மனிதன் இருப்பது எங்கே...?
நல்லுள்ளம் கொண்ட நல்லவர்களே...! வணக்கம்.
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
புது உள்ளம் கொண்டவர்களாக மண்ணில் விழுந்து பலன் தர இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் நமக்கு இறைவன் தரக்கூடிய புதிய இதயத்தைப் பற்றி கூறுகிறார் இந்த இதயத்தில் அன்பு குடிகொண்டிருக்கும். இதுவரை நாம் நம்மிடையே கொண்டிருந்த தவறான எதிர்மறையான எண்ணங்களை எல்லாம் அழித்துவிட்டு இறைவன் தருகின்ற புதிய இதயத்தை நமது ஆக்கிக்கொள்ள எரேமியா இறைவாக்கினர் நம்மை அழைக்கின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கோதுமை மணி மண்ணில் விழுந்து பலன் தரவேண்டும் என்ற செய்தியினை இறைவன் எடுத்துரைக்கின்றார் நாம் இயேசுவின் புதிய இதயத்தை நம்முடையதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய தவறான நெறியற்ற ஒழுக்கநெறிகளுக்கு எதிரான காரியங்கள் எல்லாம் விடுத்துவிட்டு இறைவன் தருகின்ற புதிய இதயத்தில் அன்பு நீதி சமத்துவம் என்ற இறையாட்சியின் விழுமியங்களை தமதாக்கிக் கொண்டு நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரையும் அன்பு செய்யவும் ஏற்றுக்கொள்ளவும் சகோதரர்களாக வாழ உதவும் உறவை மையமாகக் கொண்டு இவ்வுலகத்தில் பல நல்ல உள்ளங்களை நமது ஆக்கிக்கொள்ள இயேசு அழைப்பு தருகின்றார்.
வாழ்வில் மனிதன் ஒரு செயலின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே இருந்துகொண்டு துன்பங்களுக்கு மத்தியில் தடுமாறுகிறான். எந்த ஒரு துன்பமாக இருந்தாலும் அதன் பிறகு இறுதியில் கிடைக்கப்போவது மகிழ்ச்சி அல்லது எதிர்காலத்திற்கான அனுபவம் என்பதை நாம் உள்ளத்தில் ஆழமாக பதிய வைக்க வேண்டும்.
இன்பத்தாலும் துன்பங்களால் சூழப்பட்ட இந்த உலகத்தில் துன்பங்களை மட்டும் கண்டு மனம் துவண்டு போய்விடாமல் துன்பங்களுக்கு மத்தியிலும் இறைவனது திட்டத்தை வெளிப்படுத்திய இயேசுவைப் போல நாமும் இவ்வுலகில் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.
உண்பதும் உறங்குவதும் வாழ்க்கை என்றால் அதனை மண்ணும் செய்யும் மரமும் செய்யும் என்பார்கள் நாம் மனிதர்கள், நாம் இவ்வுலகத்தில் அன்பால் அனைவரையும் அரவணைத்து துன்பங்களைக் கண்டு துவண்டு விடாது துணிவோடு செல்ல உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக