சனி, 6 மார்ச், 2021

புனித வாரம் : ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

 புனித வாரம்

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

1. கிறிஸ்து பெருமான் தம் பாஸ்கா மறைபொருளை நிறைவேற்ற எருசலேமுக்கு வருகை தந்தைத் திருச்சபை இன்று நினைவுகூருகின்றது: எனவே, எல்லாத் திருப்பலிகளிலும் இந்த நினைவு கொண்டாடப்படும். முக்கியமாக திருப்பலிக்குமுன் பவனி அல்லது சிறப்பான வருகைச் சடங்கினாலும், மற்றத் திருப்பலிகளுக்குமுன் சாதாரான வருகைச் சடங்கினாலும், இது கொண்டாடப்படும், மக்கள் பெருமளவில் வரும் மற்றத் திருப்பலிகளுக்கு முன்னும் சிறப்பான வருகைச் சடங்கை நடத்தலாம். ஆனால் பவனியை மறுமுறை நிகழ்த்தலாகாது.

ஆண்டவர் எருசலேமுக்கு வருவதை நினைவுகூர்தல்

முதல் வகை: பவனி

தக்க நேரத்தில் மக்கள் கோயிலுக்கு வெளியே ஒரு சிற்றாலயத்தில் அல்லது மற்றொரு தகுந்த இடத்தில் கூடுவார்கள். அவர்கள் கையில் குருத்தோலை பிடித்திருப்பார்கள். 
சிவப்புநிறத் திருப்பலி உடைகளை அணிந்த குரு பணியாளருடன் அங்கு வருவார். குரு (காப்பா) மேற்போர்வையை அணியலாம். புவனி முடிந்ததும் இதை அகற்றிவிடுவார். 
குரு வருகையில் கீழ்க்கண்ட பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும். 

பல்லவி மத் 21: 9 

தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர்

ஆசி நிரம்பப் பெற்றவரே! இஸ்ராயேலின் பேரரசே, உன்னதங்களிலே ஓசான்னா! 

பின்னர் குரு வழக்கம்போல மக்களை வாழ்த்துகிறார். சிற்றுரை ஆற்றி, இந்நாள் கொண்டாட்டத்தை அனைவரும் நன்கு அறிந்து அதில் ஈடுபட்டுப் பங்கெடுக்கத் தூண்டுகிறார். இதற்குக் கீழுள்ள உரையை அல்லது அதுபோன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.

அன்புமிக்க சகோதரர்களே சகோதரிகளே! தவக்காலத் தொடக்கத்திலிருந்தே தவமுயற்சிகளாலும் அன்புப் பணிகளாலும் நம் இதயங்களைப் பண்படுத்திய பின் நம் ஆண்டவரின் பாஸ்கா மறைநிகழ்ச்சியின் தொடக்கத்தைத் திருச்சபையோடு சேர்ந்து கொண்டாட நாம் இதோ கூடியிருக்கிறோம். பாஸ்கா மறைநிகழ்ச்சியின் ஆண்டவருடைய திருப்பாடுகளையும் உயிர்த்தெழுதலையும் குறிக்கின்றது. பாஸ்காவை நிறைவேற்றவே அவர் தம் நகரான எருசலேமுக்கு எழுந்தருளினார். எனவே, மீட்பளிக்கும் இந்த வருகையை நாம் முழு விசுவாசத்துடனும் பக்தியுடனும் நினைவிற்கொண்டு, ஆண்டவரைப் பின்செல்வோம். இவ்வாறு அவருடைய அருளினால் சிலுவையில் பங்குகொள்ளும் நாம் உயிர்ப்பிலும் முடிவில்லா வாழ்விலும் பங்குபெறுவோமாக. 

சிற்றுரைக்குப்பின் குரு கீழுள்ள மன்றாட்டுகளில் ஒன்றைக் கைகளைக் குவித்துச் சொலகிறார்: 

செபிப்போமாக (மன்றாடுவோமாக) 

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,

இந்தக் குருத்தோலைகளை உமது ரு ஆசியால் புனிதப்படுத்தியருளும்.
கிறிஸ்து அரசரை அக்களிப்புடன் பின்பற்றும் நாங்கள் அவர் வழியாக அவரோடு புதிய எருசலேமுக்கு வந்துசேர்வோமாக.
என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல். ஆமென். 

அல்லது 

செபிப்போமாக (மன்றாடுவோமாக) 

இரக்கமுள்ள இறைவா,

உம்முடைய மக்களாகிய எங்கள் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்தருளும். எங்கள் வேண்டுதலைக் கனிவுடன் கேட்டருளும்.
வெற்றி வீரராய்ப் பவனிவரும் கிறிஸ்துவின் திருமுன் நாங்கள் குருத்தோலைகளை ஏந்தி வருகின்றோம்.
கிறிஸ்துவில் ஒன்றித்து வாழ்ந்து நாங்கள் ஒவ்வொருவரும் நற்செயல்களால் அவரை மகிமைப்படுத்த அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

எல். ஆமென். 

குரு மௌனமாக குருத்தோலைகள்மீது தீர்த்தம் தெளிக்கிறார்.
ஆண்டவரிக் வருகையைப்பற்றி நான்கு நற்செய்தியாளர் எழுதியவற்றிலிருந்து நற்செய்தி வாசிக்கப்படும். அதை வழக்கம்போலத் திருத்தொண்டரோ, அவர் இல்லையெனில் குருவோவாசிப்பார். 

(முதல் ஆண்டு: 2008, 2011, 2014)

தூய மத்தேயு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 21:1-11

இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி, "நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், "இவை ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார்" என்றார்."மகள் சீயோனிடம் சொல்லுங்கள்; இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்" என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், "தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, "இவர் யார்?" என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், "இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்" என்று பதிலளித்தனர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு. 

இரண்டாம் ஆண்டு: (2009, 2012, 2015)

தூய மாற்கு எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 11:1-10

இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி, "உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்" எனச் சொல்லுங்கள்" என்றார். அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டுவந்தார்கள். அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், "என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டனர். அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர். பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார். பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!" என்று ஆர்ப்பரித்தனர்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு.

மூன்றாம் ஆண்டு: (2010,2013,2016)

தூய லூக்கா எழுதிய புனித நற்செய்தியிலிருந்து வாசகம் 19:29-40

ஒலிவம் என வழங்கப்படும் மலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்ற ஊர்களை அவர் நெருங்கி வந்தபோது இரு சீடர்களை அனுப்பினார். அப்போது அவர் அவர்களிடம், "எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்ததும் இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக் குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். யாராவது உங்களிடம், "ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று கேட்டால், "இது ஆண்டவருக்குத் தேவை" எனச் சொல்லுங்கள்" என்றார். அனுப்பப்பட்டவர்கள் சென்று அவர் தங்களுக்குச் சொன்னவாறே இருக்கக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது கழுதையின் உரிமையாளர்கள், "கழுதையை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இது ஆண்டவருக்குத் தேவை" என்றார்கள்; பின்பு அதை இயேசுவிடம் ஓட்டி வந்தார்கள்; அக்கழுதையின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அதன்மேல் ஏற்றி வைத்தார்கள். அவர் போய்க் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் மேலுடைகளை வழியில் விரித்துக் கொண்டே சென்றார்கள். இயேசு ஒலிவ மலைச்சரிவை நெருங்கினார். அப்போது திரண்டிருந்த சீடர் அனைவரும் தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்; "ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!" என்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த பரிசேயர்களுள் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம் சீடர்களைக் கடிந்து கொள்ளும்" என்றனர். அதற்கு அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால் கற்களே கத்தும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு. 

நற்செய்திக்குப்பின் சுருக்கமாக மறையுரை ஆற்றலாம். பவனி தொடங்குமுன் குரு அல்லது பணியாளர் கீழுள்ளவாறு அல்லது அதுபோன்று அழைப்பு விடுப்பார்: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்த மக்கள் திரளைப் பின்பற்றி, நாமும் சமாதானமாகப் புறப்பட்டுப் பவனியாகச் செல்வோம்.

திருப்பலி நடக்கவிருக்கும் கோயிலுக்குப் பவனி புறப்படுகிறது. தூபம் பயன்படுத்தினால் புகையும் கலத்துடன் தூபப் பணியாளர் முன்செல்ல, எரியும் திரிகளைத் தாங்கும் இருபணியாளர்களிடையே அலங்கரிக்கப்பட்ட சிலுவை பிடித்திருப்பவரும், அவர்களுக்குப்பின் குருவும் மற்றப் பணியாளரும் செல்வர். இறுதியாக இறைமக்;கள் குருத்தோலை பிடித்துக் கொண்டு அணிவகுத்துச் செல்வர்.

பவனியின்போது, பாடகர் குழுவும் மக்களும் கீழ்க்கண்ட அல்லது வேறு பொருத்தமான பாடல்களைப் பாடுவர். 

ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம்

ஆண்டவரே உம்மை எதிர் பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம் இயேசு
இரட்சகரே எழுந்தருளும்.

ஓசானா தாவீதின் புதல்வா - ஓசானா ஓசானா ஓசானா

மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா
முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம்
மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசானா....

அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா 
அருள் தாபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம்
ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர் - ஓசானா....

தாவீது அரசரின் புத்திரரே - ஓர் 
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமரெனப் புகழ் அடைந்தவரே - எம்
தேவனே தேவனே வருவீரே - ஓசானா....

கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர்
கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்த தண்ணீர் - அதை
சுத்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் - ஓசானா....

புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம்
புத்தியில் புகுத்தினீர் அருள் மொழிகள்
பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா
பவனியோடு வாரீர் படைத்தவரே - ஓசானா....

குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம்
கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம்
கடவுளே எம்மோடே வாரும் நீரே - ஓசானா....

மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு
மனமுடைந்த விதவை மகன் அடைந்தார்
மரிமதலேன் சகோதரன் பெற்றொர் - எம்
மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே - ஓசானா....

யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம்
யூதர் ராஜனென்று முடிபெற்றீர்
யெருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம்
இயேசு அரசனே அரசாள்வீர் - ஓசானா....

பாவிகளைகத் தேடி வந்தவரே - எம்
பாவங்கள் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே - எம்
பராபரனே உட்செல்வீரே - ஓசானா....

கோவேறு குட்டியை ஆசனமாய் - எம்
குழந்தைகள் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம்
கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே - ஓசானா....

உலகமே உமது அரிய வேலை - எம்
உயிருமே உமது மா புதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே - எம்
உலகரசே உள்ளே புகுவீரே - ஓசானா....

பல்லவி 1: 

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகளைப் பிடித்தவராய் 
உன்னதங்களிலே ஓசான்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர்கொண்டனரே.

மண்ணுலகும் அதில் நிறைந்த யாவும் ஆண்டவருடையன, பூவுலகும் அதில்வாழும் குடிகள் யாவரும் அவர்தம் உடைமையே,
ஏனென்றால், கடல்களின்மீது பூவுலகை நிலைநிறுத்தியவர் அவரே, ஆறுகளின்மீது அதை நிலைநாட்டியவர் அவரே.

ஆண்டவரது மலைமீது ஏறிச்செல்லத் தகுந்தவன் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவன் யார்?
மாசற்ற செயலினன், தூய உள்ளத்தினன். பயனற்றதில் தன் மனத்தைச் செலுத்தாதவன்,தன் அயலானுக்கு எதிராகவஞ்சகமாய் ஆணையிடாதவன்.

இவனே ஆண்டவரிடம் ஆசிபெறுவான்,இவனே தன்னைக் காக்கும் ஆண்;டவரிடம் மீ;ட்பு அடைவான்.
இறைவனைத் தேடும் மக்களின் இதுவே, யாக்கோபின் கடவுளது திருமுகம் நாடுவோர் இவர்களே.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள், பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ 
வீரமும் வலிமையும் கொண்ட ஆண்டவரே இவர்.போரில் வல்லவரான கொண்ட ஆண்டவரே இவர்.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்.பழங்காலக் கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்.

சேனைகளின் ஆண்டவரே இவர். மாட்சிமிகு மன்னர் இவரே."

பல்லவி 2 

எபிரேயர்களின் சிறுவர் குழாம் வழியில் ஆடைகள் விரித்தவராய்

"தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே" என்று முழங்கி ஆர்ப்பரித்தார்.

(தேவைக்கேற்ப இப்பல்லவியை 46ஆம் சங்கீதத்தின் அடிகளுக்கு இடையே பல்லவியாகப் பாடலாம்.)

சங்கீதம் 46
மக்களினத்தாரே, நீங்கள் யாவரும் கைகொட்டுங்கள்: அக்களிப்போடு இறைவனுக்குப் புகழ்பாடி ஆர்ப்பரியுங்கள்.
ஏனெனில் அண்டவர் உன்னதமானவர், அஞ்சுதற்குரியவர், உலகுக்கெல்லாம் பேரரசர்.

மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார். நாடுகளை நமக்கு அடிபணிய வைத்தார்.
நமக்கு உரிமைப் பொருளாக நாட்டைத் தேடித் தந்தார்.தாம் அன்புசெய்யும் யாக்கோபுக்கு அது பெருமை தருவதாகும்.

மக்கள் ஆர்ப்பரிக்க இறைவன் அரியணை ஏறுகிறார். எக்காளம் முழங்க, ஆண்டவர் எழுந்தருளுகிறார்.
பாடுங்கள் நம் இறைவனுக்குப் புகழ் பாடுங்கள் பாடுங்கள் நம் வேந்தனுக்குப் புகழ் பாடுங்கள்.

ஏனெனில் கடவுள் உலகுக்கெல்லாம் அரசர்.அவருக்கு இன்னிசை எழுப்புங்கள்.
நாடுகள் அனைத்தின்மீதும் இறைவன் ஆட்சிபுரிகின்றார்.தம் புனித அரியணைமீது இறைவன் வீற்றிருக்கின்றார்.

ஆபிரகாமின் இறைமக்களோடு புறவினத்தாரின் தலைவர்கள் கூடியிருக்கின்றனர்
ஏனெனில் உலகின் தலைவர்களெல்லாம் இறைவகுக்குரியவர்கள். அவரே மிக உன்னதமானவர். 

கிறிஸ்து அரசருக்குப் பாடல்

கிறிஸ்து அரசே,இரட்ஷகரே, மகிமை, வணக்கம், புகழ் உமக்கே:
எழிலார் சிறுவர் திரள் உமக்கு அன்புடன் பாடினர்: "ஓசான்னா!"

எல். கிறிஸ்து அரசே.....

பாடகர்: இஸ்ராயேலின் அரசர் நீர், தாவிதின் புகழ்சேர் புதல்வர் நீர், 
ஆசிபெற்ற அரசே நீர் ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.

எல். கிறிஸ்து அரசே,....

பாடகர்: வானோர் அணிகள் அத்தனையும் உன்னதங்களிலே உமைப் புகழ்
அழிவுறும் மனிதரும் படைப்புகளும் யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.

எல். கிறிஸ்து அரசே,....

பாடகர்: எபிரேயர்களின் மக்கள் திரள் குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார்; 
செபமும் கீதமும் காணிக்கையும் கொண்டு யாம் இதோ வருகின்றோம்.

எல். கிறிஸ்து அரசே.....

பாடகர்: பாடுகள் படுமுன் உமக்கவர் தம் வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே:
ஆட்சி செய்திடும் உமக்கன்றே யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.

எல். கிறிஸ்து அரசே.....

பாடகர்: அவர்தம் பக்தியை ஏற்றீரே, நலமார் அரசே, அருள் அரசே, 
நல்லன எல்லாம் ஏற்கும் நீர் எங்கள் பக்தியும் ஏற்பீரே.

எல். கிறிஸ்து அரசே..... 

பவனி கொயிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடல் அல்லது இக்கருத்துள்ள வேறு பாடல் பாடப்படும். 

ஆண்டவர் புனித நகரத்தில் நுழைகையில், எபிரேயச் சிறுவர் குழாம் 
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய். குருத்து மடல்களை ஏந்திநின்று 
"உன்னதங்களிலே ஓசான்னா!" என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.

எருசலேம் நகருக்கு இயேசுபிரான் வருவதைக் கேட்ட மக்களெலாம் 
அவரை எதிர்கொண்டழைத்தனரே. குருத்து மடல்களை ஏந்திநின்று 

குரு பீடத்தை அடைந்ததும் அதற்கு வணக்கம் செலுத்துவார்; வசதிபோலத் தூபம் காட்டலாம். பின்னர் தம் இருக்கைக்குச் சென்று ("காப்பா" மேல்போர்வையை அகற்றித் திருப்பலி உடை அணிந்து), திருப்பலியின் தொடக்கச் சடங்கை விட்டுவிட்டு, பவனியின் முடிவுரையாகத் திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார். வழக்கம்போலத் திருப்பலி தொடர்;ந்து நடைபெறும். 

2ஆம் வகை: சிறப்பு வருகை

கோயிலுக்கு வெளியே பவனி நடத்த முடியாதெனில், அந்நாளின் முக்கியமான திருப்பலிக்கு முன் கோயிலுக்குள்ளேயே சிறந்த முறையில் ஆடம்பர வருகை நடத்திக் கொண்டாடலாம்.

இறைமக்கள் கோயில் வாசல்முன் அல்லது கோயிலுக்குள் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு கூடி நிற்பர் அவர்களுள் பெரும்பான்மையோர் பார்க்கக்;கூடிய இடத்திற்குக் குருவும் பணியாளர்களும் இறைமக்களின் பிரதிநிதிகள் சிலரும் வருவர். இந்த இடம் பீடமுற்றத்திற்கு வெளியே இருக்கவேண்டும்.

குரு அங்கு வருகையில், "தாவிதின் மகனுக்கு ஓசான்னா" என்னும் பல்லவி அல்லது மற்றொரு பொருத்தமான பாடல் பாடப்படும், பின் குருத்தோலைக்களை மந்திரித்தலும் ஆண்டவர் எருசலேமுக்கு வருகை தந்தைப்பற்றிய நற்செய்தி அறிவிப்பும் (எண 5-7இல் உள்ளதுபோல) நடைபெறும். நற்செய்திக்குப்பின் குருவும் பணியாளரும் பிரதிநிதிகளும் ஆடம்பரமாகக் கோயிலின் வழியாகப் பீடத்திற்குப் பவனியாகச் செல்வர். அப்பொழுது "ஆண்டவர் புனித நகரத்தில்" என்னும் பதிலுரைப் பாடல் (எண் 10) அல்லது பொருத்தமான வேறு பாடல் பாடப்படும்.

பீடத்தை அடைந்;ததும், குரு வணக்கம் செலுத்தி, தம் இருக்கைக்குச் சென்று திருப்பலியின் சபை மன்றாட்டைச் சொல்வார். திருப்பலி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும்.

3ஆம் வகை: சாதாரண வருகை

சிறப்பு வருகை நடைபெறாத இந்நாள் திருப்பலிகளில் எல்லாம் சாதாரன வருகை நடத்தி, ஆண்டவர் எருசலேமுக்கு வருகை தந்ததின் நினைவு புதுப்பிக்கப்படும்.

குரு பீடத்திற்கு வரும்போது வருகைப் பல்லவி சங்கீதத்துடன் (எண் 18) பாடப்படும் அல்லது அதே கருத்துள்ள வேறு பாடலைப் பாடலாம். குரு பீடத்தை அடைந்து, வணங்கி, தம் இருக்கைக்குச் சென்று, இறைமக்களை வாழ்த்துவார். திருப்பலி வழக்கம்போலத் தொடர்ந்து நடைபெறும்.

திருக்கூட்டம் இல்லாத திருப்பலியிலும், வருகைப் பாடல் பாட முடியாதபோதும் குரு பீடத்தை அடைந்ததும், வணங்கி, இறைமக்களை வாழ்த்துவார். பின் வருகைப் பல்லவியை வாசித்து வழக்கம்போலத் திருப்பலியைத் தொடர்வார். 

வருகைப் பல்லவி :
பாஸ்கா விழாவுக்கு ஆறுநாள் இருக்கையில் ஆண்டவர் எருசலேம் நகருக்குள் வருகையில் சிறுவர் அவரை எதிர்கொண்டனரே: 
கைகளில் குருத்தோலை தாங்கி, அவர்கள்மகிழ்வுடன்,‘உன்னதங்களில் ஓசான்னா,இரக்கப் பெருக்குடன் வருகின்றீரே, ஆசி பெற்றவர் நீரே’ என்று
பெருங்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தனரே. 

வாயில்களே, நிலையான உயர்த்துங்கள், சங் 23:9-10
நித்திய கதவுகளே, மேலெழுங்கள். மகிமையின் மன்னர் உட்புகுவார். மகிமையின் மன்னர் இவர் யாரோ?
வலிமைமிகு தளங்களின் ஆண்டவரேமகிமையின் மன்னர் அவர்தாமே. உன்னதங்களிலே ஓசான்னா!
இரக்கப் பெருக்குடன் வருகின்றீர்.ஆசி பெற்றவர் நீர்தாமே.

பவனியோ சிறப்பு வருகையோ நடத்தமுடியாத இடங்களில், கிறிஸ்து எருசலேமுக்கு வந்ததையும் பாடுபட்டதையும்பற்றி இறைவாக்கு வழிபாடு நடத்துவது பயனளிக்கும். இதைச் சனிக்கிழமை மாலையில் அல்லது ஞாயிறன்று வசதியான நேரத்தில் நடத்தலாம்.

திருப்பலி

பவனி அல்லது சிறப்பு வருகைக்குப்பின் குரு சபை மன்றாட்டைச் சொல்லி திருப்பலியைத் தொடர்வார். 

சபை மன்றாட்டு 
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய திருவுளத்திற்குப் பணிந்து எங்கள் மீட்பர் மனிதராகி, சிலுவைச் சாவுமட்டும் தம்மையே தாழ்த்தினார். நாங்கள் அவர்தம் பாடுகளின் பாதையைப் ப்pன்பற்றி அவரது உயிர்ப்பின் மகிமையிலும் பங்குபெறத் தயவாய் அருள்வீராக.

உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

(முதல் வாசகம்: 1,2,3 ஆண்டுகளில்: எசாயா 50:4-7)

இறைவாக்கினர் எசாயா திருநூலிருந்து வாசகம்:

4 நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின்; நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.

5 ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை.

6 அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோhக்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை.

7 ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

இது ஆண்டவரின் அருள்வாக்கு - இறைவா உமக்கு நன்றி

தியானப்பாடல்: திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24

பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை நெகிழ்தீர்

என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் 
அவருக்கு இவன் மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்

ஏனனில் பல நாய்கள் என்னை சூழ்துகொண்டன
பொலலாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப பார்கின்றார்கள் பார்த்து அக்களிக்கின்றார்கள்

என் ஆடைகளைகத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப்போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்குத் துணையான நீர் எனக்கு உதவி புரிய விரைந்து வாரும்

நானோ உம் நாமத்தை உம் சகோதரருக்கு வெளிப்படுத்துவேன்
சபை நடுவே உம்மை இவ்வாறு போற்றுவேன்
ஆண்டவருக்கஞ்சுவோரே அவரைப் புகழுங்கள்
யாக்கோபின் சந்ததியே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள்
இஸ்ராயேல் மக்களே நீங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சுங்கள்

இரண்டாம் வாசகம் : பிலிப்பியர் 2: 6-11 

அப்போஸ்தலரான தூய பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்:

6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;

11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்

ஆண்டவருடைய திருப்பாடுகளில் வரலாறு. எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும் திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும். திருத்தொண்டர் அல்லது அவரில்லையெனில், குரு அதை வாசிப்பார். வாசகர்களும் அதை வாங்கிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கூடியமட்டும் குருவே வாசிக்க வேண்டும்.

திருப்பாடுகளின் வரலாற்றைப் பாடுமுன் திருத்தொண்டர்கள் மட்டும் நற்செய்திக்குமுன் நடப்பது போல குருவிடம் ஆசி பெறுவார்கள்.

முதல் ஆண்டு: (2008, 2011, 2014, 2017) மத்தேயு 26:14 - 27:66 
இரண்டாம் ஆண்டு: (2009, 2012, 2015, 2018)மாற்கு 14:1 - 15:47
மூன்றாம் ஆண்டு: (2010, 2013, 2016,2019) லூக்கா 22:14 - 23:56

முன்று ஆண்டு சுற்றுகளை கொண்ட ஞாயிறு வாசங்களில் 
இயேசுவின் திருப்பாடுகளுக்கான வாசகங்களை இங்கே காண்கDescription: as

திருப்பாடுகளின் வரலாற்றுக்குப்பின் வசதிபோல சுருக்கமாக மறையுரையாற்றலாம். விசுவாச அறிக்கை சொல்லவும்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார் . கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, மெய்யங் கடவுளினின்று மெய்யங்கடவுளாக செனித்தவர். இவர் செனித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும் வானகமிருந்து இரங்கினார். (தலை வணங்கவும்,) பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.வேதாகமத்தின் படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். சீவியரையும், மரித்தவரையும் நடுத்தீர்க்க மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கன்றார். அவரது அரசுக்கு முடிவு இராது. பிதாவினின்றும் சுதனின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியையும் விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதணையும் மகிமையும் பெறுகின்றார். தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். -ஆமென்.

விசுவாச அறிக்கை (பாடல் திருப்பலியில்) :

வானமும் பூமியும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார் 
தந்தை சுதன் தூய ஆவியுமாய் தன்னில் உறவுடன் வாழ்கின்றார். 
பரிசுத்த ஆவியின் வல்லமையால் திருமகன் மரியிடம் மனுவானார். 
மனிதரைப் புனிதராய் மாற்றிடவே புனிதராம் கடவுள் மனிதரானார்.
பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார் கல்லறை ஒன்றில் அடக்கப்படடார் 
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் மரணத்தின் மீதே வெற்றி கொண்டார். 
பரலோகம் வாழும் தந்தையிடம் அரியணை கொண்டு இருக்கின்றார். 
உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார். 
பரிசுத்த ஆவியை நம்புகிறோம் பாரினில் அவர் துணை வேண்டிடுவோம் 
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் இணைந்திடுவோம். 
திருச்சபை உரைப்பதை நம்புகிறோம் புனிதர்கள் உறவை நம்புகிறோம் 
சரீரத்தின் உயிர்ப்பை மறுவாழ்வை விசுவாசப் பொருளாய் நம்புகிறோம் - ஆமென்.

விசுவாசிகளின் மன்றாட்டு:

ஆமென்.

நற்கருணை வழிபாடு

காணிக்கைப் பொருட்களைத் தயாரித்தல்- காணிக்கைப் பாடல்

(குரு : அப்பத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுக்கொண்டோம். நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்களுக்கு வாழ்வளிக்கும் அப்பமாக மாறும்.

மக் : இறைவன் என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக.

