"குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்…"
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தையாம் கடவுளை புகழ்கிறார்.
"ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துத், குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" என்று.
இன்று நாமும் இயேசுவின் மனநிலையோடு இறைவன் நமக்கு செய்த நன்மைகளை நிமிர்த்தமாக கடவுளை புகழ அழைக்கப்படுகிறோம் ...
நாம் வாழும் சமூகத்தில் ஞானிகள் மற்றும் அறிஞர்கள், சில சமயங்களில் தங்களை எல்லாம் தெரிந்தவர்களாக நினைத்து, இறைவனைத் தேட மறக்கிறார்கள். ஆனால் குழந்தை மனம் கொண்டவர்களாக அனைத்தும் அறிந்த நிலையில் நாம் இருந்தாலும் கூட அறியாத விஷயங்கள் ஆயிரம் உண்டு என்பதை உணர்ந்தவர்கள் நம்பிக்கையோடு நாளும் இறைவனை தேட வேண்டும்...இதையே இன்று இயேசு நமக்கு எடுத்துரைக்கிறார் ...
இயேசுவின் கூற்றுப்படி
"தந்தையை மகன்தான் உண்மையாக அறிகிறான். மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறானோ, அவர்களே தந்தையை அறிய இயலும்."
அதாவது, இறைவனை அறிய இயேசுவின் வழியே போக வேண்டும். இயேசுவைப் போல நாம் தந்தையை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நாமும் குழந்தைகளைப் போல நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.
இதற்கான அருள் வேண்டி இன்றைய நாளில் இணைந்து ஜெபிப்போம் ...
என்றும் அன்புடன்
அருள் பணி ஜே. சகாய ராஜ்
திருச்சி மறை மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக