புதன், 10 மார்ச், 2021

இதயத்தில் இருத்த வேண்டியவை... (11.3.2021)

இதயத்தில் இருத்த வேண்டியவை...

நலவாழ்வை நோக்கி நல்ல வார்த்தைகளுக்கு செவி கொடுக்கும் நம்பிக்கைக்குரியவர்களே!  வணக்கம்...
இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நாம் புறக்கணிக்கப்படும் போதுதான் புரிகிறது...
நாம் புறக்கணித்தவர்களின் வலியும் வேதனையும்....என்பார்கள் 
பலவிதமான அடிமைத்தனத்தில் சிக்குண்டு வாழ்வை இழந்து இருந்த இஸ்ரேயல் மக்களை இறைவன் மோசே வழியாக மீட்டு வருகின்றார்.தான் அழைத்து வந்த  மக்கள் அறநெறியோடு வாழ வேண்டும் என அவர்களுக்கு சட்டங்களை தருகின்றார். ஆனால் ஆண்டவரை புறக்கணித்துவிட்டு அவரவர் விரும்பிய வண்ணம் வாழத் தொடங்குகிறார்கள். இச்செயலை இறைவன் அறவே வெறுக்கின்றார். இதைத்தான் எளிமையான நாம் என்று முதல் வாசகமாக வாசிக்க கேட்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேச்சிழந்த ஒருவர் மேல் பிடித்திருந்த தீய ஆவியை இயேசு விரட்டுகிறார். ஆனால் இயேசு தீய ஆவியின் துணை கொண்டுதான் இச்செயலைச் செய்தார் எனக் கூறி இயேசுவின் செயலை குற்றம்சாட்டுகிறார்கள், புறக்கணிக்கிறார்கள்  கூடியிருந்தவர்கள் சிலர். எலும்பற்ற நாக்கு எப்படியும் பேசும் என்பார்கள் அதுபோல இயேசுவின் நலமான செயலை தீய ஆவியின் செயலாக சித்தரிக்கின்றனர் கூடியிருந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு இயேசு  தெளிவுபடுத்தும் விதமாக அவர்களோடு உரையாடுகிறார்.
இன்று நாம் வாழும் இந்தச் சூழலில் பெரும்பாலும் நாம் நம்மிடையே இருப்பவர்கள் செய்யக் கூடிய செயல்களை கண்டு அவர்களை ஊக்கமூட்டுவதை விடுத்து விட்டு அவர்களின் செயல்களை கண்டு பொறாமைப்பட கூடியவர்களாக இருக்கின்றோம். ஒருவரை ஒருவர் பொறாமை கண்கொண்டு நோக்கும்போது நாம் இவ்வுலகில் இணைந்து வாழ இயலாது.  ஒருவர் மற்றவரை அவர் இருப்பது போல ஏற்றுக்கொண்டு பயணிக்கும்போது மட்டுமே வாழ்க்கை அழகாகும். எனவே நாம் வாழும் இவ்வுலகில் அடுத்தவர்களின் செயல்களில் குற்றம் காண்பதை தவிர்த்து, இருக்கும் வரை ஒருவரை ஒருவர் ஊக்கமூட்டி இறைவனின் அன்பு கட்டளைகளை இதயத்தில் இருத்திய வண்ணமாய் பிரிவையும், பொறாமையும் தவிர்த்து இணைந்து இன்புற்று வாழ்வோம் இவ்வுலகில்... 

1 கருத்து:

  1. இணைந்து இன்புற்று வாழ்வோம் என்ற வார்த்தைகள் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்நோக்க உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளது. அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மகிழ்வின் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...