(குரு: இரசத்தில் தண்ணீர் கலக்கும் போது மனதில் சொல்லத்தக்க ஜெபம்: கிறிஸ்து நம் மனித இயல்பில் பங்கு கொள்ளத்திருவுளமானார். இத்தண்ணீர் இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)

(குரு : இரசத்தை ஒப்புக்கொடுக்கும் போது)
ஆண்டவரே, அனைத்துலகின் இறiவா, உம்மைப் போற்றுகிறோம். ஏனெனில் உமது அருட்பெருக்கிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுக்கொண்டோம். திராட்சைக் கொடியும், மனித உழைபபும் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மபானமாக மாறும்.

(குரு தலைகுனிந்து: எம் இறைவனாகிய ஆண்டவரே, தாழ்மையான மனத்தோடும் நொறுங்கிய உள்ளத்தோடும் வருகின்ற எங்களை ஏற்றருளும். நாங்கள் இன்று உம் திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி உமக்கு உகந்தது ஆவதாக.)

(கை கழுவும் போது : ஆண்டவரே குற்றம் நீங்க என்னைக் கழுவியருளும் பாவத்திலிருந்து என்னைத் தூய்மைப்படுத்தும்.)

குரு : சகோதரர் சகோதரிகளே, நாம் அனைவரும் ஒப்புக் கொடுக்கும் இத்திருப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும் படி செபியுங்கள்.
மக் : ஆண்டவர் தமது திருப்பெயரின் புகழ்ச்சிக்காகவும், மகிமைக்காகவும், நமது நன்மைக்காகவும், தமது பரிசுத்த திருச்சபை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கைமிது மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, உம் திருமகனின் பாடுகளையும் இறப்பையும் கொண்டாடும் நாங்கள் அளிக்கும் இக்காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருளும். எங்கள் செயல்களால் உமது மன்னிப்பைப் பெற இயலாது எனினும். ஒப்பற்ற இப்பலியின் ஆற்றலால் உமது மன்னிப்பை நிறைவாகப் பெற்றுக்கொண்டோமென்று உணர்ந்து வாழ்ந்திடச் செய்தருளும்.

எங்கள்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்

தொடக்கவுரை: வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் சாவு

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

எல். உம்மோடும் இருப்பாராக

குரு: இதயங்களை ஆண்டவரிடம் எழுப்புங்கள்.

எல். ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

குரு: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

எல். அது தகுதியும் நீதியுமானதே. 

ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக, எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியுமாகும், எங்கள் கடமையும் மீட்புக்குரிய செயலுமாகும்

கிறிஸ்து மாசற்றவராயினும் பாவிகளுக்காகப் பாடுபடவும், பொல்லாதவர்க்காக அநீத முறையில் தண்டனை பெறவும் திருவுளமானீர்;
அவரது சாவு எங்கள் பாவங்களைப் போக்கியது, அவரது உயிர்த்தெழுதலோ எங்களை உமக்கு உகந்தவராக்கியது.

ஆகவே, நாங்கள் வானகத் தூதர் அனைவரோடும் சேர்ந்து உம்மைப் புகழ்ந்தேத்தி, அக்களிப்புடன் குரல் எழுப்பிச் சொல்வதாவது:

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே மூவுலகின் தேவனாகிய ஆண்டவர்
வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன 
உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் பெயரால் வருபவர்
ஆசீர் பெற்றவர் - உன்னதங்களிலே ஓசானா
உன்னதங்களிலே ஓசானா. 

தூயவர் தூயவர் தூயவர்! மூவுல கிறைவனாம் ஆண்டவர் 
வானமும் வையமும் யாவும்னும் மாட்சிமையால் நிறைந் துள்ளன. 
உன்னதங்களிலே ஓசான்னா! ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே 
உன்னதங்களிலே ஓசான்னா! உன்னதங்களிலே ஓசான்னா! 

நற்கருணை மன்றாட்டு 3

வானகத் தந்தையே, நீர் மெய்யாகவே தூயவர், உம்முடைய படைப்புகளெல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே. ஏனெனில், உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக, தூய ஆவியின் ஆற்றலால், அனைத்தையும் உய்வித்துப் புனிதப்படுத்துகின்றீர். கதிரவன் தோன்றி மறையும் வரை உலகெங்கும் உமது திருப்பெயருக்குத் தூய காணிக்கை ஒப்புக் கொடுக்குமாறு உமக்காக மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.

ஆகவே, இறைவா, நாங்கள் உமது திருமுன் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே தூய ஆவியால் புனிதமாக்கியருள வேண்டுமென உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். இவ்வாறு, உம்முடைய திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும் இரத்தமுமாக இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இத்திருப்பலியை நிறைவேற்றுகிறோம்.

ஏனெனில் அவர் கையளிக்கப்பட்ட இரவில், அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, அப்பத்தைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது : 

அனைவரும் இதை வாங்கி உண்ணுங்கள் ; 
ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே , உணவு அருந்தியபின், கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, வாழ்த்துரைத்து, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது :

அனைவரும் இதை வாங்கிப் பருகுங்கள் ; 
ஏனெனில், இது புதிய, நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம்.
இது பாவமன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் எல்லாருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

குரு : இது விசுவாசத்தின் மறைபொருள்!
மக் : ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

ஆகவே, இறைவா, உம்முடைய திருமகனின் மீட்பளிக்கும் பாடுகளையும், வியப்புக்குரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் மீண்டும் வருவாரென எதிர்ப்பார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை நன்றியறிதலுடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருச்சபையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர். இதை நீர் ஏற்றுக் கொண்டு, உம்முடைய மகனின் திருவுடல் திரு இரத்தத்தினால் ஊட்டம் பெறும் நாங்கள் கிறிஸ்துவின் தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே மனமும் உள்ளவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு , நீர் தேர்ந்து கொண்டவர்களோடு, சிறப்பாக இறைவனின் அன்னையாகிய புனிதமிக்க கன்னிமரியாள், உம்முடைய புனித அப்போஸ்தலர், மறை சாட்சியர் மற்றும் புனிதர் அனைவருடனும் நாங்கள் விண்ணகத்துக்கு உரிமையாளர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் எப்பொழுதும் உமது உதவியைப் பெறுவோம் என நம்பியிருக்கின்றோம்.

இறைவா, எங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி உலகிற்கெல்லாம் அமைதியும் மீட்பும் தரவேண்டுமென்று மன்றாடுகிறோம். இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருச்சபை, உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை.....எங்கள் ஆயர்.... ஏனைய ஆயர்கள், திருப்பணியாளர்கள், துறவியர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரும் விசுவாசத்திலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற இக்குடும்பத்தின் வேண்டுதலுக்குக் கனிவாய்ச் செவிசாய்த்தருளும். இரக்கமுள்ள தந்தையே, எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய மக்களைத் தயவாய் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.

இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும் உமக்கு உகந்தவர்களாய் இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும் உமது அரசில் தயவுடன் ஏற்றருளும். நாங்களும் அங்கு வந்து சேர்ந்து அவர்களோடு உமது மாட்சியைக் கண்டு, என்றும் மனநிறைவு அடைவோமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக நம்பியிருக்கின்றோம். அவர் வழியாகவே நீர் உலகிற்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

இவர் வழியாகவே, இவரோடு, இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியின் ஒன்றிப்பில் எல்லாப் புகழும் மாட்சியும் என்றென்றும் உமக்கு உரியதே.

மக் : ஆமென்.

திருவிருந்துச் சடங்கு :

குரு : மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

மக் : பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, 
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக. 
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, 
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும். 
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

குரு : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகிறோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமுமின்றி நலமாய் இருப்போமாக! நாங்கள் நம்பியிருக்கும் பேரின்ப வாழ்வையும், எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருக்கின்றோம். 
மக் : ஏனெனில், அரசம்,வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

குரு : ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவே, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்' என்று உம் அப்போஸ்தலர்களுக்கு மொழிந்தீரே, எங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருச்சபையின் விசுவாசத்தையே கண்ணோக்கி, அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருளத் திருவுளம் கொள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே. 
மக் : ஆமென்.
குரு : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
மக் : உம்மோடும் இருப்பதாக.
குரு : ஒருவருக்கொருவர் சாமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்!

மக் : உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும். 
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே,எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே ,எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.

(பாடல் திருப்பலியில்)

உலகின் பாவம் போக்கும் இறைவனின் திருச் செம்மறியே! 
எம் மேல் இரக்கம் வையும்

எமக்கு அமைதி அருளும்.

(குரு தலை வணங்கி:ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீhப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)

குரு : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
மக் : ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.

(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்) 

திருவிருந்துப் பல்லவி மத் 26:42

என் தந்தையே, நான் குடித்தால் ஒழிய இத்துன்பக்கலம் அகல முடியாதெனில், உமது விருப்பப்படியே ஆகட்டும்.

திருவிருந்துg; பாடல்:

நன்றி மன்றாட்டு 

ஜெபிப்போமாக:

அன்புத் தந்தையே,

இத்திருவிருந்தில் ஊட்டம் பெற்ற நாங்கள் உம்மைத் தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
நாங்கள் விசுவசிப்பதைப் பெற்றுக்கொள்வோம் என்னும் நம்பிக்கையை உம் திருமகனின் இறப்பினால் எங்களில் உறுதிப்படுத்தினீர்.
அவரது உயிர்த்தெழுதலால் எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் குறிக்கோளை நாங்கள் கண்டடையச் செய்தருளும். 

எல்: ஆமென்

குரு : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக் : உம்மோடும் இருப்பாராக.
குரு : எல்லாம் வல்ல இறைவன் பிதா, சுதன், பரிசுத்த ஆவி உங்களை ஆசீர்வதிப்பாராக!
மக் : ஆமென்.

குரு : சென்று வாருங்கள், திருப்பலி நிறைவேறிற்று. 
மக் : இறைவா உமக்கு நன்றி.

(குரு பீட வணக்கம் செய்து பரிசாரகருடன் திரும்பிச் செல்கிறார்.
நாமும் இறைவனைப் புகழ்ந்தேத்திய வண்ணம் நற்செயல்களைப் புரிய இல்லம் திரும்புவோம்.)

Description: as

வாருங்கள் சட்டத்தை உள்ளத்தில் எழுதுவோம்... (7.3.2021)

வாருங்கள் சட்டத்தை உள்ளத்தில் எழுதுவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
உண்மையை விட பரபரப்பானது பொய்.... பலவிதமான பொய்களை கூறி, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி நாங்கள் மட்டுமே நேர்மையானவர்கள் என்று கூறி ஆட்சியையும் அதிகாரத்தையும் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனுதினமும் பரபரப்பான நிகழ்வுகளோடு நகர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் தற்போதைய நிலையில் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை சட்டங்கள் குறித்து சிந்திக்கவும் செயலாற்றவும் அழைப்புக் தருகின்றார்.

சட்டங்கள் என்பது மனிதன் அறநெறியோடு இச்சமூகத்தில் வாழவேண்டும் என்ற உன்னதமான  சிந்தனையின் அடிப்படையில் அறநெறியோடு வாழ தனக்குத்தானே மனிதன் உருவாக்கிக் கொண்டவை ஆகும். இவ்வடிப்படையில் இறைவனால் முன்மொழியப்பட்டு மோசே வழியாக அன்று இஸ்ரவேல் மக்களுக்கு வழங்கப்பட்ட சட்டம்தான் பத்து கட்டளைகள். இதனைப் பற்றி தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.
பத்துக்கட்டளைகள் பத்தும் மனிதன் அறநெறியோடு வாழ வேண்டும் என்பதற்காக உருவானவை. ஆனால் அறநெறியை முன்னிறுத்தி உதயமான சட்டங்களை எல்லாம்  மனிதன் அழிக்கும் சட்டங்களாக மாற்றி விட்டான். பொய் சொல்லாதே என சட்டம் கூறினால் கடவுளை பற்றி பொய் சொல்வதை தர்மமாக கருதினான் மனிதன். மனிதனை மனிதன் மதிக்கத் தவறி மனிதனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை கொண்டு  ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அடிமைப்படுத்தவும் தனக்கு கீழாக நடத்தவும் பயன்படுத்திக் கொண்டான். உண்மையான சட்டத்தின் நோக்கம் அடிமைப்படுத்துவது அல்ல மாறாக அன்பால் அனைவரையும் அரவணைத்து வாழ்வதாகும்.

ஒருமுறை  ஆலயப் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் தன்னுடைய தெய்வத்திற்கு பலவிதமான விலை உயர்ந்த ஆபரணங்களை எல்லாம் அணிவித்து அழகு பார்த்தார். மறுநாள் ஆலயத்திற்கு வந்து கதவைத் திறந்தபோது தெய்வத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆபரணங்கள் எல்லாம் யாரோ ஒருவரால் களவாடப்பட்டு இருந்தது.  இதனைக் கண்டு கோபமுற்ற அந்த ஆலய பணியாளர் ஆண்டவனை நோக்கி நீயெல்லாம் ஒரு இறைவனா? உனக்கு அணிவித்த நகைகளை உன்னால் பாதுகாக்க இயலவில்லையே, பிறகு எப்படி மனிதர்களை பாதுகாப்பாய்? என்று கோபத்தோடு இறைவனிடம் தனது கதறலை வெளிப்படுத்தினான்.அவன் திட்டும் போது அமைதி காத்த இறைவன் அவனது கோபம் சற்று குறையும் போது அவன் முன்பாக காட்சி கொடுத்து மனிதா நீ விலை உயர்ந்த நகைகளின் மீது அதிக அன்பு கொண்டிருந்ததால் அது களவாடப்பட்ட போது நீ கோபம் கொண்டாய். என் பார்வையில் அந்த விலை உயர்ந்த ஆபரணங்களை விட நீயே எனக்கு முக்கியம் எனவேதான் உனக்கு ஆறுதல் கூற வந்துள்ளேன் என்றார்.  அந்த ஆலய பணியாளரும்  தனது செயல் குறித்து மனம் வருந்தி இறைவனிடம் சரண் அடைந்தார்.
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் பெரும்பாலும் மனிதர்கள் இறைவன் பெயரால் வகுத்துள்ள  சட்டங்களை மையப்படுத்தி மனிதனை மனிதன் நசுக்கவும் இறைவன் பெயரால் தான் வாழவும் வளரவும் விரும்பி சகமனிதனை  அதற்கு பலியாக மாற்றுகிறான். ஆண்டவரின் பார்வையில் இச்செயல் முற்றிலும் தவறானது. மனிதர்கள் ஒவ்வொருவருமே அது யாராக இருந்தாலும் சரி யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்கு கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமும் இருக்கின்றார். என்று இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது.  ஞானமாய் இருக்கும் இறைவன் நமக்கு நல்லது எது?, நாட வேண்டியது எது? என்பதையெல்லாம் ஒவ்வொரு நாளும் தன்னுடைய வார்த்தைகளின் வழியாக நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட அன்று கடவுளின் ஆலயமான எருசலேம் தேவாலயத்தில் பலவிதமான பாகுபாடுகளை உருவாக்கிக்கொண்டு மக்களிடமிருந்து பணங்களை பறித்துக் கொண்டு மக்களை ஏழைகளிளும் ஏழையாக மாற்றிக் கொண்டிருந்த அந்த அநீதியான சூழல் ஆலயத்தில் அரங்கேறுவது கண்டு வருத்தமுற்ற இயேசு சட்டையைக் சுழற்றினார் சட்டத்தால் நயவஞ்சகத்தோடு மக்களை அடிமைப்படுத்தி அவர்களை நோக்கி... இன்றும் நாம் வாழும் சூழலில் கடவுளின் பெயரால் ஆங்காங்கே பல விதமான வன்முறைகளும் பிரித்தாளும் யுத்திகளும் தொடர்ந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  எனவே இச்சூழலில் நாம் உண்மை இறைவன் உணர்த்தும் உண்மைகளை இறைவார்த்தையின் அடிப்படையில் உணர்ந்துகொள்ள அழைக்கப்படுகின்றோம்.

 இறைவன் படைத்த இந்த உலகில் அனைத்தும் அதிசயமாக இருக்கும் போது மனிதன் உருவாக்கிக் கொண்டுள்ள சட்டங்கள் அதன் உண்மைத்தன்மை எது? என்ன? என்பதை அனுதினமும் ஆராய்ந்து செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம். இன்றும் நம் நாட்டில் இன்றும் விவசாயிகளின் நலனுக்கு என்று சொல்லி உருவாக்கப்பட்ட சட்டங்கள் உண்மையில் விவசாயிகளின் நலனை முன் நிறுத்தவில்லை என்பதை மையப்படுத்தி வீதிகளில் இறங்கி போராடி கொண்டிருக்கும் விவசாயிகளின் நிலையை நாம் நன்கு அறிந்திருப்போம் ... 
நாட்டில் ஆளும் அரசின் தவறை சுட்டிக்காட்டினால்  அதனை ஏற்றுக்கொண்டு சரி செய்வதை விட்டு விட்டு பேசியவரை சிறையில் அடைக்கவும் நிலையே இன்று சட்டத்தின் மகத்துவமாக போற்றப்படுகிறது...
இச்சூழலில் இறைவன் உள்ளார்ந்த ஆலயம் பற்றி பேசி உள்ளத்தில்  எழுதப்படவேண்டிய சட்டம் பற்றி நயமாக எடுத்துரைக்கிறார்.
இறைவன் நமக்குத் தந்த சட்டம் என்பது அன்பை அடிப்படையாகக் கொண்ட அன்பின் சட்டம்... அந்த அன்பின் சட்டத்தை உள்ளத்தில் எழுதுவோம்.... அதனை செயலாற்றுவோம்.... சட்டத்தால் அநீதிகள் இழைக்கப்படும் போது அதனை எதிர்த்து குரல்கொடுக்கும் இயேசுவின் உண்மை சீடர்களாகிட  இறையருளை வேண்டுவோம்...     
 
வெள்ளி, 5 மார்ச், 2021

இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம்... (6.3.2021)

இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நிகழ்ந்து கொண்டிருக்க கூடிய இந்த தவக்காலத்தில் பலவிதமான தவ முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய நமக்கு இன்று இறைவன் ஊதாரி மகன் உவமை வழியாக நமக்கு உணர்த்தக்கூடிய செய்தி இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம் என்பதாகும்.

