வியாழன், 11 மார்ச், 2021

அலட்சியம் செய்யாதே... (12.3.2021)

அலட்சியம் செய்யாதே...

இணைந்து வாழ்வதில் இன்பம் காணும் இனியவர்களே..! வணக்கம்.

இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்கின்றேன்.
 42 ஆண்டுகளாக சிற்பி ராஜன் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து சிலைகளை செய்து வருகின்றனர். இவர்கள் செய்து கொடுத்த சிலை தான் தமிழ்நாட்டில் பல கோவில்களில் இருக்கின்றன. காஞ்சி சங்கரமடத்தில் இருக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த மகா சிலை கூட இவர்களால் செய்யப்பட்டதுதான். இதில் மிகவும் முக்கியமானது எதுவென்றால் இவரது மாணவர்கள் அனைவரும் சமூகத்தால்  ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட  இனத்தைச் சார்ந்தவர்கள் இவர்களால் உருவாக்கப்படும் சிலையே என்று பல கோவில்களில் உள்ளது. ( இவர்களைப் பற்றிய குறும்படம் தெருவிளக்கு என்ற பெயரில் வலைதளங்களில் உள்ளது)

   நாம் வாழும் உலகில் மனிதனை மனிதன் ஒதுக்கி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்த சூழல் நெடுங்காலமாகவே தொடருகிறது. இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போதும் கூட பலவித பாகுபாடுகள்.. மனிதன் மனிதனை ஒதுக்கியும்,புறம் தள்ளும் வாழ்ந்தான் என்பதை வரலாற்றில் இருந்து நாம் அறியலாம். ஆனால் இன்று நற்செய்தி வாசகத்தில் இயேசு இறையாட்சியின் பொருட்டு ஒருவரை பாராட்டுகின்றார்.அவரிடமிருந்த ஞானத்தையும் அடுத்தவருக்கு அறிவிக்கின்றார் .  
அன்புக் கட்டளையை பின்பற்ற கூறும் இயேசுவின் வார்த்தைகளை கேட்டு ஒருவர். இயேசுவின் அன்பு கட்டளைகளுக்கு விளக்கம் தருகின்றார்.விளக்கம் தரும் அந்த மனிதனின் செயலை கண்டு வியந்த வண்ணம் அவரை இயேசு பாராட்டுகிறார். நீர் இறையாட்சிக்கு தொலைவில் இல்லை என்பதை அவரிடம் எடுத்துரைக்கிறார். இன்று நாம் வாழும் இந்த உலகத்தில்  நான் மட்டுமே எல்லாம் அறிந்தவன். எனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்ற மமதையோடு வாழும் மனிதர்களுக்கு மத்தியில் இயேசு அடுத்தவரின் ஞானத்தை வியந்து பாராட்டுகிறார். 

இன்று நம்மில் பெரும்பாலும் பலர் பல நேரங்களில் அடுத்தவர் நம்மை விட அதிகம் அறிந்தவராக இருக்கும்போது அவரின் அறிவை கண்டு பாராட்டுவதும் இல்லை. அவர்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. மாறாக நம்மை விட அவன் என்ன உயர்ந்தவனா? என்ற எண்ணத்தோடு பல நேரங்களில் பலரை அலட்சியப்படுத்தி செல்லக் கூடியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் சில நேரங்களில் நாம் சிலரை பற்றி கொண்டிருக்கக்கூடிய முன்சார்வு எண்ணங்களின்   அடிப்படையில் அவர்கள் மட்டுமே அனைத்து அறிந்தவர்கள்  என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களை அலட்சியப் படுத்துகிறோம்.  ஆனால் நம்மிடமிருந்து இயேசு முற்றிலும் வேறுபட்ட வாராய் தன்னிடம் ஒருவன் கேள்விகளை கேட்க வருகிறான் என்பதை அறிந்து அவன் கேள்விக்கு பதில் தருகிறார். இயேசுவின் பதிலைக் கேட்ட அந்த கேள்வி கேட்ட நபர் இயேசுவின் பதிலுக்கு விளக்கத்தை தன்னிடம் இருக்கக்கூடிய அறிவின் துணை கொண்டு விளக்குகிறார். அதை இயேசு ஏற்றுக் கொள்கிறார் அவரை பாராட்டுகிறார். 
இயேசுவைப் போலவே அடுத்தவருக்கு இருக்கக்கூடிய அறிவை நாம் மதிக்கவும் அவர் கூறக்கூடிய கருத்துக்களுக்கு செவி கொடுக்கவும் இன்றைய நாளில் அழைக்கப்படுகின்றோம்.  சொல்வதை கவனமாக கேட்பது என்பது எவ்வளவு சிரமமானது இல்லை. ஆனால் யாருமே அதை செய்வதில்லை. அன்றாட வாழ்வில் நாம் உறவுகளிடையே ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு காரணம் ஒருவர் பேசுவதை மற்றவர் காது கொடுத்து கேட்காததூ தான். மனிதர்கள் பொறுமையாக கவனிப்பதே இல்லை. குழந்தைகளை கூட பல இடங்களில் பெற்றோர் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்பதில்லை.  கவனமாக கேளுங்கள். கவனமாக கேட்பதற்கு பழகிக் கொண்டாலே வாழ்க்கையில் பாதி விஷயங்களில் வெற்றி கொண்டு விடலாம். இப்படி மற்றவர் பேசுவதை கவனமாகக் கேட்கும் ஒருவர் அனைவருக்கும்  பிடித்தமானவராக இருப்பார். புத்திசாலியாகவும் இருப்பார். தன்னிடம் கேள்வி கேட்ட மறைநூல்  அறிஞரின் விளக்கத்தை ஆண்டவர் இயேசு கிறிஸ்து கவனத்தோடு கேட்டார் அவரை பாராட்டினார். நாமும் நாம் வாழும் உலகில் கவனத்தோடு கேட்கவும் அடுத்தவரின் அறிவை அலட்சியம் செய்யாது அதற்கு கவனத்தோடு செவி கொடுக்கக் கூடியவர்களாக மாறிவிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...