திங்கள், 15 மார்ச், 2021

புதிய வாழ்வுக்கு எதை புறம் தள்ள வேண்டும்?... (16.3.2021)

புதிய வாழ்வுக்கு எதை புறம் தள்ள வேண்டும்...?

அறம் செய்ய காத்திருக்கும் அன்பர்களே...! வணக்கம்.
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மனிதன் எல்லாவற்றையும் பார்க்கிறான்...
ஆராய்கிறான்... 
புரிந்து கொள்கிறான்... 
ஆனால் 
அவனை மட்டும் பார்ப்பதில்லை...
ஆராய்வதில்லை... 
புரிந்து கொள்வதில்லை...
ஆனால் இயேசு தன்னை பார்க்கிறார்... தன்னை ஆராய்கிறார்... தன்னை புரிந்து கொள்கிறார்... அதன் அடிப்படையில் சகமனிதனின் துன்பத்தை தன்னுடையதாக எண்ணி பல ஆண்டுகளாக முடக்குவாதம் இருந்த ஒரு நோயாளியிடம் சென்று அவனுக்கு குணம் தருகின்றார். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம்.
கேட்டாலே உதவி செய்ய யாரும் இல்லாத சூழலில், கேட்காமல் ஒருவருக்கு உதவி செய்யக்கூடியவர்கள் இந்த உலகத்தில் மிகவும் குறைவு.  இத்தகைய மனிதர்களால் தான் இவ்வுலகம் இந்நாள்வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. இயேசுவின் வாழ்வு... நாமும் தேவையறிந்து அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்பிக்கிறது.   இன்று நல்லது செய்தாலும் பலரின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டிய சூழலில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.  அன்று இயேசுவும் அவ்வாறுதான் தள்ளப்பட்டார். ஓய்வுநாள் சட்டத்தை மீறி ஒருவனை குணமாக்கினார் என்பது இயேசுவின் மீதான குற்றச்சாட்டு. ஆனால் சட்டம் எதற்கு என்பதை ஆழமாக அறிந்த இயேசு மனிதனுக்கு தேவையானதை செய்து விட்டு தன் பணியை செய்ய முயன்றார்.  ஆனால் இயேசுவை போல நன்மை செய்வதை விடுத்து விட்டு, அவர் செய்த நன்மையில் குற்றம் காணும் மனிதர்கள் தான் அன்று அதிகமாக இருந்தார்கள். இன்று நாம் வாழும் சூழலிலும் இத்தகையோர் பலர் உண்டு.
நல்லது செய்வதை குற்றம்சாட்டும் மனிதர்களைக் கண்டு அஞ்சாமல் நீங்கள் செய்வது நல்லது என்பதால் அதனைத் தொடர்ந்து செய்து இறையாட்சியின் மதிப்பீடுகளை இச்சமூகத்தில் விதைத்திட நாம் அழைக்கப்படுகின்றோம்.

விதையாக உள்ள நாம் சாகாத வரை அதிலிருந்து புதிய வாழ்வு முளை விடாது. நல்லது செய்யும் பண்பு நம்மிடையே இருக்கிறது. அப்பண்புகள் முளைத்திட வழி கொடுப்போம்...தேவையற்ற  விமர்சனங்களை புறம்தள்ளிய இயேசுவைப்போல்...  
 

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...