வெள்ளி, 5 மார்ச், 2021

இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம்... (6.3.2021)

இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நிகழ்ந்து கொண்டிருக்க கூடிய இந்த தவக்காலத்தில் பலவிதமான தவ முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய நமக்கு இன்று இறைவன் ஊதாரி மகன் உவமை வழியாக நமக்கு உணர்த்தக்கூடிய செய்தி இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம் என்பதாகும்.

தவறான வழியில் சொத்தைப் பிரித்துக் கொண்டு சென்ற இளையமகன் தான் செயல் தவறு என உணர்ந்து தந்தையிடம் மன்னிப்பு வேண்டி வருகிறான் தந்தையும் மகனை ஓடிச் சென்று வரவேற்று அவனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார்.  இது இயல்பாக நெடுங்காலமாக பிள்ளைகளின் தவறை பெற்றோர் மன்னிப்பதும் மறப்பதும்  நடைபெற்று வருகிறது.

பொதுவாக கூறுவார்கள் ஒருவனுக்கு நீ கொடூர தண்டனை கொடுக்க வேண்டுமென நினைத்தால் அவனை மன்னித்து விடு.... என கூறுவார்கள்.

மன்னிப்பு என்பது தாயும் தந்தையும் தன் பிள்ளைகளுக்கு எளிதில் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.  
இவ்வடிப்படையில் தான் தந்தையாம் இறைவனும் நம் தவறுகளை பலமுறை மன்னித்து நம்மை தன்பிள்ளை என ஏற்றுக் கொள்கின்றார்.  ஆனால் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் மூத்த மகனின் மனநிலையில் இருந்து விடுபட்டு வாழ அழைக்கப்படுகிறோம். மனம் திரும்பி வந்த தம்பியை ஏற்றுக்கொள்ளவும் தன் தம்பியை ஏற்றுக்கொண்ட தந்தையை ஏற்றுக்கொள்ளவும் மூத்த மகனின் மனம் மறுக்கிறது.  

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பெரும்பாலான நேரங்களில் நம்மால் நமது குடும்ப உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ள இயலுவதில்லை. அவர்கள் செய்யக்கூடிய சிறுசிறு நல்ல காரியங்களையும் ஊக்கப்படுத்த நாம் முன்வருவதில்லை. ஊதாரி மகன்  உவமையில் வரக்கூடிய மூத்த மகனைப் போல நம்மை மட்டுமே முன்னிறுத்தி பல நேரங்களில் உறவுகளிடம் இருந்து விலகி நிற்கின்றோம்.தவறிழைத்த ஒருவன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்டி வருகிறான் என்றால் அவனது உள்ள மாற்றத்தை நாம் உணர்ந்து கொள்ள முயல வேண்டும்.

பொதுவாகவே கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு என்பார்கள்.
 கண்ணுக்கு உலகம் தெரியும்...
 கண்ணீருக்கு உள்ளம் தெரியும் ...

கண்ணீரோடு தன் தந்தையை நோக்கி தான் செய்தது தவறு என கூறிவந்த ஊதாரி மகனை, தந்தையும் மன்னித்து அரவணைத்து ஏற்றுக்கொண்டது போல, நாம் நமது குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவரையும் ஏற்றுக் கொள்ள முயலுவோம். 
 ஏனெனில் நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நாம் விடக்கூடிய மூச்சுக்காற்றை போன்றவர்கள்.
மூச்சுக் காற்றை விட்டால் மீண்டும் அந்த மூச்சுக்காற்றை நாம் வாங்குவது போல...  உறவுகளை விட்டால் நாம் மீண்டும் வாங்கித்தான் ஆகவேண்டும். 
 இன்றைய முதல் வாசகத்தில் கூட கடவுள் நம்மீது கொண்ட அதிகமான அன்பின் காரணமாக நம் மீது அவர் இரக்கம் காட்டி நமது தவறான  செயல்களை எல்லாம் மிதித்துவிட்டு, நம் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து, அதனை ஆழ்கடலில் எரிந்து விட்டு, நம்மை தனது அன்பு பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார். நாம் நமது குடும்ப உறவுகளை மன்னித்து ஒருவரோடொருவர் ஏற்றுக்கொண்டு இன்புற்று வாழும் போது மட்டுமே இறைவனது அரசான இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய முடியும். இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய இந்த தவக் காலத்தில் நாம் எடுக்கும் தவ முயற்சிகள் வழிகாட்டட்டும். .. அதற்கான அருளை இறைவனிடத்தில் தொடர்பு மன்றாடிப் வேண்டிப் பெற்றுக் கொள்வோம். 

இறைவனை போல் இரக்கத்தோடு இருப்போம்...

3 கருத்துகள்:

  1. கண்ணுக்கு உலகம் தெரியும்...
    கண்ணீருக்கு உள்ளம் தெரியும் ...

    வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும் வரிகள்!
    ஒவ்வொருவரும் உணர வேண்டிய வரிகள்!

    மனித உள்ளங்களை மன்னிப்பின் வழியாக மலரச் செய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நமது நன்றிகள் பல! 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

    பதிலளிநீக்கு
  2. நமது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நாம் விடக்கூடிய மூச்சுக்காற்றை போன்றவர்கள்.
    மூச்சுக் காற்றை விட்டால் மீண்டும் அந்த மூச்சுக்காற்றை நாம் வாங்குவது போல... உறவுகளை விட்டால் நாம் மீண்டும் வாங்கித்தான் ஆகவேண்டும்.

    🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...