"ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?"
அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே,
இன்றைய நற்செய்திவாசகத்தில் மரியா அழுதாள் என வாசிக்கிறோம். அவர் அழுகைக்கு காரணம் அவர் அன்பு கொண்டிருந்த ஆண்டவரின் உடலைக் காணவில்லை. அவரது அன்பும் நம்பிக்கையும் இயேசு மரணித்த போதும் குறையவில்லை. மரணத்திற்குப் பின் கூட அவர் ஆண்டவரை தேடிக்கொண்டிருந்தார்.
1. அழுகை ஒரு மனிதப் பழக்கம் – ஆனால் இறையுணர்வு கொண்டது
மரியா அழுதது போன்று நம் வாழ்க்கையிலும் சில அழுகைகள் இருக்கின்றன –
அன்புக்குரிய ஒருவரின் இழப்பு,
நம்பி இருந்த ஒன்று நடைபெறாமல் போவது .
ஆனால் இந்த அழுகையில் ஒரு இறை நம்பிக்கை இருக்கும்போது நமது நம்பிக்கை வீணாகாது. இதற்கு உதாரணம் மரியாவின் அழுகை. மரியாவின் அழுகையும் தேடலும் இயேசுவின் இறுதி சந்திப்பிற்கு வழிவகுத்தது.
2. "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" — இயேசுவின் இரு முக்கியமான கேள்விகள்
- இயேசு நம்மையும் இவ்வாறு கேட்கிறார்: "ஏன் நீ அழுகிறாய்? அல்லது கவலைப்படுகிறாய் ?"
- "யாரை, எதை நீ தேடுகிறாய்?"
இக்கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது நமது கடமை நாம் உலக காரியங்களை தேடுகிறோமா? அல்லது உயிரோடு எழுந்த ஆண்டவரைத் தேடுகிறோமா?
3. மரியா ‘தோட்டக்காரர்’ என்று நினைத்தவர் இயேசுவே!
சில சமயங்களில் நாமும் கடவுளை உணரமுடியாமல் வேறு ஏதோவென்று எண்ணுகிறோம். ஆனால் அவர் மரியா என்று பெயர் சொல்லி அழைத்தது போல நம்மை பெயரால் அழைக்கும் போது நம் உள்ளம் விழிக்கிறது.
- நம்மை ஒரே ஒரு வார்த்தையால் இயேசு அழைக்கிறார்: அது நம் பெயரால்
- அவர் நம் பெயர் சொல்லி அழைக்கும் போது அவருக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்பு வெளிப்படுகிறது.
4. "ரபூனி!" — மரியாவின் அறிதல்
- மரியா “ரபூனி” என பதிலளிக்கிறாள் — அதாவது போதகரே!
- இதுவே உண்மையான நம்பிக்கையின் பதில்: ஆண்டவரை மீண்டும் கண்டதும் அவரைப் போதகராக ஏற்கிறாள். நம்மை அனுதினமும் இறை வார்த்தை வழியாக அழைக்கின்ற இறைவனின் குரலை கேட்டு நாமும் பதில் கூறுகிறோமா? சிந்திப்போம்...
5. பணிக்குச் செலுத்தும் இயேசு: “நீ என் சகோதரர்களிடம் செல்”
- மரியா இயேசுவை கண்டு கொண்ட மகிழ்ச்சியை தனக்குள் வைத்துக்கொள்ளவில்லை.
- அவர் சீடர்களிடம் சென்று அறிவிக்கிறார்: “நான் ஆண்டவரைக் கண்டேன்!”
இது தான் நம் அழைப்பு. உயிர்த்த இயேசுவை நாமும் காணும் பொழுது, அதை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். உயிர்த்த ஆண்டவரை நாம் கண்டு கொள்வதற்கான வழி அவர் நமது வாழ்வில் நாம் அறியாத வேலையில்... நமக்கு வந்த இடர்பாடுகளின் மத்தியில்... அவர் நம்மில் இருந்து செயலாற்றியதன் வாயிலாக நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக