இணைந்து முன்னெடுக்க...
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,
இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் ...
1. சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம்:
இயேசு தம் பன்னிரு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்தார். அவர் அவர்களுக்கு,
- தீய ஆவிகளை ஓட்டும் அதிகாரமும்
- நோய்களை குணமாக்கும் வல்லமையையும் அளித்தார்.
இது நமக்கு ஒரு முக்கியமான உண்மை உணர்த்துகிறது.
ஆண்டவரின் பணிக்காக வந்துள்ள நாம் அனைவரும் அதிகாரமும், ஆண்டவனின் ஆசியையும் பெற்றிருக்கிறோம்...
இவை நமக்கு மக்கள் மத்தியில் மதிப்பையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ...
இயேசுவின் சீடர்கள் கூட தங்களால் பேய்களை ஓட்ட முடிகிறது என்று சொல்லி மகிழ்ந்தவர்கள் என விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம்... ஆனால் இயேசு இந்த மகிழ்ச்சியை நாடாது விண்ணகத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டுள்ளது குறித்து மகிழுங்கள் எனக் கூறுகிறார்... எனவே உலக நாட்டங்களை தவிர்த்து ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்குத் தந்துள்ள பணிக்குச் செல்லும் முன்னே, அவரிடமிருந்து அப்பணிக்கான அதிகாரமும் ஆசீர்வாதமும் பெற வேண்டும்.
2. அனுப்பும் பணியின் துல்லியம்: நம் பணியின் துல்லியத்தை அறிவதற்கான அழைப்பு.
இயேசு ஒரு தெளிவான வழிகாட்டலுடன் சீடர்களை அனுப்புகிறார்:
- “பிற இனத்தாரிடமல்ல,
- சமாரியர்களிடமல்ல,
- வழி தவறிப் போன இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.”
இது முன்னுரிமை கொடுக்க வேண்டிய திசையை காட்டுகிறது:
முதலில் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடையே பணியை செய்ய வேண்டும்.
நம் வீட்டிலும், குடும்பத்திலும், ஊரிலும், நான் இருக்கும் இடத்தை மையப்படுத்திய பணிகளை முதலில் நாம் கையாள வேண்டும்.
3. இந்த அழைப்புக்கு இயேசு சொல்லும் காரணம்:
நம்மை அழைக்கும் இறைவன் என்றை நற்செய்தி வாசகத்தின் வழியாக நாம் அழைப்புக்கு தரும் காரணம்:
"விண்ணரசு நெருங்கிவந்துவிட்டது." என்பதாகும்.
விண்ணக அரசு மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்...அன்பு அமைதியும் மனித நேயமும் அங்கு நிறைந்திருக்கும் இத்தகைய விண்ணக அரசை இன்று நாம் வாழும் சமூகத்தில் உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் உண்டு... இதை உருவாக்கு முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் இது நம் பொறுப்பும் கடமையும் ஆகும் ...
கடமை உணர்வோடு கடவுளுக்குரிய காரியங்களை இணைந்து முன்னெடுக்கா இன்றைய நாளில் இதயத்தில் உறுதி ஏற்போம்... இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்...
என்றும் அன்புடன்
அருள்பணி ஜே. சகாயராஜ்
திருச்சி மறைமாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக