்கிறார்:

"தலைமுறை தலைமுறையாக மறைக்கப்பட்டிருந்த ஒரு  மறைபொருள் — அது இப்போது நமக்குள் வெளிப்படுகிறது."

அது என்ன?

"உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவே அந்த மாட்சியின் நம்பிக்கை."

பவுல் சாத்தியமான எல்லா வழிகளிலும் அறிவித்து, கற்பித்து, ஒவ்வொருவரையும் கிறிஸ்துவோடு ஒத்த நிலைக்கு அழைத்து வருகிறார்.
அவர் தனது வேதனையை கூட மகிழ்ச்சியாக ஏற்கிறார், ஏனெனில் அது திருச்சபைக்கான கடவுளின் திட்டத்தில் ஒரு பங்கு என்பது அவரது பார்வை.

இன்று நாமும் இவ்வாறு வாழ அழைக்கப்படுகிறோம்...

3. யார் நலம் பெற்றனர்? மார்த்தா அல்லது மரியா?

லூக்காவின் நற்செய்தியில்,

  • மார்த்தா இயேசுவுக்காக பல வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
  • மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து அவரது வார்த்தைகளை கவனிக்கிறார்.

இயேசு தெளிவாக சொல்கிறார்:

"மரியா நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துள்ளார்; அது அவளிடமிருந்து எடுக்கப்படமாட்டாது."

இங்கே நம்மை நோக்கி வரும் நுட்பமான கேள்வி:

  • நாம் மார்த்தாவைப் போலவே செயல்படுகிறோமா – பரபரப்பில் இறைவனைத் தவறவிடுகிறோமா?
  • அல்லது மரியாவைப் போல அவரது வார்த்தையைக் கேட்டுப் பதிலளிக்கிறோமா?
  •  வரவேற்கவும், விழிப்புடன் இருக்கவும், இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். 

இன்று நம்மிடையே இயேசு நிறைந்திருக்கிறார் — அவர் எப்போதும் நம் வாழ்வில் வருகை தருகிறவர்.
ஆபிரகாம் போல அவரை  வரவேற்போம்.
பவுல் போல அவரது வார்த்தையின் ஆழத்தைக் கருத்தில் கொண்டு, நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வோம்.
மரியா போல அவரிடம் அமர்ந்து, நம் உள்ளத்தைக் கவனத்துடன் திறப்போம்...

அப்பொழுதுதான், இறைவனின் மறைந்திருந்த மாட்சியும், திட்டமும் நம்முள் வெளிப்படும்.

எனவே ஆண்டவரை என் முகத்தோடு வரவேற்று அவரின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து நம் வாழ்வை நெறிப்படுத்த இதயத்தில் உறுதி ஏற்போம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார் ...


என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 

வெள்ளி, 18 ஜூலை, 2025

நம்பிக்கை எனும் பாதையில் கடவுளின் மாட்சியை காணுங்கள்" (21.7.2025)

 "நம்பிக்கை எனும் பாதையில் கடவுளின் மாட்சியை காணுங்கள்"


 சகோதர சகோதரிகளே,
இன்றைய இரு வாசகங்களும் 
நம்முடைய வாழ்க்கையின் நெருக்கடிகள் ஒரு இறுதி அல்ல; அது கடவுளின் செயலைக் காணும் ஆரம்பம்.


1. விடுதலைப் பயணம்: நெரு
க்கடியில் நம்பிக்கை (விடுபடல் 14:5-18)

இஸ்ரயேல் மக்கள் பார்வோனின் சேனைகளைப் பார்த்தபோது பெரிதும் அச்சமுற்றனர்.
அவர்கள் மோசேவிடம், "ஏன் எங்களை இங்கே கொண்டு வந்தீர்?" என்று கத்தினார்கள்.
மனிதருக்குப் பொதுவானது நெருக்கடியில் நம்பிக்கையை இழப்பது.

ஆனால் மோசே கூறியது:

“அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள்.”

இது நம் வாழ்வில் பார்வோனும் படைகளும் ( இன்றைய துன்பங்கள்)  நம்மை நெருங்கும் போது,
அச்சமல்ல, நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்த முதல் வாசகத்தின் வழியாக மனதில் இருக்க வேண்டிய பாடம் 
மனித முயற்சி அல்ல, இறை செயல் தான் மக்களைப் பிளவு பட்ட கடலின் நடுவே வழி நடத்துகிறது.


2. இயேசுவின் அறிவுரைகள்: மனமாற்றமும் உணர்ச்சிமிக்க உண்மை (மத்தேயு 12:38-42)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பரிசேயர்கள் மற்றும் அறிஞர்கள் அடையாளம் கேட்கின்றனர்.
இயேசு அதற்கு 

“யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தது போல், மானிட மகனும் நிலத்தின் உள்ளே இருப்பார்.”

இது இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றுக்கான முன்னறிவிப்பு.
அவர் மேலும் கூறுகிறார்:

“தென்னாட்டு அரசி, சாலமோனின் ஞானத்தை கேட்க வந்தார்; ஆனால் இங்கு இருப்பவர் சாலமோனிலும் பெரியவர்.”


இவ்வாசகங்கள் இறைவன் நமக்குள் செயல்படுகிறாரா...? என்பதை உணர வெளிப்படையான அடையாளங்கள் தேவையில்லை மாறாக  நாம் மனம் மாற்றிக் கொண்டால், நம்மிடம் இருக்கிற இயேசுவை உணர முடியும். என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.


3. இரண்டும் இணையும் இடம்:

  • பழைய ஏற்பாட்டில் மக்கள் கடவுளை எண்ணாமல் மோசேயிடம் மோதுகிறார்கள்.
  • புதிய ஏற்பாட்டில், மக்கள் இயேசுவிடம் அடையாளம் கேட்கிறார்கள்.

இரண்டிலும் ஒரு பொதுவானது — மனிதர்கள் வெளிப்படையான அடையாளங்களை எதிர்பார்க்கிறார்கள்; ஆனால் கடவுள், நம்பிக்கையின் வழியாக தனது செயலை வெளிப்படுத்துகிறார்.

எனவே அன்பானவர்களே,
நம்முடைய வாழ்வின் கடினமான தருணங்களில்,
“ஏன் கடவுள் எதையும் செய்யவில்லையா?” என்று கேட்காமல்,
“ஓயாமல் செயல்படுகிற ஆண்டவரை நாங்கள் எதிர்பார்க்கிறோமா?” என்று நம்மை நாம் கேட்க வேண்டும்.

எனவே,

  • பயப்படாதீர்கள்
  • மனம் மாறுங்கள்
  • நம்பிக்கையை இழக்காதீர்கள்
  • இறைவனின் மாட்சியை உங்கள் வாழ்விலும் காணுங்கள்!

ஆண்டவரின் அமைதி எப்பொழுதும் நம்மோடு இருந்து நம் செயல்பாடுகளில் குறிப்பாக துன்ப நேரங்களில் நாம் துவண்டு விடாமல் மீண்டும் வருவதற்கு வழி வகுத்து கொடுக்கும்... அந்த ஆண்டவர் மீதான நம்பிக்கையில் இந்த நாளில் இணைந்து பயணிப்போம்... இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்...

 
என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ்

 திருச்சி மறை மாவட்டம் 

வியாழன், 17 ஜூலை, 2025

நற்செய்தி பணி செய்வோர் நம்பிக்கையின் வெளிச்சம் (19.7.2025)

நற்செய்தி பணி செய்வோர்  நம்பிக்கையின் வெளிச்சம்


அன்பான சகோதர சகோதரிகளே,

இன்றைய நற்செய்தியில் நாம் இரண்டு வெவ்வேறு நிலைகளை காண்கிறோம்:
ஒருபுறம் பரிசேயர்கள் இயேசுவை ஒழிக்கச் சூழ்ச்சி செய்கிறார்கள்; மற்றொரு புறம், இயேசு நிம்மதியாக அந்த இடத்தைவிட்டு விலகுகிறார், பலரை குணமாக்குகிறார், ஆனால் தம்மைப் பற்றி வெளிப்படையாக பேசவேண்டாம் எனக் கூறுகிறார்.

இயேசு ஏன் தம்மை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கூறினார்?
அவர் பயந்ததாலா? இல்லை. அவர் இறைவனின் திட்டத்தில் உண்மையாக நிலைத்திருந்தார்.

மத்தேயு எழுதியவர் எசாயா இறைவாக்கினரின் வாக்குறுதியை மேற்கொள்கிறார்:

> "இதோ என் ஊழியர், நான் தேர்ந்தவர்… நெரிந்த நாணலை முறியார், புகையும் திரியை அணையார்..."

1. இயேசுவின் மௌன ஆளுமை

இயேசு சத்தமாகவும் சண்டைபோட்டு பேசுவதுமில்லை. வழிகளில் கூச்சலிடுவதுமில்லை. ஆனால் அவர் செய்கிற ஒவ்வொரு செயலும் ஆழமான உண்மையை  கொண்டது.
இது நமக்கு சொல்லும் உண்மை என்ன?
இறைசக்தி என்பது சத்தத்தில் அல்ல; கருணையிலும் அமைதியிலும் உள்ளது.
அவர் தனது அமைதியான பணியின்  வழியாகவே உலகை வென்றார்.

2. முடங்கிய நாணலையும், புகையும் திரியையும்…

இது நம்மைச் சமாதானப்படுத்தும் வரி:
நாம் பலவீனமானவர்களாக இருந்தாலும், இயேசு எங்களை நொறுக்கமாட்டார்.
பாவத்தால் காயமடைந்த நம் உள்ளங்களை அவர் வாசிப்பார்.
நம்பிக்கையை இழந்து போன நம் வாழ்வில் — அவர் மீண்டும் ஒரு ஒளியை எரிய வைப்பார்.

3. அவர் பெயரிலே நம்பிக்கை கொள்ளும் எல்லா மக்களும்...

இது இறுதியில் கொடுக்கப்படும்  ஒரு அழைப்பு: இயேசுவின் பெயரில் நம்பிக்கை வைத்தால், அவர் நம்மை மீட்பார். இவர் ஆணை விடாதவர்; நேர்மையிலும், பரிவிலும் மக்களைச் தேடி  வரும் நம்முடைய தெய்வீக பணியாளர் .

அன்புக்கு உரியவர்களே அன்பினும் அமைதியினும் ஆன இயேசுவை நாம் பின்பற்றுவோம். நம்முடைய வாழ்க்கையிலும் அவரைப்போலவே, புரிந்துகொள்ளும் மனமும், பரிவும், அமைதியான பணியின்  சான்றுகளும் வெளிப்படட்டும்.

இறைவன் அதற்கான ஆற்றலை நமக்கு தருவாராக ....

என்றும் அன்புடன் 
அருள் பணி ஜே.  சகாயராஜ்
 திருச்சி மறை மாவட்டம் 

புதன், 16 ஜூலை, 2025

ஓய்வு நாள் கடவுளின் நாள்...(18.7.2025)

ஓய்வு நாள் கடவுளின் நாள்...

இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...  இயேசுவின் வார்த்தைகள், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” எனும் இவ்வார்த்தைகள்  நம்மை கடவுளின் கருணையும், மனிதர் மீதான அவருடைய அக்கறையும் பற்றிய ஒரு ஆழ்ந்த உணர்வுக்கு அழைத்துச் செல்கிறது.


ஓய்வு நாள் என்பது எதற்காக?

ஓய்வு நாள் என்பது சபாத், கடவுள் உருவாக்கிய ஓர் நாள். பழைய ஏற்பாட்டில், இது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட நாளாகும் – ஆறு நாட்கள் உலகத்தை படைத்த இறைவன், ஏழாம் நாளில் ஓய்ந்தார். அந்த ஓய்வு, ஒரு புனித நாளாக அறிவிக்கப்பட்டது (விடுதலைப் பயணம் 20:8–11).

ஆனால் காலப்போக்கில், ஓய்வு நாள் கடவுளை வணங்கும் நாளாக இருப்பதைவிட, கட்டுப்பாடுகளின் நாளாக மாறிவிட்டது. இந்நாளில்  “செய்யக்கூடாதது என்ன?”, “எப்படி பணிகளை தவிர்க்கலாம்?” என்பதற்கே அதிக கவனம் செலுத்தப்பட்டது . இன்றும் நாம் வாழும் சமூகத்தில் கடவுளுக்கான நேரம் ஒதுக்க இயலாத ஒரு நிலையில் நாம் பம்பரம் போல சுழன்று  கொண்டிருப்பதைசற்று நிறுத்தி கடவுளுக்கான நேரத்தை செலவிட வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்... வாரத்திற்கு ஒரு முறை கூட கடவுளுக்கு நேரம் ஒதுக்காத மக்களாக இன்று நம்மில் பலர் இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை ...

ஆனால் இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது ஓய்வு நாளில் இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது என சட்ட திட்டங்களை வலியுறுத்திய சமூகத்தில் நன்மைத்தனங்களை தொடர்ந்து முன்னெடுப்பவராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.  ஆனால் பரிசேயர்கள் இயேசுவை குற்றம் சாட்டுகிறார்கள். சில நேரங்களில் இயேசுவோடு உடன் பயணிக்கின்ற சீடர்களை மையப்படுத்தி அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.  "ஓய்வு நாளில் உம் சீடர்கள் தானியங்களை எடுத்து சாப்பிடுகிறார்கள்!" — இது சட்டத்தை  மீறுதல் என்று அவர்கள் கருதினர்.

ஆனால் இயேசு அவர்களுக்குப் புதுமையான பதிலை அளிக்கிறார்:

  1. தாவீது பசியுற்ற  வேளையில் அர்ப்பண அப்பங்களை உண்டதைக் குறிப்பிடுகிறார்.
  2. கோவிலில் குருக்கள் ஓய்வு நாளிலும் பணியாற்றுவதை எடுத்துக்காட்டுகிறார்.
  3. இறைவனின் இதயத்தை  நோக்கி ஒரு உண்மையை சொல்கிறார்:
    👉 “நான் பலியைக்  விரும்பவில்லை; இரக்கத்தையே விரும்புகிறேன்!”

இவை எல்லாம் நமக்கு  இயேசுவின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. 
இறைச்சட்டம் மனிதனுக்காக
அல்லது
மனிதன் இறைச்சட்டத்துக்காக அல்ல!


மனிதருக்காக சட்டம், மனிதன் சட்டத்துக்காக இல்லை

  1. கடவுளின் நோக்கம்:
    கடவுள் நமக்காகச் சட்டங்களைத் தந்தார். அந்த சட்டம் நமக்கு நல்லது தரவேண்டும், நம்மை கட்டுப்படுத்த அல்ல.

    • நாமும் சட்டங்களை கடவுளின் நியாயத்தோடு, இரக்கத்தோடு அணுக வேண்டும்.
  2. கருணை – கடவுளின் இதயத்தின் மையம்:

    “நீங்கள் ‘செலுத்தும் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் அர்த்தத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ...”
    இதுவே நம் வாழ்க்கையின் மையமாகவும் அமைய வேண்டும். 

  3. நமக்கும் ஓய்வு தேவை:
    ஓய்வு நாள் என்பது தொழிலிலிருந்து ஓய்வது மட்டும் அல்ல.
    அது கடவுளோடு சேரும் நாள், அவரை நினைக்கும் நாள், அவரது அருளுக்குள் நம்மை புதுப்பிக்கும் நாள்.

எனவே இனி வரும் வெண்ண நாட்களில்....

  • நம்முடைய ஆன்மீக கடமைகள் கடமை உணர்வோடு நம்மால் செய்யப்பட வேண்டும்.
  • கடவுளின் அருளின் அடிப்படையில் மற்றவர்களை மதிக்க வேண்டும்; அவர்கள் தவறு செய்தாலும், கடவுளின் பார்வையில் அவர்கள் மதிப்புடையவர்கள். என்பதை மனதில் இருதி “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” — என்பதன் அடிப்படையில் மனித அடிப்படையாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும்

எனவே இனி வருகின்ற நாட்களில் நம் வாழ்வில்...

  • இரக்கத்துடன் வாழுவோம். சட்டத்தின் பெயரில் இருதயமில்லாத தீர்ப்புகள் வழங்காதிருப்போம்.
  • பிறரின் தேவைகளை உணர்வோம, குறிப்பாக அவர்கள் தேவையில் இருக்கும்போது கடவுளின் கரங்களை போல நாம் இருப்போம்.
  • ஒவ்வொரு ஞாயிறும் கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கான நாள் என்பதை உணர்ந்தவர்களாக கடவுளோடு நேரத்தை செலவிடுவோம். 
இதற்கான அருள் வேண்டி இணைந்து இன்றைய நாளில் இறைவேந்தல் செய்வோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

என்றும் அன்புடன் 
அருள் பணி ஜே. சகாயராஜ் 
திருச்சி மறைமாவட்டம் 

செவ்வாய், 15 ஜூலை, 2025

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (17.7.2025)

“நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்”

அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே,


இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் அழகான அழைப்பை நமக்கு நினைவூட்டுகிறது.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”

இது ஒரு அழைப்பு மட்டுமல்ல – இது ஒரு உறுதியான ஆறுதல்!
நாம் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் சுமைகள் பலவாக இருக்கலாம்... மனதளவிலான கவலைகள், குடும்பப் பிரச்சனைகள், உடல் நலக்குறைவுகள், பொருளாதாரப் பிரச்சினைகள் , உறவுகளிடையே  சிக்கல்கள் – இவை அனைத்தும் நம்மை சோர்வடையச் செய்கின்றன.

இந்தத் தருணங்களில் எல்லாம்  இயேசு நம்மைத் தம் பக்கம் வர அழைக்கிறார்.

“நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.”

இயேசுவின் கனிவு என்பது நம்மை வெறுத்து தண்டிக்கவல்ல கடவுள் அல்லர் என்பதைக் காட்டுகிறது.
அவர் வருந்துவோரின் இதயத்தைத் தொடக்கூடியவர்.
அவர் கண்ணீரோடு வருவோருக்கு கண்முடிக்கிறார் அல்ல, அவர்களுடன் தாம் அழுகின்றார்.

மனத்தாழ்மையுடன் இருக்கின்றார் – அதாவது, தம் நிலையை நமக்காக தாழ்த்தி நம்மோடு சமமாய்த் திரிகின்றார்.
இயேசுவின் நுகம் ஒரு அழுத்தமாய்ப் பயங்கரமான சுமையல்ல, ஆனால் நம்மைப் புத்துணர்விக்கக் கூடிய, நமக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை கற்பிக்கக் கூடிய பரிசாகும்.

அவர் கூறுகிறார்:

“என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.”

இது எப்படி சாத்தியம்?

  • ஏனெனில் நாம் இந்த நுகத்தை தனியாக சுமக்கவில்லை.
  • நம்முடன் இயேசு சுமக்கிறார்.
  • நம்முடைய சுமையை அவர் தம்மிடம் எடுத்துக் கொள்கிறார்.
  • நம்முடைய வாழ்வில் அவர் துணையாக நிற்கிறார்.

அன்புடைய சகோதரர்களே,

இன்றைய உலகம் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பலருக்கும் மனதில் அமைதி இல்லை. ஓய்வு இல்லை.
ஆனாலும்  இயேசு நம்மை அழைக்கிறார்:
“என்னிடம் வாருங்கள்”

அந்த அழைப்பை நாம் ஏற்கிறோமா?
நம்முடைய சுமைகளை அவர் மேல் ஏற்றுகிறோமா?
அவரிடம் மனம்விட்டு பேசுகிறோமா?

இக் கேள்விகளுக்கு நாம் இன்றைய நாளில் விடை தேடுவோம் ....
இயேசுவிடம் நம்மை ஒப்படைத்தால், அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார் .

இயேசுவின் நெஞ்சம் கனிவும் மனத்தாழ்மையும் நிரம்பிய ஒன்றாகவே இருந்தது;
அதனால்தான் அவர் நம்மை எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறார், வழிநடத்துகிறார்.

அவரின் வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ள இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம் ....


என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 


திங்கள், 14 ஜூலை, 2025

You have revealed them to little children…"(16.7.2025)

"You have revealed them to little children…"


Dear brothers and sisters,

In today’s Gospel, Jesus praises God the Father.
He says, "You have hidden these things from the wise and the learned, and revealed them to little children."
Today, we too are invited to join Jesus in praising God with a grateful heart for all the good He has done in our lives.

In our society, the wise and the learned sometimes assume they know everything and forget to seek God. But those with a childlike heart—even if they are knowledgeable—are aware that there are countless things they do not know, and they seek God with trust every day. This is the very lesson Jesus is teaching us today.

According to Jesus’ words:
"No one knows the Father except the Son and anyone to whom the Son chooses to reveal Him."
In other words, to truly know God, we must go through Jesus. If we want to know the Father deeply like Jesus, we too must live with childlike trust and humility.

Let us pray together today, asking for this grace.

With love always,
Rev. Fr. J. Sahaya Raj
Diocese of Tiruchirappalli

குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்…" (16.7.2025)

"குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்…" 


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தையாம் கடவுளை  புகழ்கிறார். 

"ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துத், குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" என்று.

இன்று நாமும் இயேசுவின் மனநிலையோடு இறைவன் நமக்கு செய்த நன்மைகளை நிமிர்த்தமாக கடவுளை புகழ அழைக்கப்படுகிறோம் ...

நாம் வாழும் சமூகத்தில்  ஞானிகள் மற்றும் அறிஞர்கள், சில சமயங்களில் தங்களை எல்லாம் தெரிந்தவர்களாக நினைத்து, இறைவனைத் தேட மறக்கிறார்கள். ஆனால் குழந்தை மனம் கொண்டவர்களாக அனைத்தும் அறிந்த நிலையில் நாம் இருந்தாலும் கூட அறியாத விஷயங்கள் ஆயிரம் உண்டு என்பதை உணர்ந்தவர்கள் நம்பிக்கையோடு நாளும் இறைவனை தேட வேண்டும்...இதையே இன்று இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார் ... 

இயேசுவின் கூற்றுப்படி 

"தந்தையை மகன்தான் உண்மையாக அறிகிறான். மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறானோ, அவர்களே தந்தையை அறிய இயலும்."

அதாவது, இறைவனை அறிய இயேசுவின் வழியே போக வேண்டும். இயேசுவைப் போல நாம் தந்தையை ஆழமாக அறிந்து கொள்ள  வேண்டும் என்றால், நாமும் குழந்தைகளைப் போல நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

இதற்கான அருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம் ...

என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாய ராஜ் 

திருச்சி மறை மாவட்டம் 

ஞாயிறு, 13 ஜூலை, 2025

We Are Called to Repent...” (15.7.2025)

“We Are Called to Repent...”


Dear brothers and sisters in Christ,

In today’s Gospel, it may seem as though Jesus is speaking in anger. But this is not the anger of vengeance — rather, it is a holy indignation that arises when people fail to recognize the call of God and live accordingly.

We hear Jesus say,
“On the day of judgment, it will be more tolerable for Tyre and Sidon than for you.”
These strong words are addressed to the towns of Chorazin, Bethsaida, and Capernaum — places where Jesus performed many mighty works. Yet the people there failed to repent. Jesus is not condemning them out of hatred, but out of love — calling them, and us, to turn away from our indifference and return to God’s grace.

Today’s Word of God reminds us to recall all the blessings we have received from the Lord. Even when we fail to live in ways pleasing to God — through our words or actions — the Lord never withholds His grace. He continues to bless us day by day with food to eat, clothes to wear, shelter to live in, and good friends to accompany us.

As people who have received countless blessings from God, we are invited to reflect:
Have we truly shaped our lives according to His Word?

Though God has repeatedly invited us to repent, many have ignored that call and continued to live their own way. Yet today’s Gospel shows us that God still reaches out, still speaks to His people — just as He once spoke to the people of those towns.

He speaks to you today.
He speaks to me.

Let us listen to His voice with a grateful heart. Even if we have failed in the past, let us now remember His goodness, repent sincerely, and walk faithfully with Jesus every day. May the Lord bless us and strengthen us always in His love.

With love and prayers,
Rev. J. Sahaya Raj
Diocese of Tiruchirappalli

மனம் மாறிடவே அழைக்கப்படுகிறோம்... (15.7.2025)

மனம் மாறிடவே அழைக்கப்படுகிறோம்...

 அன்பார்ந்த சகோதர சகோதரிகளே


இன்றைய நற்செய்தியில் இயேசு கோபத்தோடு பேசுவது போல தோன்றினாளும்... கடவுள் தருகின்ற அழைப்பை உணர்ந்து நெறிப்படுத்தி கொள்ளத் தவறுகிற வாழ்வை இறைவன் சரி செய்து கொள்வதற்கான கோபமாக அதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  

“தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும்” என்பது இயேசுவின் வார்த்தைகளாக நாம் இன்று வாசிக்க கேட்கிறோம்...

இயேசு வல்ல செயல்களை நிகழ்த்திய கோராசின், பெத்சாய்தா, கப்பர்நாகூம் போன்ற நகரங்களில் மக்கள் மனம் மாறாததை சுட்டிக்காட்டி கடவுள் தருகின்றஅழைப்பையும் அவரது அருளையும்உதாசீனப்படுத்தி வாழுகிற வாழ்வை சரி செய்யவே இவ் வார்த்தைகளை இயேசு உதிர்க்கின்றார்.

இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் ...இறைவன் நமக்கு செய்த எல்லா நன்மைகளையும் நினைவு கூற நாம் அழைக்கப்படுகிறோம் ...

பல நேரங்களில் நாம் சொல்லாலும் செயலாலும் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வைத் வாழ தவிர இருந்தாலும் கூட கடவுள் நமக்குத் தருவதாக சொன்ன எந்த அருளையும் குறைத்துக் கொண்டவர் அல்ல ...அனுதினமும் உண்ண உணவையும் உடுக்க உடையும் இருக்க நல்ல இடத்தையும் நல்ல நண்பர்களையும் கொடுத்து நம்மை நாளும் வழி நடத்துபவர் இறைவன் ... அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான நன்மைத்தனங்களை பெற்றுக் கொள்ளுகிற நாம் அவர்கள் வார்த்தைகளின் வழி தான் நமது வாழ்வை அமைத்திருக்கிறோமா...? என்பதை குறித்து சிந்திக்கவே இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது. 

மனம் மாறுவதற்கான அழைப்பு பல நேரங்களில் வழங்கப்பட்ட போதும் கூட அதை உதாசீனப்படுத்த விட்டு மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவே இன்றைய இரவு வார்த்தை வழியாக இறைவன் மக்களோடு உரையாடுகிறார் ... அன்று அப்பகுதி மக்களோடு உரையாடிய இறைவன் இன்று உங்களோடும்... என்னோடும்... உரையாடுகிறார் என்பதை உணர்ந்தவர்களாக நாம் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வை வாழ தவறிய சூழலிலும் கூட அவர் நமக்கு செய்த எல்லா நன்மைகளையும் நன்றியோடு நினைவுகூர்ந்து நல்லதொரு மனமாற்றம் பெற்றவர்களாக நாளும் இயேசுவின் பாதையில் இணைந்து பயணிக்க இறையருள் வேண்டுவோம்.... இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்....


என்றும் அன்புடன்

அருள் பணி ஜே. சகாய ராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 



“I did not come to bring peace, but a sword.” – Matthew 10:34 (13.7. 2025)

Dear Brothers and Sisters in Christ,

“I did not come to bring peace, but a sword.” – Matthew 10:34


The words of Jesus in today’s Gospel may come as a surprise to many of us. Jesus is often seen as the Prince of Peace. Yet today, through the Gospel, He declares: “I did not come to bring peace, but a sword.” These words call us to go deeper in our reflection and understand the profound meaning behind them.


1. Conflict that Leads to True Peace

The “sword” that Jesus refers to is not a physical weapon meant for violence. Rather, it symbolizes the inner strength and conviction required to live by the truth.
When someone chooses to follow Christ wholeheartedly, it often leads to conflicts within families and communities, because living according to God's Word may go against the values or expectations of others.
To follow Christ is to reject false peace and walk the path of truth and righteousness, even if it causes division.


2. Priority to Truth and to Christ

Jesus says that those who love their father, mother, son, or daughter more than Him are not worthy of Him.
He is not asking us to hate our families, but rather to place Him first above all relationships.
Discipleship may sometimes demand painful sacrifices, but in the end, it leads to lasting joy and true meaning in life.


3. Rejoicing Even in Loss

Jesus teaches us:

“Whoever seeks to save their life will lose it, but whoever loses their life for My sake will find it.”

This is a life-giving principle for every Christian. When we surrender ourselves for the sake of Christ, even our daily journey becomes a walk with the Cross.
Though challenging, it is a path that helps us experience the abiding presence of the Lord in a deeper way.


4. Every Little Act Has Meaning

At the end of today’s Gospel, Jesus says:

“Whoever gives even a cup of cold water to one of these little ones because he is a disciple will not lose his reward.”

This reminds us that no act of kindness or service done for Christ is ever too small. Even the simplest gestures carry eternal value in the eyes of God.


Conclusion:

Dear friends, following Christ is not always easy. It involves sacrifice, courage, and commitment. But it is the only path that leads us to true peace, fulfillment, and eternal life.
So let us take up our cross, place Jesus first in our lives, and pray for the grace to live according to His teachings.

With love and prayers,
Rev. Fr. J. Sahaya Raj
Diocese of Tiruchirapalli

“அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.” (14.7.20

அன்புக்குரிய சகோதரர்/சகோதரிகளே,

 “அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.” – மத்தேயு 10:34


இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கும் இயேசுவின் வார்த்தைகள் நம்மை ஆச்சரியம் அடைய செய்கின்றன.  இயேசு, அமைதியின் இறைவனாக  கருதப்படுகிறார். ஆனால் இன்று இயேசு நற்செய்தி வாசகத்தின் வாயிலாக  சொல்கிறார்: "அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்" என்று. இந்த வார்த்தைகளின் ஆழத்தை உணர நாம் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 


1. உண்மையான அமைதிக்கு வழிவைக்கும் மோதல்

இயேசு கூறும் “வாள்” என்பது உடலை வெட்டும் ஆயுதம் அல்ல; அது உண்மை மற்றும் உண்மையை பின்பற்றும் திடமான மனநிலையை குறிக்கிறது. இயேசுவின் வார்த்தைகள், தன்னை முழுமையாக பின்பற்ற விரும்பும் ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு உள்நாட்டுப் போர்களையும், உறவுகளிலுள்ள சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும்.
நாம் கடவுளின் வார்த்தைகளின் படி வாழ வேண்டும் என  தேர்ந்தெடுக்கும் போது, பொய்யான அமைதியை விட்டுவிட்டு, உண்மையின்  மேல் அடிக்கோடிட்ட வாழ்க்கைக்கு பயணிக்கிறோம்.


2. சிந்திக்க வேண்டியவை – உண்மைக்கு  முதலிடம்

யார் தம் தந்தை, தாயை, மகனை, மகளை, இயேசுவை விட மேலாக நேசிக்கிறார்களோ, அவர்கள் இயேசுவின் சீடத்துவத்திற்கு   தகுதியற்றவர்கள் என அவர் கூறுகிறார். 

இவ்வார்த்தைகள் வழியாக  இயேசு நம் உறவுகளை மதிக்க வேண்டாம் எனக் கூறவில்லை, ஆனால் அவையெல்லாம் அவரை விட முதன்மையானதாக இருக்கக்கூடாது என்பதைக் கூறுகிறார்.

இயேசுவை பின்பற்றும் வாழ்க்கை என்பது ஒருவேளை வலி தரக்கூடிய ஒரு வாழ்வாக  இருக்கலாம். ஆனால், அது நிறைவான  மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான அர்த்தத்திற்கு வழிவகுக்கும்.


3.இழப்பில் மகிழ்வோம் ...

இயேசு சொல்லுகிறார்:

"தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்."

இது ஒரு வாழ்வுக்கான பாடம் வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று.

இயேசுவுக்காக நம்மை நாமே ஏற்றுக் கொண்டவர்களாய் தியாக உள்ளத்தோடு  செல்கின்ற வாழ்வில் நமது அன்றாட பயணம் என்பது சிலுவையைச் சுமந்து செல்லும் பாதை. அது சவாலானதாக இருந்தாலும், இறுதியில்  உடன் இருப்பை உணர்ந்ஆண்டவரின்து கொள்ள இது உதவியாக அமைகிறது. 


4. ஒரு சிறு செயலும் அர்த்தமுள்ளது

நற்செய்தியின் முடிவில், இயேசு குறிப்பிடுகிறார் –

“ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்.”

இது நம் வாழ்வின் சிறு செயல்களுக்கு மகத்தான அர்த்தமுள்ளது என்பதை  காட்டுகிறது. நாம் இயேசுவின் சீடர்களாக இருப்பதற்கான அடையாளம்     

ஆகவே, வாருங்கள்... இயேசுவுக்காக நம் சிலுவையை நாமே  ஏற்றுக்கொண்டு, அவரை வாழ்வின் முதன்மையானதாக வைத்து, அக்கட்டளைகளின் படி வாழ வரம் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம் 

 என்றும் அன்புடன் 

அருள் பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறை மாவட்டம் 

சனி, 12 ஜூலை, 2025

“Let Love for God and Love for Neighbor Be Our Two Eyes…” (13.7.2025)

“Let Love for God and Love for Neighbor Be Our Two Eyes…”


Dearly beloved in Christ Jesus,

With joy, I share this reflection with you today based on the Word of God. The message of today’s readings invites us to reflect deeply in our hearts on two essential aspects of Christian life:

  1. Love for God, and
  2. Love for Neighbor.

In the first reading, we are reminded that God’s commandments are not merely meant to be written on scrolls or carried externally on the body — rather, they are to be engraved in our hearts.

When we carefully look at the commandments Jesus gives through His life, we realize that they are essentially commands of love:

  1. To love the Lord your God with all your heart, soul, strength, and mind, and
  2. To love your neighbor as yourself.

These two commandments are not new inventions of Jesus. In fact, when we search Scripture closely, we see these principles already emphasized in Deuteronomy 6:5, where we are asked to love God with our whole being, and in Leviticus 19:18, which speaks about loving our neighbor. Jesus calls us to live these out from the heart, as a true path of discipleship.

We are therefore called and committed to center our lives around these two pillars:

  • Love for God, and
  • Love for Neighbor.

However, as we see in today’s second reading, just as St. Paul wrote to the people of Colossae, we are reminded that God is above all and before all, and we who recognize this truth must embody His commandments in both word and deed.

It is in this context that Jesus offers the parable of the Good Samaritan to the man who comes to test Him with the question:
"Who is my neighbor?"

Though the parable is not a historical event, Jesus uses it to reflect the social reality of that time and to deliver a powerful lesson.

The road from Jerusalem to Jericho takes about three hours on foot and is rough, hilly, and dangerous. Robbers often ambushed travelers there. One such man is attacked, stripped, beaten, and left half-dead.