தவறான வழியில் சொத்தைப் பிரித்துக் கொண்டு சென்ற இளையமகன் தான் செயல் தவறு என உணர்ந்து தந்தையிடம் மன்னிப்பு வேண்டி வருகிறான் தந்தையும் மகனை ஓடிச் சென்று வரவேற்று அவனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்.  இது இயல்பாக நெடுங்காலமாக பிள்ளைகளின் தவறை பெற்றோர் மன்னிப்பதும் மறப்பதும்  நடைபெற்று வருகிறது.

பொதுவாக கூறுவார்கள் ஒருவனுக்கு நீ கொடூர தண்டனை கொடுக்க வேண்டுமென நினைத்தால் அவனை மன்னித்து விடு.... என கூறுவார்கள்.

மன்னிப்பு என்பது தாயும் தந்தையும் தன் பிள்ளைகளுக்கு எளிதில் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.  
இவ்வடிப்படையில் தான் தந்தையாம் இறைவனும் நம் தவறுகளை பலமுறை மன்னித்து நம்மை தன்பிள்ளை என ஏற்றுக் கொள்கின்றார்.  ஆனால் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் மூத்த மகனின் மனநிலையில் இருந்து விடுபட்டு வாழ அழைக்கப்படுகிறோம். மனம் திரும்பி வந்த தம்பியை ஏற்றுக்கொள்ளவும் தன் தம்பியை ஏற்றுக்கொண்ட தந்தையை ஏற்றுக்கொள்ளவும் மூத்த மகனின் மனம் மறுக்கிறது.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பெரும்பாலான நேரங்களில் நம்மால் நமது குடும்ப உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ள இயலுவதில்லை. அவர்கள் செய்யக்கூடிய சிறுசிறு நல்ல காரியங்களையும் ஊக்கப்படுத்த நாம் முன்வருவதில்லை. ஊதாரி மகன்  உவமையில் வரக்கூடிய மூத்த மகனைப் போல நம்மை மட்டுமே முன்னிறுத்தி பல நேரங்களில் உறவுகளிடம் இருந்து விலகி நிற்கின்றோம்.தவறிழைத்த ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டி வருகிறான் என்றால் அவனது உள்ள மாற்றத்தை நாம் உணர்ந்து கொள்ள முயல வேண்டும்.

பொதுவாகவே கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு என்பார்கள்.
 கண்ணுக்கு உலகம் தெரியும்...
 கண்ணீருக்கு உள்ளம் தெரியும் ...

கண்ணீரோடு தன் தந்தையை நோக்கி தான் செய்தது தவறு என கூறிவந்த ஊதாரி மகனை, தந்தையும் மன்னித்து அரவணைத்து ஏற்றுக்கொண்டது போல, நாம் நமது குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரையும் ஏற்றுக் கொள்ள முயலுவோம். 
 ஏனெனில் நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நாம் விடக்கூடிய மூச்சுக்காற்றை போன்றவர்கள்.
மூச்சுக் காற்றை விட்டால் மீண்டும் அந்த மூச்சுக்காற்றை நாம் வாங்குவது போல...  உறவுகளை விட்டால் நாம் மீண்டும் வாங்கித்தான் ஆகவேண்டும். 
 இன்றைய முதல் வாசகத்தில் கூட கடவுள் நம்மீது கொண்ட அதிகமான அன்பின் காரணமாக நம் மீது அவர் இரக்கம் காட்டி நமது தவறான  செயல்களை எல்லாம் மிதித்துவிட்டு, நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அதனை ஆழ்கடலில் எரிந்து விட்டு, நம்மை தனது அன்பு பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார். நாம் நமது குடும்ப உறவுகளை மன்னித்து ஒருவரோடொருவர் ஏற்றுக்கொண்டு இன்புற்று வாழும் போது மட்டுமே இறைவனது அரசான இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய முடியும். இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய இந்த தவக் காலத்தில் நாம் எடுக்கும் தவ முயற்சிகள் வழிகாட்டட்டும். .. அதற்கான அருளை இறைவனிடத்தில் தொடர்பு மன்றாடிப் வேண்டிப் பெற்றுக் கொள்வோம். 

இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம்...

வியாழன், 4 மார்ச், 2021

நாம் அனைவரும் சகோதரர்களே ... (5.3.2021)

நாம் அனைவரும் சகோதரர்களே ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைய முதல் வாசகத்தில் தன் சகோதரன் மீது பொறாமை படக்கூடிய இதர சகோதரர்களைப் பற்றி தான் நாம் வாசிக்கின்றோம்....

சகோதரன் மீதான பொறாமை என்பது தொடக்க காலத்திலிருந்தே தொடரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது ...
உதாரணமாக ...
1. காயின் - ஆபேல்
2. ஏசா - யாக்கோபு
3. யாக்கோபின் புதல்வர்கள் -  யோசேப்பு  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட... ஒரு நிலத்தை குத்தகைக்கு விட்ட ஒரு நபர்  தனக்கு சேர வேண்டியவைகளை பெற்று வருமாறு தனது பணியாளர்களை அனுப்புகிறார். ஆனால் குத்தகைக்கு நிலத்தை பெற்றவர்கள் அவரை எள்ளி  நையப்புடைத்து விரட்டுகிறார்கள். நிலத்தின் உரிமையாளர் தனது ஒரே மகனை அனுப்பி தனக்கு சேர வேண்டியதை பெற்று வருமாறு  அனுப்புகிறார்.ஆனால் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்களோ இவனே சொத்துக்கு உரியவன் என்று கூறி அவனை கொலை செய்கிறார்கள்... இயேசு இந்த உவமையைக் கூறி  நிலத்தின் உரிமையாளர் இப்போது என்ன செய்யவேண்டும்? என்ற கேள்வியை தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்து எழுப்புகிறார். அவர்கள் கூறக்கூடிய பதில்களுக்கு ஏற்றவகையில் இறையாட்சியை இந்நிகழ்வுக்கு ஒப்பிட்டு இறையாட்சி அது உங்களிடம் இருக்கிறது அதனை நீங்கள் உணர்ந்து கொள்ளாமல் செயலாற்றும் போது உங்களிடமிருந்து இறையாட்சி பறித்து கொள்ளப்படும் என்ற செய்தியினை வழங்குகின்றார்.  

இறையாட்சி என்பது அன்பு நீதி சமத்துவத்தின் அடிப்படையில் அமையக் கூடியதாகும். இத்தகையப் பண்பானது அகிலத்தில் உள்ளவர்களிடம் காணப்பட வேண்டும். அதற்கு இப்பண்புகள் அவரவர் வீட்டில் முதலில் அரங்கேற வேண்டும். என்ற செய்தியினைத்தான் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்கின்றோம்.
இறையாட்சியின் மதிப்பீடுகள் நம் வீட்டில் நிறைவேற வேண்டுமென்றால் நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் சகோதர உணர்வோடு ஒன்றித்து வாழவும் வேண்டும்.
அன்பு என்பது ஆழ்கடல் போன்றது கரையில் தேடினால் சிப்பிகள் தான் கிடைக்கும். மூழ்கித் தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும். நமது குடும்பங்களில் முத்துக்களை கண்டு கொள்வோம்.

இன்று குடும்பங்களில் இலவசமாக கிடைக்கும் சொற்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் எளிதில் காயப்படுத்தி விட்டு அவர்களின்  விலை மதிக்க முடியாத அன்பை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இருந்து மாற்றம் பெற்று ஒருவர் ஒருவரை அன்பு செய்யக்கூடிய இயேசுவின் உண்மையை சகோதரர்களாக இம்மண்ணில் வலம்வர இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.   
   
புதன், 3 மார்ச், 2021

வாருங்கள் செயலில் இறங்குவோம்... (4.3.2021)

வாருங்கள் செயலில் இறங்குவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான்கு பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய ஒரு சிறிய விமானத்தில், ஒரு மருத்துவர், ஒரு வழக்கறிஞர், ஒரு குரு, ஒரு சிறுவன் ஆகிய 4 பேரும் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென விமானி உரத்த குரலில் கூறினார், "விமானம் பழுதடைந்து விட்டது. எனது கட்டுப்பாட்டில் இல்லை. விரைவில் கீழே குதித்து விடுங்கள். அங்கே மூன்று பாராசூட் உள்ளது!" என்று கூறிக்கொண்டே அவர் குதித்து தப்பித்து விட்டார். உடனே மருத்துவர், "நான் பிற உயிர்களை காப்பாற்றும் ஒரு பொது சேவகன். நான் போகிறேன்", என்று கூறி ஒரு பாராசூட்டை எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டார். அடுத்ததாக வழக்கறிஞர், "இந்த உலகில் சண்டை அதிகமாகிவிட்டது. நீதி மறைந்து வருகிறது. எனவே மக்களுக்கு உதவ நான் போகிறேன்", என்றவாரே குதித்துவிட்டார். மூன்றாவதாக இருந்த குரு மூன்றாவது பாராசூட்டை எடுத்து சிறுவனிடம் கொடுத்து, "தம்பி! நீ போ. நான் வயதானவன். இந்த உலகில் வாழ்ந்து அனுபவித்தவன். நீ வாழ வேண்டியவன்", என்றார். சிறுவனோ, "இல்லை குருவே! இருவருமே வாழலாம். ஏனென்றால் வழக்கறிஞர் அவசரத்தில் என் பள்ளிக்கூட பையை எடுத்துக்கொண்டு இறங்கி விட்டார். கடவுள் உங்கள் தாராள உள்ளத்தை அறிந்து இருக்கிறார்" என்றான். 
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல் செழிப்போடு வாழ்வர். 
ஆனால் வலுவற்ற மனிதரில் நம்பிக்கை வைப்பவர்கள் பாலைநில புதர்ச் செடிகள் போல வறண்டு போவர் என்று கூறுகிறார். நமது உள்ளத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் ஆய்ந்து அறிபவராக ஆண்டவர் இருக்கின்றார் எனவும் அவரிடத்தில் நேர்மையோடு வாழ நாம் அழைக்கப்படுகிறோம் எனவும் இறைவாக்கினர் எரேமியா கூறுகிறார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து, ஆண்டவரால் பராமரிக்கப்பட்டு விண்ணக பேரின்பத்தை உரித்தாக்கிக் கொண்ட ஏழை லாசரைப் பற்றியும், பகட்டான ஆடைகளும், பந்தி நிறைய உணவு வகைகளும், வீடு நிறைய செல்வங்களும் கொண்டிருந்த செல்வந்தர் ஆண்டவரின் மேல் நம்பிக்கை வைக்காமல் வலுவற்ற இவ்வளவு சார்ந்த காரியங்களில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தியதால், அவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் இறுதியில் அணையாத நெருப்புக்குள் தள்ளப்பட்டதையும் இன்று நமக்கு எடுத்துரைக்கின்றார். 

       ஆம் அன்புக்குரியவர்களே! எங்கே சுயநலம் இருக்கிறதோ அங்கே கடவுள் இல்லை. எங்கே இரக்கம் இருக்கிறதோ, அங்கே கடவுள் உள்ளார்.
நம்முடைய வாழ்விலும் நாம் அன்பையும் கருணையையும் மையப்படுத்தி வாழ அழைக்கப்படுகிறோம். இந்த உலகத்தில் யாரும் உலக முடிவு வரை நிலையாக வாழப்போவதில்லை. எல்லோரும் மரணத்தை நோக்கி தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். மரணத்தை சந்திக்க நீண்ட கால வரிசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு முன்னும் பின்னும் எத்தனையோ பேர். நாம் நமது வாழ்வின் இறுதி நாட்களில்,  நாம் வாழும் போதே சக மனிதர்களுக்கு இரக்கம் காட்டி இருக்கலாம், அன்பு செய்திருக்கலாம், மன்னித்து இருக்கலாம், அவர்களை கை தூக்கிவிட்டிருக்கலாம், அவர்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கலாம் என்று நினைத்துப் பார்த்து வருந்துவதை விட, இன்றே இப்பொழுதே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடத்திலும் அன்பும் இரக்கமும் கருணையும் கொண்டவர்களாக வாழ இன்று உறுதி ஏற்போம். பிறருக்கென வாரி வழங்கிட நம்மிடம் சொத்துகள் இல்லாவிட்டாலும், தனது இரக்கம் நிறைந்த மனதாலும், தனது கனிவான  வார்த்தைகளாலும், தனது கையை நீட்டி பொருள் கொடுத்து உதவி செய்த அந்த குருவையும் சிறுவனையும் போல நாமும் நமது அன்பான வார்த்தைகளையும், ஊக்கமூட்டும் வழிகாட்டுதல்களையும், புன்னகையால் பூக்கும் அன்பு மலர்களையும், நமது ஆசிகளையும் பிறரோடு பகிர்ந்து கொள்வோம். சுயநலத்தில் இருந்து விடுதலை பெற்றவர்களாக இயேசுவைப்போல அன்பும் கனிவும் இரக்கமும் தாராளமாக நம்மில் வளர இடம் கொடுப்போம்.

செவ்வாய், 2 மார்ச், 2021

நாம் எந்த வகை மனிதர்கள்...? (3.3.2021)

 நாம் எந்த வகை மனிதர்கள்...?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்திலும்  இரண்டாம் வாசகத்திலும் இரு வகை மனிதர்களை நாம் காண்கிறோம்.  ஆண்டவரால் அழைக்கப்பட்டு ஆண்டவரின் வார்த்தைகளை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டவரான இறைவாக்கினர் எரேமியாவையும், அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து, அவரை குற்றம்சாட்டி கலகம் செய்வதற்காக காத்துக்கொண்டிருந்த கூட்டத்தினரையும் முதல் வாசகத்தில் காண்கிறோம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது எருசலேமை நோக்கிய பயணத்தைப் பற்றியும், அதில்தான் சந்திக்கவிருக்கின்ற சாட்டையடிகள், ஏளனங்கள், வேதனைகள், மரண தண்டனை என்று தனது துன்பகரமான பாடுகள் நிறைந்த பயணத்தைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்த பொழுது அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவரது பன்னிரண்டு சீடர்களிடையே அவ்வேளையில் அங்கு வந்த செபதேயுவின் தாய் தனது பிள்ளைகள் இருவருக்கும் ஆண்டவர் இயேசுவின் அரியணையில் வலப்புறமும் இடப்புறமும் அவர்களை அமரச் செய்ய வேண்டும் என்ற ஆசைகளும், தன் மகன்களை முன்னிறுத்துகின்ற சுயநலமும், பதவி மோகமும் கொண்டு பேசுகின்ற சிந்தனைகளை கொண்டு திகழ்வதை நாம் காண்கிறோம். 

                  இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்திலும் இரு வகை மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல் வகை மனிதர்கள், "இந்த சமுதாயத்தால் எனக்கு என்ன பயன்?" என்று சிந்திப்பவர்கள். இந்த உலகத்தில் தாங்கள் தான் மிக முக்கியமான நபர் என்ற மாயையில் வாழ்கின்றவர்கள் இவர்கள். தங்களுக்காக உழைக்கத் தான் தங்களை சுற்றி இருப்பவர்கள் வாழ்கிறார்கள் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு. இவர்களது சிந்தனை, எண்ணம், செயல்பாடுகள் அனைத்திலும் மையமாக இருப்பது சுயநலம் மட்டுமே. தங்களின் சுயலாபத்திற்காகவும் சுயமகிழ்வுக்காகவும் பிறரை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியவும் தயங்காதவர்கள் இவர்கள். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்து தங்களை வாழவைக்கும் இந்த சமுதாய வீட்டை சுரண்டி அழிக்கும் சுரண்டல் வாதிகளாக இவர்கள் இருப்பார்கள். இவர்களின் வாழ்வில் சமூகக் கண்ணோட்டமும் திறந்த மனமும் குறுகிப் போனதாகவே இருக்கும். மொத்தத்தில் இவர்கள் சமுதாயத்தை அழித்துக் கொண்டிருக்கும் பூச்சிகளாகவே இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாம் வகை மனிதர்களைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது இவர்கள், "இந்த சமுதாயத்திற்கு என்னால் என்ன பயன்?" என்று சிந்தித்துப் பார்ப்பவர்கள். கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை என்ற வாழ்வியல் உண்மையை அறிந்து இருப்பவர்கள். இவர்கள் பிறருக்காகவும் இந்த சமுதாயத்திற்காகவும் நம்மையே நாம் அர்ப்பணிப்பதற்கும் நம் வாழ்வின் நிறைவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்து அனுபவித்து மகிழ்பவர்கள் இவர்கள்.  இவர்களது சிந்தனை எண்ணம் செயல்பாடுகள் அனைத்திலும் மையமாக இருப்பது பிறர்நலம் மட்டுமே. இவர்கள் தங்களை காக்கும் சமுதாயத்தை தாங்களும் காப்பதற்காக தங்களையே அர்ப்பணிக்கத் துணியும் தியாக வாதிகள். தாம் வாழ்கின்ற சமுதாயம், திறன்மிக்கதாய், மற்றவர் நலனில் அக்கறை கொண்டதாய் செயல்படுவதற்கான தூண்டுதலை, வாழ்வதற்கான தூண்டுதலைத் தந்து கொண்டே இருப்பவர்கள். இத்தகைய இரண்டாம் வகை மனிதர்களே சமுதாயத்தை வளப்படுத்தும் நாற்றங்கால்கள். 

இந்த இரு வகை மனிதர்களின் குணநலன்களையும் அவர்களது வாழ்வு முறைகளையும், இன்றைய இரண்டு வாசகங்களின் வழியாகவும் நமக்கு ஆண்டவர் இயேசு தெளிவாக எடுத்துரைக்கின்றார். ஆண்டவரால் இவ்வுலகில் படைக்கப்பட்டு, இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இந்த இரு வகை மனிதர்களில் எத்தகைய மனிதர்களாக இருக்கிறோம்? என்பதை இன்றைய நாளில் ஆண்டவர் திருமுன் சிந்தித்துப் பார்ப்போம். 
நமக்காக அவர் படைத்த இந்த சமுதாயத்தை, இந்த இயற்கையை பாதுகாக்கக் கூடியவர்களாக, பண்படுத்தக் கூடியவர்களாக, அவரின் அன்பு மக்களாக வாழ்ந்திட அவரின் அருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்.

