இன்று நாம் ஆண்டவராகிய இயேசு கூறும் ஒரு மிக முக்கியமான “இரக்கத்தை அல்ல, பலியை விரும்புகிறேன்” என்ற இறை வார்த்தையின் அடிப்படையில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
1. இயேசுவின் இரக்கத்தின் இயல்பு
இயேசு மனிதர்களின் உள்ளத்தையே நோக்குகிறார்.
பாவிகள், சுங்கவாரி வசூலிப்போர் , வறியோர், நோயாளிகள் – இவர்களுடன் அவர் வேறுபாடு இன்றி உடனிருக்கிறார்.
இயேசுவின் பார்வை முற்றிலும் மாறுபட்டது ...
1. தண்டனை அல்ல, இரக்கம்.
2. மருந்து தேவையானது ஆரோக்கியருக்கு அல்ல, நோயாளிகளுக்கே” என்று இயேசு கூறுகிறார் (மத் 9:12).
2. பலிக்கும் இரக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு
யூதர்களின் பார்வையில் பலி என்பது ஒரு மதச்சடங்காக மாறிவிட்டது.
அவர்கள் இருதயமற்ற முறையில் பலிகளை அளிக்கத் தொடங்கினார்கள். ஆனால் இரக்கம், கரிசனை, நட்பு, உண்மை, அன்பு போன்ற உண்மையான ஆன்மீக பண்புகள் யூதர்களால் புறக்கணிக்கப்பட்டன.
1. நாம் ஆன்மீக கடமைகளைச் செய்வதிலேயே முழுமையாய் இருக்கிறோமா?
அல்லது, இறைவனின் இரக்கத்தை அனுபவித்து பிறர் மீது இரக்கம் காட்டுகிறோமா?
இந்த யூதர்களின் மனநிலை இன்று நம்மில் மலர்ந்திருக்கிறதா...? என சிந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம்.
3. இரக்கம் காட்டும் வாழ்க்கையே உண்மையான பலி
இரக்கம் என்பது கண்களில் வரும் கண்ணீர் அல்ல,
இதயத்தில் பிறக்கும் அன்பு.
இது ஒருவரின் துயரத்தை உணர்ந்து அவரோடு நடந்துகொள்வது எனப் பொருள் கொள்ளலாம் .
இன்றைய வாசகங்களின் அடிப்படையில் நம்பிக்கைக்குரிய ஒரு வாழ்வுக்கான பாடம்:
"இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நம் உடைமைகள் அல்ல,
நம் உண்மை அன்பும், மன்னிப்பும், இரக்கமும் தான்".
1. இன்று நம் குடும்பத்தில், பள்ளியில், இணைந்து வாழுகிற துறவறையில்
நாம் ஒருவர் மீது ஒருவர் இரக்கத்தோடும், பொறுமையோடும் நடந்துகொள்கிறோமா?
2. நாம் பாவிகளை ( நமக்கு எதிராக தீங்கு இழைத்தவர்களை) மதிக்கிறோமா? அல்லது ஒதுக்குகிறோமா?
3. நாம் ஏழைகள், நோயாளர்கள், துன்புறுவோர் மீது இரக்கம் காட்டும் செயல்களை முன்னெடுக்கின்றோமா?
சிந்திப்போம் ...
அன்று இயேசு சுங்கவாரி வசூலிப்பவரின் வீட்டில் அமர்ந்தார் .
இன்று அவர் என் வீட்டிற்கும், உங்கள் உள்ளத்திற்கும் வர விரும்புகிறார்
இரக்கத்தின் அடிப்படையில்.... இறக்க செயல்களால் அவரை இன்முகத்தோடு வரவேற்போம் ....
செபம் :
இறைவா!
இரக்கம் நிறைந்த உமது இருதயத்தை நாங்களும் பின்பற்றி எங்கள் இதயத்தை புதுப்பித்துக் கொண்டு இரக்கத்தோடு இணைந்து வாழ வரம் தாரும்....
ஆமேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக