வாருங்கள் செயல்படுவோம் ....
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .
இயேசு எருசலேம் சென்று இறப்பதற்கு முன்பாக பெத்தானியா என்ற ஊருக்கு வருகிறார். இவ்வூர் இயேசுவுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஊர். ஏனெனில் இங்குதான் இலாசரை உயிர்பெறச் செய்தார்.
ஓராயிரம் வெற்றுப் பேச்சுகளை விட ஒரு செயல் மேலானது என்பதற்கு ஏற்ப இன்றைய நற்செய்தி வாசகத்தில் மரியா என்ற பெண்மணி இயேசுவிற்கு நறுமணத் தைலத்தை கொண்டு வந்து இயேசுவின் மீது ஊற்றி அவருக்கு பணிவிடை செய்கிறார். ஆனால் யூதாஸ் இந்தத் தைலத்தை வீணாக்குவது ஏன்? இதனை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாம் என்கின்றார்.
சொல்லப்பட்ட கருத்து நல்லதாக இருப்பினும், அது வெளிப்படையான வெற்று பேச்சாக இருக்கிறது. அவரது உள்ளமோ பணத்தின் மீது நாட்டம் கொண்டிருந்ததை இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.
நமது வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் நாமும் பெற்று பேச்சுகளை அதிகம் பேசுகின்றோம். ஆனால் நமது செயல்களும் நமது பேச்சுகளுளும் முற்றிலும் எதிராக இருக்கின்றன.
நமது சொல்லும் செயலும் இணைந்து செல்ல வேண்டும் என்ற பாடத்தை தான் இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு உணர்த்துகிறார். இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் துன்புறும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் துன்புறும் ஊழியர் பற்றி எடுத்துரைக்கின்றார். அவரது வார்த்தைகள் வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல அவை செயல் வடிவம் பெற்றன.
நாம் வாழும் இவ்வுலகில் நமது வார்த்தைகள் செயலாக்கப்பட செயல்கள் மூலம் நமது வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க இன்றைய நாளில் இறையருளை தொடர்ந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக