செவ்வாய், 9 மார்ச், 2021

திருச்சட்டத்தை நிறைவேற்றுவோம்... (10.3.2021)

திருச்சட்டத்தை நிறைவேற்றுவோம்...

அறநெறியோடு வாழ விரும்பும் அன்பர்களே வணக்கம்....

இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன்.
நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும்...
மனைவி வந்தபின் நிம்மதியை தேடுவதும்...
பெரும்பான்மையான ஆண்களின் இயல்பாக உள்ளது...என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப...
இன்று அறநெறியோடு வாழ சட்டங்கள் இயற்றிய நிலைமாறி... வளர்ச்சி என்ற பெயரில் அடுத்தவர் வாழ்வை  வளப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் விரும்பும் சட்டங்களை எல்லாம் இயற்றி அடுத்தவர்கள் மேல் சுமத்தும் நிலை உருவாகியுள்ளது...

இச்சூழலில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக திருச்சட்டத்தை நிறைவேற்றவே வந்தேன் என இயேசு கூறுகிறார். பொதுவாகவே மனிதன் அறநெறியோடு, அன்போடு அனைவரோடும் இணைந்து ஒன்றித்து வாழவே சட்டங்கள் உருவாக்கப்பட்டன. முதன் முதலில் மனிதன் தன் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நாடோடியாகத் திரிந்த மனிதன் தனக்குத்தானே வரையறையை உருவாக்கிக் கொண்டான்.இதுவே தனக்குத்தானே மனிதன் உருவாக்கிய முதல் சட்டம் என்று ஆசிரியர் தாசன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

விவிலிய பார்வையில் அன்று அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வந்த இஸ்ரயேல் மக்கள் அறநெறியோடு வாழ வேண்டும் என்பதற்காக மோசே வழியாக இறைவன் தந்த சட்டங்களாக தான் 10 கற்பனைகளை அவர்கள் கருதினார்கள். இச்சட்டங்கள் கல்லில் எழுதப்பட்டதால் அதனை வழிபடும் பொருளாக கருதினார்கள் அக்காலத்தில் இருந்த மக்கள். கல்லில் எழுதப்பட்டுள்ள சட்டம் அம்மக்களின் கடின உள்ளத்தை திருத்தி எழுதக்கூடிய சட்டங்களாகும். அச்சட்டங்களின்படி வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் இன்புற்று அன்போடு வாழலாம் என்பது தான் இறைவனின் விருப்பம்.      ஆனால் இயேசு மண்ணில் வாழ்ந்த போது இந்நிலை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. கல்லில் எழுதப்பட்ட சட்டங்கள் வெறும் கற்களில் மட்டும் தான் இருந்தது. இதயங்களில் இல்லை. எனவேதான் இயேசு திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்தேன் எனக் கூறுகிறார். தன் சொல்லிலும் செயலிலும் அன்பை வெளிக்காட்டுகிறார். அறநெறியோடு  சமூகத்தை அணுகுகிறார். நாமும் அவ்வாறே அணுக இன்றைய நாளில் இறைவார்த்தை வழியாக அழைப்பு தருகிறார்.
ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக்கூடிய இந்த உலகில் சட்டம் என்பது அறநெறியையும் அன்பையும் அடிப்படையாகக் கொண்டது என்ற இயேசுவின் வாழ்க்கை பாடத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு நாம் வாழும் சமூகத்தில் அனைவருக்கும்   சட்டம் சமமானது. சட்டத்தில் உயர்வு- தாழ்வு, ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடுகள் எல்லாம் இல்லை என்பதை உள்ளத்தில் இருத்தி.  அனைவரோடும் சமத்துவத்தோடும், சமநீதியோடும், அறநெறியோடும் இச்சமூகத்தில் வாழ்ந்து நமது வாழ்வையும் அடுத்தவர் வாழ்வையும்   அழகாக்க முயலுவோம்... 

1 கருத்து:

  1. சட்டங்களால் நமது வாழ்வையும் பிறரின் வாழ்வையும் அழகாக்க நம்மை அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாய ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...