“உடன்படிக்கையில் நிலைத்திருக்க ...”
தூய ஜோக்கிம் மற்றும் அன்னம்மாள்
அன்புடைய சகோதர சகோதரிகளே,
இன்றைய நற்செய்திப் வாசகங்களும், இன்று திரு அவை நினைவு கூறுகின்ற தூய ஜோக்கிம் மற்றும் அன்னம்மாள் தம்பதியர் வாழ்வும் ஆண்டவரோடு ஒன்று இருக்கின்ற உடன்படிக்கையில் நிலைத்திருக்க நமக்கு அழைப்பு விடுகிறது ...
உடன்படிக்கையின் வழியாக – கடவுளுடன் ஒரு உறவு
மோசே, மக்கள் மற்றும் கடவுளுக்கு இடையில் ஏற்படுத்தும் உடன்படிக்கையில், இரத்தம் ஒரு புனிதமான அடையாளமாக உள்ளது.
- இது கடவுளுடன் ஏற்படுத்தப்படும் உறவைச் சான்றுப்பெறும் ஒரு பிணைப்பு.
- மக்கள், “ஆண்டவர் சொன்னதை நாங்கள் செய்வோம்” என்று ஒப்புக் கொள்கின்றனர்.
- மோசே, “இந்த இரத்தம் ஆண்டவர் உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம்” என்று உறுதி செய்கிறார்.
இன்றைய நம் வாழ்விலும், நாம் கடவுளோடு உடன்படிக்கை செய்து வாழ்கிறோமா?
பல நேரங்களில் பல விதமான உடன்படிக்கைகளை நாம் கடவுளோடு செய்வது உண்டு ஆனால் கடவுளின் முன்னிலையில் நாம் செய்கிற உடன்படிக்கையில் எந்த அளவிற்கு நிலை திருக்குறள் என்பதுதான் இந்த நாளில் நாம் நமக்குள் எழுதி பார்க்க வேண்டிய கேள்வியாக இருக்கிறது ... நீ எதை செய்தால் நான் அதை செய்வேன் என்ற மனநிலையில் இருந்து மாறுபட்டவர்களாய் இறைவனோடு இணைப்பில் இருக்க நாம் இதயத்தில் உறுதி ஏற்போம்.... இதை மையப்படுத்தியே இன்றைய நற்செய்தி வாசகத்தையும் நாம் உற்று நோக்க கடமைப்பட்டிருக்கிறோம் ...
🌾அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள்
இயேசு எடுத்துரைக்கும் நல்ல நிலத்தில் விளைந்த கலைகள் உவமை – நம் வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் நம்மைச் சூழ்ந்துள்ள சூழ்நிலையையும் எடுத்துக் கூறுகிறது.
- நம் வாழ்வில் நம்மை சோதிக்கவும் சலிப்படையவும் பின்னடையவும் செய்கின்றன “களைகள்” – நம் வாழ்வில்எல்லா நிலைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன.
- ஆனால் கடவுள் நமக்காக திட்டமிட்டுள்ள அறுவடை நாள் வரும் வரை துணிவுடன் வாழ அழைக்கப்படுகிறோம்.
இந்த இறை வார்த்தை வழியாக இறைவன் நமக்கு எடுத்து உரைப்பது
- தாமதமாக இருந்தாலும், நம்பிக்கையை விட்டுவிட வேண்டாம்.
- நம்மை துன்புறுத்துவோருக்கு பதில் துன்பத்தை தராமல் இரக்கம் கொள்ள வேண்டும்.
- நம்மை அறுவடைக்குத் தயார்படுத்தும் கடவுளின் கருணை முகமாக நாம் செயல்கள் அமைந்திட வேண்டும். அதற்கான உடன்படிக்கையை இறைவனோடு என்னாளும் செய்யக்கூடியவர்களாகவும் அதில் நிலைத்திருப்பவர்களாகவும் நம் வாழ்வை நாம் நெறிப்படுத்த வேண்டும்.
தூய ஜோக்கிம் மற்றும் அன்னம்மாள் – நம்பிக்கையின் நாயகர்கள்
அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், விரக்தி, எதிர்பார்ப்பு, ஜெபம், அர்ப்பணிப்பு என்பவை இடம்பெற்றுள்ளன என்பதை அவர்களின் வாழ்வு மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.
- குழந்தையற்ற துக்கம் – பல ஆண்டுகள், ஆனாலும் ...
- நம்பிக்கையை இழக்காத ஜெபம் இவர்களிடத்தில் இருந்தது.
- இறுதியில், கடவுளின் கருணையால் வானதூதரின் வழிகாட்டுதலோடு அன்னை மரியாள் இவர்களிடத்தில் பிறக்கிறார்.
- காத்திருந்து கடவுளின் அருளால் பெற்றுக் கொண்ட மரியாவை கோவிலில் அர்ப்பணிப்பு செய்வது இவர்கள் கடவுளோடு வந்த உடன்படிக்கையை உணர்த்துகிறது.
இன்று நினைவு கூறப்படுகின்ற இவர்களின் வாழ்வு இன்று நமக்குத் தருகின்ற வாழ்வுக்கான பாடம் ...
- நம்முடைய குடும்ப உறவுகளை, நாம் எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? மேலும் அர்ப்பணம் உணர்வோடு அவர்களோடு இணைந்து ஆண்டவருக்கு உகந்த பாதையில் பயணிக்கின்றோம்?
- இறைவன் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகிய குழந்தைகளை எப்படி இறைவனுக்குரிய பாதையில் ஒவ்வொரு நாளும் நாம் வழி நடத்துகிறோம்?
- ஆண்டவர் இயேசுவை அறிந்தவராக நம் மத்தியில் நம் குடும்பங்களில் வாழுகிற முதியவர்களை நாம் எப்படி பராமரிக்கிறோம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக