வெள்ளி, 4 ஜூலை, 2025

அறுவடை மிகுதி… வேலையாள்கள் குறைவு!... (6.7.2025)

அறுவடை மிகுதி… வேலையாள்கள் குறைவு!

(லூக்கா 10:2)


அன்புக்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எழுபத்திரண்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து, தம்முடைய பணிக்காக இருவராக இருவராக அனுப்புகிறார்.

இயேசுவின் இறையாட்சி பணி தனியாக மட்டும் அல்ல, அனைவரையும் பங்கேற்க வேண்டிய  ஒரு சமூகப் பணி என்பதை நமக்கு இன்றைய வாசகங்கள்  நினைவூட்டுகிறது.

1. அறுவடை மிகுதி; வேலையாள்கள் குறைவு

இயேசு இந்த வார்த்தைகளில் இறை ஆட்சி பணிக்கான  வேலை இவ்வுலகில் அதிகம் இருக்கிறது; ஆனால் அதற்குத் தேவையான அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் குறைவாகவே இருக்கின்றர்கள்...

திருமுழுக்கு பெற்ற அனைவரும் ஆண்டவர் இயேசுவை அறிக்கையிட சிறு வயது முதலே கடமைப்பட்டிருக்கிறோம் ....ஆனால் ஆர்வத்தோடு அர்ப்பணம் உணர்வோடும் இப்பணியை தொடர்கிறவர்களாக நாம் இருக்கிறோமா? என சிந்திக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுகிறது....

இன்றும் நாம் வாழும் சமூகத்தில் பலவிதமான ஏற்றத்தாழ்வுகள் ....

சமீபத்தில் ரிதன்யா என்ற புதுமணப்பெண்  திருமணமான 78 நாட்களில் வரதட்சனை கொடுமையை தன் பெற்றோரிடம் கூறிவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வு என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது ....

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு பலவிதமான துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்து போன அஜித்குமார் என்ற பெயரும் நம் காதுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது ...

அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் பகிர வேண்டிய சமூகம் இன்னும் இதை பகிர்ந்து வாழும் மனம் இல்லாத நபர்களோடு தான் பயணிக்கிறது.... 

இப்படிப்பட்ட சூழலில் இயேசுவின் வார்த்தைகளான "அறுவடை மிகுதி; வேலையாள்கள் குறைவு... "

என்பது நாம் சிந்திப்பதற்கு முற்றிலும் பொருத்தமான வார்த்தைகள் ஆகும்.

இறையாட்சிப் பணியை செய்கின்ற அனைவருக்கும் இன்று ஆண்டவர் தருகின்ற ஒரு எச்சரிக்கை...." ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவது போல..." நீங்கள் அனுப்பப்படுகிறீர்கள் என்பதாகும்...

இது இயேசு கொடுக்கும் உண்மையான எச்சரிக்கை. இறையாட்சியைப் பரப்பும் பணியில் பலவிதமான சவால்கள் உண்டு... இடையூறுகளும்... விமர்சனங்களும்... எதிர்ப்புகளும்... உண்டு.

இதற்குச் சிறந்த உதாரணம் இயேசுவின் வாழ்வு ... எல்லோரும் இயேசுவை ஏற்று இருந்தால் இயேசுவின் இறப்பு இல்லாமல்  போயிருக்கும் ... ஒவ்வொருவரும் சவாலான சூழ்நிலையில் இறைவனுடைய சாட்சிகளாக இருக்கவேண்டிய கட்டாயத்துடன் இறையாட்சிபணியில் இணைந்து பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

இன்று இறைய ஆட்சிப் பணியை செய்வது எளிதான காரியம் அல்ல ...

அதே சமயம் இறையாற்றி பணியில் பங்கம் விளைவிக்கும் பணியில் நாம் பங்கேற்காமல் இருப்பது அவசியம்.... எனவே செல்லும் இடமெல்லாம் அமைதியை பகிர்ந்து  ... வாழ வேண்டும் என்பது இயேசு என்று நமக்குத் தரும் வாழ்வுக்கான பாடமக அமைகிறது.

இயேசு கூறுகிறார்: “இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!” அமைதி என்பது நாம் சுமந்து செல்லும் முதன்மையான பரிசு. நாம் செல்லும் இடங்களில் அமைதி ஊட்டுபவர்களாக இருக்கவேண்டும். இதுவே நம் பணியின் அடிப்படை தாரக மந்திரமாக அமைய வேண்டும்.

இந்த இறையாட்சி பணி வாழ்வில் பல நேரங்களில் நாம் எதிர்பாராத மகிழ்ச்சி நம்முடையதாக மாறலாம்  

உதாரணமாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் எழுபத்திரண்டு சீடர்கள் திரும்பி வந்து மகிழ்வுடன் கூறுகிறார்கள்: “பேய்கள் கூட உமது பெயரால் எங்களுக்கு அடிபணிகின்றன!” என்று சொல்லி மகிழ்கிறார்கள் ஆனால் இயேசு சொல்லுகிறார்: “உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்!” என்று...

இவ்வுலகில் கிடைக்கும் பெயருக்கும், புகழுக்கும், பதவிக்கும், அதிகாரத்திற்கும் மேல் உள்ள மகிழ்ச்சியை நடாது.., நம் பணியால் நம் பெயர்கள் விண்ணகத்தில் பதியப்பட்டுள்ளது. இதுவே உண்மையான மகிழ்ச்சி என்பதை உணர்ந்து வாழ இன்று உறுதியேர்போம்...

“அறுவடை மிகுதி… வேலையாள்கள் குறைவு” என்ற இயேசுவின் அழைப்பை உணர்ந்து நாம் அறுவடைக்கு தயாராகி நம் பணியால் விவேகத்துடன் வீறு நடைப்போடுவோம்... 


என்றும் அன்புடன்...
அருள்பணி. ஜே. சகாய ராஜ்,
திருச்சி மறைமாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Your Faith Has Made You Well - (7.7.2025)

"Your Faith Has Made You Well" (Matthew 9:22) Dear brothers and sisters in Christ, Today’s Gospel passage helps us ...