ஓய்வு நாள் கடவுளின் நாள்...
இன்றைய இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்... இயேசுவின் வார்த்தைகள், “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” எனும் இவ்வார்த்தைகள் நம்மை கடவுளின் கருணையும், மனிதர் மீதான அவருடைய அக்கறையும் பற்றிய ஒரு ஆழ்ந்த உணர்வுக்கு அழைத்துச் செல்கிறது.
ஓய்வு நாள் என்பது எதற்காக?
ஓய்வு நாள் என்பது சபாத், கடவுள் உருவாக்கிய ஓர் நாள். பழைய ஏற்பாட்டில், இது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட நாளாகும் – ஆறு நாட்கள் உலகத்தை படைத்த இறைவன், ஏழாம் நாளில் ஓய்ந்தார். அந்த ஓய்வு, ஒரு புனித நாளாக அறிவிக்கப்பட்டது (விடுதலைப் பயணம் 20:8–11).
ஆனால் காலப்போக்கில், ஓய்வு நாள் கடவுளை வணங்கும் நாளாக இருப்பதைவிட, கட்டுப்பாடுகளின் நாளாக மாறிவிட்டது. இந்நாளில் “செய்யக்கூடாதது என்ன?”, “எப்படி பணிகளை தவிர்க்கலாம்?” என்பதற்கே அதிக கவனம் செலுத்தப்பட்டது . இன்றும் நாம் வாழும் சமூகத்தில் கடவுளுக்கான நேரம் ஒதுக்க இயலாத ஒரு நிலையில் நாம் பம்பரம் போல சுழன்று கொண்டிருப்பதைசற்று நிறுத்தி கடவுளுக்கான நேரத்தை செலவிட வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்... வாரத்திற்கு ஒரு முறை கூட கடவுளுக்கு நேரம் ஒதுக்காத மக்களாக இன்று நம்மில் பலர் இருக்கிறோம் என்பது நிதர்சனமான உண்மை ...
ஆனால் இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது ஓய்வு நாளில் இதை செய்யக்கூடாது அதை செய்யக்கூடாது என சட்ட திட்டங்களை வலியுறுத்திய சமூகத்தில் நன்மைத்தனங்களை தொடர்ந்து முன்னெடுப்பவராக தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். ஆனால் பரிசேயர்கள் இயேசுவை குற்றம் சாட்டுகிறார்கள். சில நேரங்களில் இயேசுவோடு உடன் பயணிக்கின்ற சீடர்களை மையப்படுத்தி அவர்கள் குற்றம் சாட்டினார்கள். "ஓய்வு நாளில் உம் சீடர்கள் தானியங்களை எடுத்து சாப்பிடுகிறார்கள்!" — இது சட்டத்தை மீறுதல் என்று அவர்கள் கருதினர்.
ஆனால் இயேசு அவர்களுக்குப் புதுமையான பதிலை அளிக்கிறார்:
- தாவீது பசியுற்ற வேளையில் அர்ப்பண அப்பங்களை உண்டதைக் குறிப்பிடுகிறார்.
- கோவிலில் குருக்கள் ஓய்வு நாளிலும் பணியாற்றுவதை எடுத்துக்காட்டுகிறார்.
- இறைவனின் இதயத்தை நோக்கி ஒரு உண்மையை சொல்கிறார்:
👉 “நான் பலியைக் விரும்பவில்லை; இரக்கத்தையே விரும்புகிறேன்!”
இவை எல்லாம் நமக்கு இயேசுவின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
இறைச்சட்டம் மனிதனுக்காக
அல்லது
மனிதன் இறைச்சட்டத்துக்காக அல்ல!
மனிதருக்காக சட்டம், மனிதன் சட்டத்துக்காக இல்லை
-
கடவுளின் நோக்கம்:
கடவுள் நமக்காகச் சட்டங்களைத் தந்தார். அந்த சட்டம் நமக்கு நல்லது தரவேண்டும், நம்மை கட்டுப்படுத்த அல்ல.- நாமும் சட்டங்களை கடவுளின் நியாயத்தோடு, இரக்கத்தோடு அணுக வேண்டும்.
-
கருணை – கடவுளின் இதயத்தின் மையம்:
“நீங்கள் ‘செலுத்தும் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் அர்த்தத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ...”
இதுவே நம் வாழ்க்கையின் மையமாகவும் அமைய வேண்டும். -
நமக்கும் ஓய்வு தேவை:
ஓய்வு நாள் என்பது தொழிலிலிருந்து ஓய்வது மட்டும் அல்ல.
அது கடவுளோடு சேரும் நாள், அவரை நினைக்கும் நாள், அவரது அருளுக்குள் நம்மை புதுப்பிக்கும் நாள்.
எனவே இனி வரும் வெண்ண நாட்களில்....
- நம்முடைய ஆன்மீக கடமைகள் கடமை உணர்வோடு நம்மால் செய்யப்பட வேண்டும்.
- கடவுளின் அருளின் அடிப்படையில் மற்றவர்களை மதிக்க வேண்டும்; அவர்கள் தவறு செய்தாலும், கடவுளின் பார்வையில் அவர்கள் மதிப்புடையவர்கள். என்பதை மனதில் இருதி “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” — என்பதன் அடிப்படையில் மனித அடிப்படையாகக் கொண்டு நாம் செயல்பட வேண்டும்
எனவே இனி வருகின்ற நாட்களில் நம் வாழ்வில்...
- இரக்கத்துடன் வாழுவோம். சட்டத்தின் பெயரில் இருதயமில்லாத தீர்ப்புகள் வழங்காதிருப்போம்.
- பிறரின் தேவைகளை உணர்வோம, குறிப்பாக அவர்கள் தேவையில் இருக்கும்போது கடவுளின் கரங்களை போல நாம் இருப்போம்.
- ஒவ்வொரு ஞாயிறும் கடவுளுடன் தொடர்பு கொள்வதற்கான நாள் என்பதை உணர்ந்தவர்களாக கடவுளோடு நேரத்தை செலவிடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக