வெள்ளி, 12 மார்ச், 2021

வார்த்தைகள் இல்லாத இதயம்... ( 13.3.2021)

 வார்த்தைகள் இல்லாத  இதயம்...

இணைந்து வாழ்வதில் இன்பம் காணும் அன்பர்களே...! வணக்கம்.

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 
பறவைகள் தங்களது சிறகுகளை சுமையாக கருதுவதில்லை....
ஆனால்...
மனிதர்கள் மட்டும் சகமனிதனை தங்களுக்கு இடையூறாக, சுமையாக, தடையாக கருதுகிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருவர் இறைவனிடத்தில் வேண்டுகிறார்கள். ஒருவர் மற்றவரை குறை சொல்லி வேண்டுகிறார். இன்னொருவரோ தன்னை பற்றி மட்டும் எடுத்துக் கூறி இறைவனிடத்தில் தன் வேண்டுதலை கேட்கின்றார்.


இன்று நாம் வாழும் உலகில் பல நேரங்களில் நம்மை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்வதற்காக பல நேரங்களில் பலரை நாம் குற்றவாளிகளாக ஆக்குகிறோம்.


நானும் ஒருநாள் குழிக்குள் போவேன் என்பதை மறந்து போய் தான் அடுத்தவருக்கு குழி பறித்துக்கொண்டே வாழ்கின்றான் மனிதன்.

நாம் நம்மை நேர்மையாளனாக காட்டுவதற்கு அடுத்தவரை குற்றவாளியாக்க வேண்டியது இல்லை என்ற பாடத்தை தான் இறைவன் என்று நமக்கு வாசகங்கள் வழியாக கற்பிக்கின்றார். 
மனிதன் தன் வாழ்வின் மிகச் சிறந்த ஆறுதலை செபத்தில் இருந்துதான் பெறுகிறான். எனவே இறைவனிடத்தில் செபிக்கும்போது அடுத்தவரை குறை கூறி நம்மை நேர்மையாளராக காட்டிக்கொண்டு ஜெபிப்பதை விட்டுவிட்டு,நாம்... நாம் இருப்பது போல நம்மை இறைவனிடத்தில் வெளிபடுத்த கூடியவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம்.

நாம் நமது வாழ்வை செபமாக மாற்ற வேண்டும்... 
அதற்கு முதலில் நாம் மனிதர்களாக வேண்டும்... 
மனிதர்களாகிய நாம் சக மனிதனை அன்பு செய்ய வேண்டும். அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் தேவைக்காக இறைவனிடத்தில் உதவி வேண்ட வேண்டும். நமது தேவைகளை முன் நிறுத்துவதை விட அடுத்தவர் தேவைகளை முன் நிறுத்துவதுதான் இறைவன் எப்போதும் விரும்புகிறார். எனவே நாம் ஜெபிக்கும்போது இதயம் இல்லாத வார்த்தைகளை விட...வார்த்தைகள் இல்லாத இதயம் எவ்வளவோ மேலானது...என்பார்கள்  அதற்கு ஏற்றார்போல அடுத்தவர் நலனை முன்னிறுத்தி இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம்.
 அடுத்தவரை குற்றவாளிகள் என தீர்ப்பிட்டு நம்மை நேர்மையாளராக காட்ட முயலுவதை நிறுத்திவிட்டு நாம் இருப்பது போல நம்மை ஏற்றுக்கொண்டு அடுத்தவரின் நல்வாழ்வுக்கு இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம்.  நாம் செபிக்கும் போது நம்மை நாம் முதலில் உணர்ந்து கொள்வோம். ஏனெனில் நம்மால் உணர முடியாத எந்த செபமும் கடவுளால் கேட்கப்படுவதில்லை. ஏனெனில் அடுத்தவர் நலனை முன்னிறுத்தும் போது நம் நலனை இறைவன் முன் நிறுத்துவார். பிறரை சுட்டிக்காட்டி செபிப்பதை விட நம்மை நாம் நமது குறைகளோடும் நிறைகளோடும்  சுட்டிக்காட்டி செபிப்போம். நமது வாழ்வை இயேசுவின் பாதையில் பதிய வைப்போம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...