A priest comes along but, seeing the wounded man, walks on the other side. Jewish priests, according to Numbers 19, could not perform temple duties if they came into contact with a dead body — they would be considered unclean for seven days. Perhaps, fearing that the man might die and that he would become ritually impure, the priest chose ritual duty over mercy.

Jesus deliberately includes this detail to show that performing God's service cannot come at the cost of ignoring human suffering. True service is never devoid of compassion.

Similarly, a Levite passes by. He too sees the man and walks away. Biblical scholars suggest that perhaps fear of being blamed for the man’s suffering kept him from helping — a fear we still encounter today in society. People often hesitate to help those in distress, worrying that it might bring trouble upon them. This societal tendency to ignore the suffering around us is something Jesus strongly challenges through this parable.

Finally, a Samaritan — a person despised and excluded by the Jews — sees the man, feels compassion, and takes action. Jesus highlights this to teach us that virtue and godliness are not confined to race, religion, or status. The Good Samaritan became a symbol of the true neighbor, and an image of what it means to love without boundaries.

Jesus invites us all through this story to ask not “Who is my neighbor?” but rather:
“To whom can I be a neighbor?”

Whoever is in need — regardless of caste, creed, religion, or background — is our neighbor. Even a small act of help we offer to them is considered part of God's own mission.

Those who love Jesus and live His words are invited to manifest the same compassion that the Good Samaritan showed.

Let us live this mission of God with humanity and mercy — realizing that true divine service is expressed through human kindness.

So today, let us pray for God’s grace:

  1. To serve Him faithfully, and
  2. To show love to others generously.

Let us walk in the light of His commandments, making His love our own and sharing it through our lives.

With love and prayers,
Fr. J. Sahaya Raj
Diocese of Trichy


இறை அன்பும் பிறர் அன்பும் நம் இரு கண்களாகட்டும் ... (13.7.2025)

இறை அன்பும் பிறர் அன்பும் நம் இரு கண்களாகட்டும் ...
ஆண்டவர் இயேசுவில்  அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய இறை வார்த்தையானது நாம் இதயத்தில்
 1. இறையன்பை குறித்தும் 
2. பிறர அன்பை குறித்தும் 
சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

இன்று நாம் வாசித்த முதல் வாசகத்தில் ஆண்டவரின் வார்த்தைகள் வெறுமனே அறைகளில் எழுதி வைப்பதற்கானதோ அல்லது உடலில் எழுதி வைத்துக் கொள்வதற்கானதோ அல்ல மாறாக அதை இதயத்தில் எழுதப்பட வேண்டியது என்பதை நமக்கு வலியுறுத்துகிறது ...

இயேசுவின் வாழ்வு மூலமாக நாம் நமது வாழ்வில் பின்பற்றுவதற்கு அவர் தந்த கட்டளைகள் என உற்று நோக்குகிற போது அது  இயேசுவின் அன்பு கட்டளைகள் அதாவது 
1. எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை அன்பு செய்வது. 
2. உன்னை நீ அன்பு செய்வதுபோல உனக்கு அடுத்து இருப்பவரை அன்பு செய்வாயாக. 

இந்த இரண்டு கட்டளைகளும் இயேசு நமக்கு கொடுத்த கட்டளைகள் ஆகும்.
இந்த இரண்டு கட்டளைகளையும் புதியது என்ற மனப்பான்மையோடு உற்றுநோக்காமல் விவிலியத்தின் துணைகொண்டு ஆராய்கின்றபோது இணைச் சட்டம் 6: 5 லேயே இந்த இருச் சட்டங்களை பற்றி வலியுறுத்தப்பட்டு இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்... இந் இரு சட்டங்களை இதயத்தில் இருத்திக் கொண்டு பயணிக்கவே இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார்.

இந்த அழைப்பை உணர்ந்தவர்களாக நாம் நமது வாழ்வில் இயேசுவின் அன்பு கட்டளைகளாகிய
 1.இறை அன்பையும் 
பிறர் அன்பையும் மையப்படுத்திய இரு கட்டளைகளையும் வாழ்வாக்க கடமைப்பட்டிருக்கிறோம் ...

ஆனால் பல நேரங்களில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கொலோசைய நகரப் பகுதி மக்களுக்கு எழுதியது போல அனைத்திற்கும் அப்பாற்பட்டவரும் முதன்மையானவருமாக  கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்ந்தவர்களாய் அவர் நமக்கு கொடுக்கும் கட்டளைகளை இதயத்தில் பதித்துக் கொண்டவர்களாய் நாம் சொல்லாலும் செயலாலும் சான்று பகர வேண்டும். 

 இதை வலியுறுத்தியே தன்னை சோதிக்கும் நோக்கத்தோடு வந்து கேள்வி எழுப்பிய நபரிடத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நல்ல சமாரியர் உவமையை எடுத்துரைக்கிறார் ...
இது வரலாற்று நிகழ்வு அல்ல என்றாலும் இயேசுவின் இந்த உவமை அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழலை முற்றிலுமாக நாம் உணர்ந்து கொள்ள உதவியாக உள்ளது.

ஏறக்குறைய மூன்று மணி நேரம் பயணம் செய்தால் மட்டுமே எரிக்கோவில் இருந்து எருசலேமுக்கு செல்ல முடியும். மிகவும் கரடு முரடான அந்தப் பாதையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது ஆனால் கொள்ளையர்கள் இருப்பதாக இயேசு சுட்டிக் காட்டுகிறார். இந்த கயவர்களால் குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கின்ற ஒருவரை கண்டும் காணாதவர் போல நகர்ந்து செல்லுகிற பணியை ஒரு குருவானவர் செய்கிறார்.  

பொதுவாக குருத்துவ பணியை செய்கின்ற யூதர்கள் இறந்து போன நபர்களின் உடலை தொட்டால் ஏழு நாட்கள் அவர்கள் தீட்டு பட்டவர்களாக கருதப்பட்டு இறைபணியை செய்ய இயலாது.  எண்ணிக்கை புத்தகம் 19 ஆம் அதிகாரத்தில் இதை பற்றி நாம் வாசிக்கலாம்.  இதை மையப்படுத்தி  ஆண்டவரின் பணியை செய்வது மட்டுமே முதன்மையானது என எண்ணியவராய் உயிருக்கு போராடிக் கொண்டு  கிடக்கின்ற இவரை எடுத்துச் செல்லும்போது ஒருவேளை இறந்து போனால் நாம் ஏழு நாட்கள் இறை பணி செய்ய இயலாது என்ற எண்ணத்தோடு அவர் அங்கிருந்து நகர்ந்து இருக்கலாம் என விவிலிய அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.

ஆனால் அடுத்தவருக்கு உதவாமல் ஆண்டவரின் பணியை செய்வது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல என்பதை இந்த சமூகத்தில் உள்ள அத்தனை பேரும் உணர்ந்து கொள்ளவே இயேசு இங்கு ஒரு குருவை சுட்டிக்காட்டுகிறார். என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.

