வியாழன், 4 மார்ச், 2021

நாம் அனைவரும் சகோதரர்களே ... (5.3.2021)

நாம் அனைவரும் சகோதரர்களே ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே 
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இன்றைய முதல் வாசகத்தில் தன் சகோதரன் மீது பொறாமை படக்கூடிய இதர சகோதரர்களைப் பற்றி தான் நாம் வாசிக்கின்றோம்....

சகோதரன் மீதான பொறாமை என்பது தொடக்க காலத்திலிருந்தே தொடரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது ...
உதாரணமாக ...
1. காயின் - ஆபேல்
2. ஏசா - யாக்கோபு
3. யாக்கோபின் புதல்வர்கள் -  யோசேப்பு  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட... ஒரு நிலத்தை குத்தகைக்கு விட்ட ஒரு நபர்  தனக்கு சேர வேண்டியவைகளை பெற்று வருமாறு தனது பணியாளர்களை அனுப்புகிறார். ஆனால் குத்தகைக்கு நிலத்தை பெற்றவர்கள் அவரை எள்ளி  நையப்புடைத்து விரட்டுகிறார்கள். நிலத்தின் உரிமையாளர் தனது ஒரே மகனை அனுப்பி தனக்கு சேர வேண்டியதை பெற்று வருமாறு  அனுப்புகிறார்.ஆனால் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்களோ இவனே சொத்துக்கு உரியவன் என்று கூறி அவனை கொலை செய்கிறார்கள்... இயேசு இந்த உவமையைக் கூறி  நிலத்தின் உரிமையாளர் இப்போது என்ன செய்யவேண்டும்? என்ற கேள்வியை தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்து எழுப்புகிறார். அவர்கள் கூறக்கூடிய பதில்களுக்கு ஏற்றவகையில் இறையாட்சியை இந்நிகழ்வுக்கு ஒப்பிட்டு இறையாட்சி அது உங்களிடம் இருக்கிறது அதனை நீங்கள் உணர்ந்து கொள்ளாமல் செயலாற்றும் போது உங்களிடமிருந்து இறையாட்சி பறித்து கொள்ளப்படும் என்ற செய்தியினை வழங்குகின்றார்.  

இறையாட்சி என்பது அன்பு நீதி சமத்துவத்தின் அடிப்படையில் அமையக் கூடியதாகும். இத்தகையப் பண்பானது அகிலத்தில் உள்ளவர்களிடம் காணப்பட வேண்டும். அதற்கு இப்பண்புகள் அவரவர் வீட்டில் முதலில் அரங்கேற வேண்டும். என்ற செய்தியினைத்தான் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணர்கின்றோம்.
இறையாட்சியின் மதிப்பீடுகள் நம் வீட்டில் நிறைவேற வேண்டுமென்றால் நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் சகோதர உணர்வோடு ஒன்றித்து வாழவும் வேண்டும்.
அன்பு என்பது ஆழ்கடல் போன்றது கரையில் தேடினால் சிப்பிகள் தான் கிடைக்கும். மூழ்கித் தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும். நமது குடும்பங்களில் முத்துக்களை கண்டு கொள்வோம்.

இன்று குடும்பங்களில் இலவசமாக கிடைக்கும் சொற்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் எளிதில் காயப்படுத்தி விட்டு அவர்களின்  விலை மதிக்க முடியாத அன்பை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் இருந்து மாற்றம் பெற்று ஒருவர் ஒருவரை அன்பு செய்யக்கூடிய இயேசுவின் உண்மையை சகோதரர்களாக இம்மண்ணில் வலம்வர இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.   
   

3 கருத்துகள்:

  1. மூழ்கித் தேடினால் தான் முத்துக்கள் கிடைக்கும். வாழ்வின் ஆழத்தில் தேடினால் தான் அன்பு வெளிப்படும். அன்பின் ஆழத்தில் பொறாமைகள் மறைந்து போகும். நிறைவான அன்பினால் இந்த உலகம் புத்துயிர் பெறட்டும் என்று அன்புடன் வாழ நம்மை தனது அழகான கருத்துக்களால் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது அன்பான வாழ்த்துக்கள்! ஜெபங்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...