ஞாயிறு, 6 ஜூலை, 2025

ஆண்டவரின் பணிக்கான அழைப்பு... (8.7.2025)

ஆண்டவரின் பணிக்கான  அழைப்பு... 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் கண்டு கொள்ளும் முதன்மையான மூன்று அம்சங்கள்

1. இயேசுவின் இரக்கம்:

இயேசு ஆள் பார்த்து செயல்படாதவர் . அவர் யாரையும் ஒதுக்கவில்லை. நோயாளிகள், பேய்பிடித்தவர்கள், ஏமாற்றப்பட்ட மக்கள் — இவர்களை அவர் கண்டபோது இரக்கம் கொண்டார்.
அவர் அவர்களது உடலையும், மனதையும், ஆன்மாவையும் தொட்டு  குணமாக்கினார். இதுவே என்று நாம் வாழும் சமூகத்தில் நாம் செய்ய வேண்டிய பணியாக அமைகிறது. 
இந்நேரத்தில் "இறக்கும் வரை இரக்கத்தோடு இருப்போம்..." என்ற புனித அன்னை தெரசாவின் வாழ்வின் வரிகளை நாம் இதயத்தில் இருத்திக் கொள்வது ஏற்றதாக இருக்கும்.

2. இஸ்ரயேல் மக்கள்:

விவிலியத்தின் துணையோடு வரலாற்றை திருப்பி பார்க்கின்ற போது இஸ்ரயேல் மக்கள் "ஆயர் இல்லாத ஆடுகள் போல" அலைந்து திரிந்தனர். அவர்களை அரவணைத்து வழி நடத்துகிற பணியை இயேசு முன்னெடுத்தார். 
இன்றைய காலத்திலும் நாம் வாழும் சமூகத்தில் ஆயரெல்லாம் ஆடுகளைப் போல அலைந்து திரிகின்ற இயேசுவை அறியாதவர்களையும்,  இயேசுவை அறிந்தும் அவர் வழி செல்லாதவர்களையும், இளம் தலைமுறையினரையும் வழிகாட்டி வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நாம் அத்துணை பேருக்கும் உண்டு என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு உணர்த்துகிறது.

3. ஆண்டவரின் பணிக்கான  அழைப்பு:

அறுவடைகுதி வேலையாட்கள் குறைவு என்பதை  ஆன்மாக்கள் அறுவடைக்கு தயாராக இருக்கின்றன; ஆனால் அவற்றைப் பராமரிக்கவே தேவையான வேலையாளர்கள் இல்லை. என்ற கோணத்தில் நாம் உணர வேண்டும்
இது நம் அனைவருக்குமான அழைப்பு ... இது வெறுமனே துறவரத்தாருக்கானது மட்டுமல்ல அனைவருக்கமான அழைப்பு ... இந்த அழைப்பை இதயத்தில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் நம் சொல்லாலும் செயலாலும் இயேசுவின் பணியாளர்களாய் நாம் வாழவும் மற்றவருக்கு வழிகாட்டவும் இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


என்றும் அன்புடன் 

அருள்பணி ஜே.சகாயராஜ் 

திருச்சி மறைமாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"Let Us Live in the Way God Desires..."(12.7.2025)

"Let Us Live in the Way God Desires..." Dear brothers and sisters in Christ, I am happy to reflect with you today b...