அதுபோல லேவியர் ஒருவர் உயிர் போகின்ற நிலையில்  கிடக்கின்ற நபரை காண்கின்றார்.  கண்டதும் அவர் ஏதும் செய்யாமல் நகர்ந்து செல்கிறார்.  ஒருவிதத்தில் இந்த லேவியரின் செயல் அன்றைய சமூகத்தில் துன்புறுகிற ஒரு நபருக்கு உதவி செய்ய சென்றால் ஒருவேளை அவரை துன்பப்படுத்தியது நாம் தான் என்று சொல்லி இந்த சமூகம் நம்மை தண்டித்து விடுமோ..? என்ற அச்ச உணர்வு மேலோங்கி இருந்ததை சுட்டிக்காட்டும் வண்ணமாக இங்கு லேவியரை இயேசு உருவகமாக பயன்படுத்தினார் என விவிலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் ... இது நாம் வாழும் சமூகத்திலும் இதுபோன்ற நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. துன்புறுகிற ஒரு நபரை கண்டு அவருக்கு உதவி செய்தால் எங்கு நமக்கு பிரச்சனைகள் வந்து விடுமோ என்ற அச்ச உணர்வோடு இன்றும் துன்புறுகிற நபர்களை கண்டும் காணாமல் செல்லுகிற நபர்கள் நம் மத்தியில் உண்டு ... ஆனால் இயேசு இத்தகைய மனநிலையோடு பயணிக்காமல் இறைவனை நம்பி இறைவன் விரும்புகிற பணியை முன்னெடுப்பவர்களாக துன்புறும் நபர்களுக்கு துணை நிற்பது இறைவன் விரும்புகிற பணி என்பதை இந்த லேவியரை பயன்படுத்தி சுட்டிக்காட்டுவதாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

மூன்றாவதாக இந்த நபரை அதாவது உயிர் போகின்ற நிலையில்  கிடந்த நபரை ஒரு சமாரியர் சந்திக்கிறார். அவர் அவனுக்கு உதவி செய்கிறார். என்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார் ஒரு விதத்தில் அன்றைய சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாக கருதப்பட்ட இந்த சமாரியர்களிடத்தில் நற்பண்புகள் நிறைந்திருக்கிறது இந்த நற்பண்புகள் தான் இறைவன் விரும்பக் கூடியது பாகுபாடுகளை மையப்படுத்தி மனிதனை மனிதன் ஒதுக்காமல் அனைவரோடும் இணைந்து ஆண்டவருடைய பணியை இன்முகத்தோடு முன்னெடுக்கக்கூடிய நபர்களாக நாம் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சமாரியரை மையப்படுத்தி இயேசு இந்த சமூகத்திற்கு பாடம் கற்பித்தார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம் ... அடுத்திருப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை அரவணைப்பதும் அவர்களுக்கு நம்மால் இயன்ற சின்னஞ்சிறிய உதவிகளை செய்வதும் தான் இயேசுவின் இறைப்பணி ...இயேசுவை அன்பு செய்கின்ற அவரின் வார்த்தைகளை வாழ்வாக்குகின்ற நாம் அத்தனை பேருமே நமது வாழ்வில் இந்த இயேசுவிடம் காணப்பட்ட நற்பண்புகளை நமது நற்பண்புகளாக மாற்றிக்கொண்டு இறைவனையும் மனிதனையும் ஒருசேர மதித்து இறைப்பணி என்பது  மனிதநேயத்தோடு நாம் செய்கிற செயல்கள் என்பதை உணர்ந்தவர்களாய்
 1. இறைபணியிலும் 
2. பிறரன்பு பணியிலும் நம்மை இணைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறையருள் வேண்டுவோம் ...

என்றும் அன்புடன் 
அருள்பணி ஜே. சகாயராஜ் 
திருச்சி மறைமாவட்டம் 

வெள்ளி, 11 ஜூலை, 2025

"Let Us Live in the Way God Desires..."(12.7.2025)


"Let Us Live in the Way God Desires..."


Dear brothers and sisters in Christ,
I am happy to reflect with you today based on the Word of God.

“Do not be afraid of those who kill the body but cannot kill the soul; rather, fear the One who can destroy both soul and body in hell.”

Through this Word, we are called today to live our lives as people who fear only God and do only what God desires.


1. Disciples Must Become Like Their Master (Jesus)

"A disciple is to become like his master."
This is a call — a clear invitation that we too must live like Jesus.

Even when we face opposition and rejection, we must live in such a way that we pursue only what is pleasing to God in all situations.
Let us not live in fear of those around us, but with reverence only for the Lord — always aware that He watches over all our actions.
In both word and deed, we must become true disciples (students) of Jesus, following Him faithfully.


2. Nothing is Hidden from God's Sight

"There is nothing covered that will not be revealed."
These words point us to a truth: Nothing is hidden from the Lord’s eyes.
Even the small actions we think go unnoticed — this Word invites us today to stop and examine them.

Let us realize that the Lord sees everything. We are called to act in every circumstance in a way that is pleasing to Him, and to ask Him in prayer for the strength to do so.


3. It is God Who Protects Us

In today’s Gospel, Jesus uses the example of sparrows:
Even a tiny bird is not forgotten by God.
How much more, then, will He care for us, His beloved children?

He reminds us: “Even the hairs of your head are numbered.”
This reveals that He knows us completely and cares deeply for us.

Let us walk His path with deep trust, striving to be the people He desires us to be.


4. If We Acknowledge Him, He Will Acknowledge Us

Jesus speaks very directly:
“Whoever acknowledges Me before others, I will acknowledge before My Father.”

This reminds us of an important truth — we must sincerely accept and support those who live out the Lord’s mission among us.
When we do, we too will be accepted by God.


Therefore, today, as God’s people:

Let us live each day aware of His protection,
knowing that nothing is hidden from His sight,
and strive with our words and deeds to live in a way that pleases Him.

Let us ask for His grace — and God will continue to bless us.

With love always,
Fr. J. Sahaya Raj
Diocese of Tiruchirappalli

இறைவன் விரும்புகிற வகையில் வாழ்வோம் ...(12.7.2025)

இறைவன் விரும்புகிற வகையில் வாழ்வோம் ...


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

இன்றைய  இறை வார்த்தையின் அடிப்படையில் உங்கள் இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் 
“உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம்; ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.”

கடவுள் மீது மட்டும் அச்சம் கொண்டவர்களாக கடவுள் விரும்புகிற செயல்களை மட்டும் முன்னெடுத்துச் செல்பவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த இறை வார்த்தை வழியாக இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.

1. மாணவர்கள் தங்கள் குருவைப் ( இயேசுவைப்) போல ஆக வேண்டும்

"சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்.”
இது ஒரு அழைப்பு — நாமும் இயேசுவைப் போலவே வாழ வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது.  எதிர்ப்புகள் வந்தாலும் நிராகரிப்புகள் வந்தாலும் எல்லா சூழலுக்கு மத்தியிலும் கடவுள் விரும்புகிற காரியங்களை மட்டும் முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்களாக நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.  அருகில் இருப்பவர்களுக்கு அஞ்சுபவர்களாக இருக்காமல் ஆண்டவர் ஒருவருக்கு அஞ்சக்கூடிய மனநிலையோடு ஆண்டவர் நம் செயல்களை உற்று நோக்குகிறார் என்பதை உணர்ந்தவர்களாக நாம் சொல்லாலும் செயலாலும் நாம் இயேசுவை பின்பற்றுகின்ற நபர்களாக அவரது உண்மை சீடர்களாக (மாணவர்களாக) நமது வாழ்வை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

  

2. இறைவனின் பார்வையில் எதுவும் மறைக்கப்படாது ...

 “மூடப்பட்டிருப்பது ஒன்றும் வெளிப்படாமல் இருக்காது.”  

இவ்வார்த்தைகள் ஆண்டவரின் பார்வையில் எதுவும் மறைக்கப்படவில்லை என்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது எவருக்கும் தெரியாது என எண்ணி நாம் செய்கிற சின்னஞ்சிறிய காரியங்களை கூட இன்று நிறுத்திக் கொள்வதற்கான ஒரு அழைப்பாக இதை நாம் எடுத்துக் கொண்டு பயணிக்கலாம் ... ஆண்டவர் அனைத்தையும் உற்று நோக்குகிறவர் அவருக்கு உகந்தவர்களாக எல்லா சூழலிலும் நாம் செயல்படுவதற்கான ஆற்றலை இன்றைய நாளில் இறைவேண்டலாக பெற்றுக் கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

3.  நம்மை பாதுகாப்பது இறைவன்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சிட்டுக் குருவிகளை எடுத்துக்காட்டுகிறார்:
ஒரு சிறிய பறவைக்கும் இறைவன் கவனம் கொடுக்கின்றார், நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கும்போது அவர் நமக்கு எவ்வளவு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். இதை உணர்த்தும் வண்ணமாகத்தான்  "நம் தலைமுடி கூட எண்ணப்பட்டிருக்கின்றது என்கிறார், அவர் நம்மை முழுமையாகவே தெரிந்தவர் என்பதையும், நமக்காக அக்கறை கொண்டவரெனும் உண்மையையும் உணர்ந்தவர்களாய் ஆழமான நம்பிக்கையோடு அவர் காட்டுகிற பாதையில் அவர் விரும்புகிற மக்களாக நாம் பயணிக்க வேண்டும்.

4. ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள்ளப்படுவோம் ...

இயேசு மிகவும் நேரடியாகச் சொல்லுகிறார்:
"மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை... நானும் ஏற்றுக்கொள்வேன்."
இது ஆண்டவரின் பணியை செய்து வாழுகிற நம் மத்தியில் இருக்கின்ற நபர்களை நாம் மனதார முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்போது கடவுளால் நாமும் ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்ற உயரிய சிந்தனையை நமக்கு என்று வழங்குகிறது.

எனவே இன்றைய நாளில் இறைவனின் மக்களாக நாம் அனைவரும் இறைவனின் பாதுகாப்பை ஒவ்வொரு நாளும் உணர்ந்தவர்களாய் ...இறைவனின் பார்வையிலிருந்து எதுவும் மறைக்கப்படாது என்பதை புரிந்து கொண்டவர்களாய் நாம் சொல்லையும் செயலையும் இறைவன் விரும்புகிற வகையில் அமைத்துக் கொள்ள இறையருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே. சகாயராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 

வியாழன், 10 ஜூலை, 2025

It is not you who speak; it is the Spirit of your Father speaking through you…(11.7.2025)

“It is not you who speak; it is the Spirit of your Father speaking through you…”


Dear brothers and sisters,
In today’s Gospel, the words that Jesus speaks to His disciples invite us to reflect deeply. The phrase, “Behold, I am sending you out as sheep among wolves,” emphasizes the need for us to act with great caution. Jesus makes it clear in advance that living as His witnesses in this world is not going to be easy. We must understand and accept this truth.

As we strive to live faithfully in the world, many will oppose us — sometimes even members of our own family. Yet, we need not be afraid. Even if we feel confused or unsure about what to say in those moments, we are comforted by this great promise:
“It is the Spirit of your Father who will speak through you.”

Jesus gives us two important instructions here:

  1. “Be wise as serpents and innocent as doves.”
    – In our day-to-day life, both wisdom and purity are essential.

  2. “Do not worry about what to say.”
    – When we walk in trust with God, the Holy Spirit will speak through us.

Today, we face many trials and sufferings. But the promise of Jesus is simple and sure:
“The one who endures to the end will be saved.”

So, let us live without fear. Let us share our faith and witness with hope, guided by the Holy Spirit.

புதன், 9 ஜூலை, 2025

பேசுபவர் நீங்கள் அல்ல; உங்கள் தந்தையின் ஆவியாரே...” (11.7.2025)


“பேசுபவர் நீங்கள் அல்ல; உங்கள் தந்தையின் ஆவியாரே...”


அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்குச் சொல்லும் வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்கச் அழைப்பு விடுகிறது. “இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புகிறேன்” என்ற வார்த்தைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வுலகில் இயேசுவின் சாட்சிகளாக வாழ்வது எளிதல்ல என்பதை இயேசு நம்மிடம் முன்கூட்டியே சொல்கிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் உலகத்தில் விசுவாசத்துடன் வாழ, நம்மை எதிர்த்து நிற்பவர்கள் பலர் அதில் சிலர் நமது குடும்ப உறுப்பினர்களே ... ஆனால், அச்சப்பட வேண்டாம். நாம் ஒருவேளை என்ன பேச வேண்டும் என தெரியாமல் நிலைகுலைந்து போனால் கூட, தந்தையின் ஆவியாரே நம்முள் இருந்து  பேசுவார் என்பதே நம்மை ஊக்கப்படுத்தும் நற்செய்தியாக உள்ளது.

இயேசு தரும் இரண்டு முக்கிய அறிவுறுத்தல்கள் இங்கே:

  1. பாம்பைப் போல முன்மதி உடையவர்களும், புறாவைப் போல கபடமற்றவர்களுமாக இருங்கள் – நம் நடைமுறை வாழ்வில் புத்திசாலித்தனமும் தூய்மையும்  தேவையானவை.

  2. எப்படிப் பேசுவது என்று கவலைப்பட வேண்டாம் – நாம் இறைவனை நம்பி நடக்கும்போது, தூயஆவி நம்மைப் பேசச் செய்கிறார்.

இக்காலத்தில் நாம் பல சோதனைகளையும் துன்பங்களையும் சந்திக்கிறோம். ஆனால், இயேசுவின் வாக்குறுதி எளிமையானது – "இறுதிவரை மன உறுதியுடன் இருப்போர் மீட்கப்படுவர்."

எனவே, பயப்படாமல், நம் வாழ்க்கையில் நம்பிக்கையையோடு தூய ஆவியின் வழியில் பிறரிடம் பகிர்ந்து வாழ்வோம்.


நம் வாழ்வு எதில் வேரூன்றப்பட வேண்டும் ...(17.9.2025)

அன்பிற்குரிய சகோதரர் சகோதரிகளே, நமது அடித்தளம்... திருத்தூதர் பவுல் கிறிஸ்துவின் மறைநிகழ்வுகளை மிகச் சிறிய சொற்களிலே மிகப் பெரி...