ஞாயிறு, 7 மார்ச், 2021

ஏற்றுக் கொள்ளாமை ...(8.3.2021)

ஏற்றுக் கொள்ளாமை ...

நல்மனம் கொண்ட நம்பிக்கையாளர்களே! 

இன்றைய இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய வாசகங்கள் ஏற்றுக் கொள்ளாமை என்பதை குறித்து சிந்திக்க நம்மை அழைக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அவரின் சொந்த ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளாததை நாம் வாசிக்க கேட்கின்றோம்.

நேர்மையோடும் நீதியோடும் செயல்படுகின்ற காரணத்தினாலும் அடுத்தவரின் குற்றங்களை சுட்டிக்காட்டுகின்ற காரணத்தினாலும் நம்முடன் இருப்பவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள் இதையே இன்றைய வாசகம் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது.  

ஏற்றுக் கொள்ளாமை என்பது அனைவர் வாழ்விலும் அனுதினமும் நடக்கக்கூடிய ஒன்றுதான். பல நேரங்களில் குடும்பங்களில், வேலை செய்யும் இடங்களில், நண்பர்களுக்கு இடையே நாம் இந்த ஏற்றுக்கொள்ளாமையை உணர்ந்து கொள்ள இயலும். 
பல நேரங்களில் நமது நட்பு வட்டாரங்கள் நமக்கு அறிவுறுத்தலாம். இடத்திற்கு ஏற்றார் போல பேசி நாம் வாழ்ந்து விட்டு செல்லலாம் அதுவே விவேகமான ஒரு செயல் என்றும் கூறலாம். இடத்திற்கு ஏற்றார் போல மாறுவதற்கும் பேசுவதற்கும் நாம் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல.  நாம் உண்மையான இயேசுவின் உண்மை சீடர்கள். எனவே மரணமே நம்மை நெருங்கினாலும் நம்மிடம் இருக்கக்கூடிய மகத்துவமான உன்னதமான இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி அறச்சினத்தோடு அகிலத்தில் வாழ்ந்திட ஆண்டவர் இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் . 

உண்மையோடும் நீதியோடும் செயல்படக்கூடிய உங்களை இச்சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை என அஞ்ச வேண்டாம்.  அன்று இயேசுவையும் ஏற்றுக் கொள்ளாத இந்தச் சமூகம்  இன்று தானே ஏற்றுக்கொள்ளத் தயங்கிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அனுதினமும் அவரது மதிப்பீடுகளை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு, அதனை செயலாக்க முயலுகிறது. இதனை மனதில் இருத்திக் கொண்டு நாம் தொடர்ந்து அவரது பாதையில் பயணித்து இச்சமூகத்தில் அறத்தை நிலைநாட்டிட ஆண்டவரின் பாதையில் பயணம் செய்வோம். 

1 கருத்து:

  1. உறுதியான மனநிலையுடன் நீதியைப் பற்றிக்கொண்டு உண்மையுடன் வாழ அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களின் இன்றைய கருத்துக்கள் நம்மை நேர்மையாக வாழ பயிற்றுவிக்கின்றன. தொடரட்டும் தங்களின் இறைப்பணி. 🎉🎉🎉🎉🎉

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...