திங்கள், 1 மார்ச், 2021

பணி செய்வோம்..... (2.3.2021)

பணி செய்வோம்.....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது..!!
அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன..!!
மேலும், ''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்'' என்றொரு குறிப்பும் இருந்தது..!!

தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால்
யார்..?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை..!!
இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை அவர்களால்எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்..!!
வீட்டை திறந்தவர்களுக்கு
ஒரே அதிர்ச்சி..!! 
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன..!!
வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது அதில், "என்னா..?? படம் சூப்பரா..??" என்று எழுதியிருந்தது..!!
அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது..!!
"ஐயோ..!! களவாணிப்பயலா அவன்..??" என்று..!!

இன்றைய சமூகத்தில் நமக்கு பல்வேறு தலைவர்கள் இருக்கிறார்கள். நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வை பொருத்தமட்டில் நமக்கு நாமே தலைவனாக தலைவியாக இருக்கின்றோம்.
இன்றைய வாசகங்கள் வழியாக ஆண்டவர் இயேசு தலைவர்களின் வாழ்வு எத்தகையது என்பதை நமக்கு விளக்குகிறார்.

இன்றைய நாட்களில் 
பெரும்பாலும் நாம் காண்கின்ற தலைவர்கள் ஆடம்பரம் தனது பெயருக்கான புகழ், செல்வாக்கு ஆடை அலங்காரம் சொத்துகளை பெருக்கிக் கொள்ளுதல், போன்ற காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதையும், தனது கடமைகளை கண்டுகொள்ளாது அதன் விளைவுகளின் தாக்கத்தையும் மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளையும் கண்டுகொள்ளாத நிலையை இன்று நாம் காணலாம். ஆனால் இத்தகைய தலைவர்களைப் போல நாம் இருக்காது, நீதியை தேடவும், திக்கற்றோருக்கு உதவி செய்யவும், ஒடுக்கப்பட்டோரை விடுவிக்கவும், இவை செய்தலை விட்டொழித்து நன்மைகள் செய்யவும் இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.

இக்காலத்தில் நம் இந்தியத் திருநாட்டில் தேர்தலுக்கான நேரம் வந்து கொண்டிருக்கிறது. 

ஆளுக்கொரு கட்சியை நாள்தோறும் புதிது புதிதாக துவங்கி கொண்டே இருக்கிறார்கள். 
இன்று புதிதாக துவங்கப்பட்ட கொண்டிருக்கிற கட்சியினருக்கு கூட ஆட்சியில் இருப்பவர்கள் செய்கின்ற தவறுகளை அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டாமல் கண்டுகொள்ளாமல் இன்று எதிர்க்கட்சியினரை  சாடிக் கொண்டிருப்பதை இந்த நாட்களில் நாம் காண்கிறோம். 

அன்று தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் பூஜைகள் செய்ய வைத்தவர்களால் இன்று தன்னுடைய வீட்டில் தமிழில் பூஜைகள் செய்ய, வழிபாடு நடத்த முடியவில்லை.

 இன்று சிறைக்குச் சென்று வந்த சீமாட்டிகள் எல்லாம் சிறப்பு விருந்தினர்களாக கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறைக்குச் சென்று வருவது தனது அரசியல் விளம்பரத்திற்கான சிறந்த வழியாக இன்று கருதப்படுகின்றது. 

அன்று தள்ளாடும் வயதிலும் கூட நாற்காலியில் அமர்ந்துகொண்டே தனது பதவியை விட்டுக் கொடுக்காமல், நாட்டை வழி நடத்தினார்,  என்று சொல்ல வந்த நபர், தான் தற்பொழுது தள்ளாடும் வயதில் இருப்பதை தயக்கமின்றி மறந்துவிட்டார்.

ஒரு குறிப்பிட்ட தலைவருக்கு துணை நிற்பதாக கூறிக்கொண்டு இன்று தாங்களாகவே பல்வேறு புதிய புதிய கட்சிகளை துவங்கி கொண்டே இருக்கிறார்கள். 
வீதிக்கு வீதி இன்று மார்தட்டிச் சொல்லக்கூடிய நாம் தமிழர் என்ற கட்சியின் பெயரும் கூட ஒரு பார்ப்பனியரால் தமிழருக்கு வழங்கப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இன்று இவற்றை சிந்தித்து செயலாற்ற இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன. 

இன்று நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் அனைத்தும் நம்மை சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்துகின்றன. இன்று உதயமாகி கொண்டிருக்கும் அனைத்து தலைவர்களையும் உத்தமர்களாக எண்ணிவிட வேண்டாம். காலத்தையும் சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு சிலர் கொண்டிருக்கக்கூடிய தனிப்பட்ட சித்தாந்தங்களை மற்றவருக்கு நலம் பயக்காத சித்தாந்தங்களை, மக்கள் மத்தியிலே விதைக்கக்கூடிய கட்சிகள் இன்று ஏராளம் ஏராளம். நான் எந்த மதத்தையும் சாராதவன் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சில கட்சியின் தலைவர்களும் கூட, பல்வேறு யாகங்கள் நடத்துவதும் பூஜைகள் நடத்துவதும் நாம் கண்கூடாக காண்கின்ற ஒரு காரியம்.

அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள் ஆனால் அவர்களைப் போல இருக்காதீர்கள் என்று, இன்று இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார். இன்று பலரும் மக்களின் வாழ்வில் மாற்றத்தை விதைக்க போகிறேன். மக்களை உயர்த்த போகிறேன் என்றெல்லாம் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விதைக்கும் மாற்றமும் சில குறிப்பிட்ட சித்தாந்தங்களை மையமாகக் கொண்டதாகவும் குறிப்பிட்ட நபர்களின் சுயநலப் போக்கை வளர்ப்பதாகவும், பிறருடைய மறைவான முகமூடிகள் ஆகவும் இங்கு செயல் ஆற்றுகிறார்கள். 

தலைவர்களில் ஏன் இவ்வாறு மாறுபட்டு செயலாற்றுவார்கள் என்று பார்க்கும் பொழுது தங்களது பதவி பணம் பட்டம் புகழ் இவற்றின் மேல் உள்ள மோகம் என்று அவர்களைத் திசைதிருப்பி கொண்டிருக்கின்றது.

இன்று நாட்டின் மீதும் மக்களின் மீதும் உண்மையான அக்கறை கொண்ட தலைவர்களில் காண்பது மிக மிக அரிதாக இருக்கின்றது. கொடுக்கப்படுகின்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் மறு தேர்தலுக்கு முன்பாக கவர்ச்சிகரமான தோற்றத்தில் மக்களுக்கு அறிமுகப் படுத்தப் படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட இத்தகைய திட்டங்கள் கவர்ச்சிகரமான இந்த அறிவித்தலோடு தம்மையும் முடித்துக் கொள்கின்றன என்பது இன்றைய நிதர்சனமான உண்மை. 

இத்தகைய சூழலுக்கு மத்தியில் நாம் எத்தகைய அவர்களாக வாழ்ந்திட வேண்டும் என்பதை இயேசு என்ற வாசகத்தின் வழியாக நமக்கு வெளிப்படுத்துகிறார். 

தலைவனோடும் தலைவனாகவும் இருப்பது மட்டுமல்ல அழகு.
தன்னை வழங்கி தரணி செழித்தலில், வெற்றி காண்பவரே இன்று சிறந்த தலைவராக சித்தரிக்கப்படுகிறார். 

காற்றும் கருமேகமும் உரசிக்கொள்ள மழை பொழிகிறது. வெள்ளை நிற கற்கள் இரண்டு உராய நெருப்பு உண்டாகிறது. நன்னீர் மண்ணில் ஒன்றாக கலக்க பசுமையான தாவரங்கள் உருவாகின்றன. மனிதனும் இறைச்சாயலில் ஒன்றியத்தால் மனிதனாக வாழ தொடங்க முடியும் என இன்றைய இரண்டு வாசகங்கள் வழியாகவும் நாம் கடவுளிடமா? சாத்தானிடமா? எங்கு இணைந்திருக்கிறோம்? நமது வார்த்தைகள் எங்கு இணைந்திருக்கின்றன? நமது செயல்பாடுகள் எவற்றை நோக்கி இருக்கின்றன? என்று நமது வாழ்வை திருப்பி பார்க்க இறைவன் என்று நமக்கு அழைப்பு தருகின்றார்.
அவரின் குரலுக்கு செவி கொடுப்பவர்களாகநம் தலைவராம் இயேசுவின் வழியில் நமக்கு நாமே நல்ல தலைவர்களாக செயல்படவும் வருகின்ற தேர்தலில் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு மக்களுக்காக உண்மையிலேயே பணி செய்யக்கூடிய நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இறையருளை சிறப்பாக வேண்டுவோம்.

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...