தூய ஆவியார்
தூய ஆவியார் என்பவர் யார்? ஏன்ற கேள்விக்கு பல இறையியல் வல்லுனர்கள் கடவுளின் மூச்சுக்காற்று தான் தூய ஆவி என கூறுகிறார்கள.; சிலரோ தூய ஆவியார் என்பவர் துணையாளர் எனக் கூறுகிறார்கள். மற்றும் சிலரோ தூய ஆவியார் என்பவர் இயேசுவால் கடவுளிடம் கேட்கப்பட்டு நம்மோடு இருப்பதற்காக வழங்கப்பட்டவார் எனக் கூறுகிறார்கள். நன்மையை எடுத்துரைக்கும் மனசாட்சியே தூய ஆவியார் எனறும் சிலர்; கூறுகிறார்கள். மேலும் சிலர் பெந்தகோஸ்து நாளில் மரியாவும் சீடர்களும் கூடி செபித்தபோது அவர்கள் மேல் இறங்கி வந்தவர் இந்த தூய ஆவியானவர் என கூறுகிறார்கள். இன்னும் சிலர் கடவுளின் தூய ஆவியார் என்பவர் திருஅவையை வழிநடத்தக்கூடியவர் எனவும் கூறுகிறார்கள். இந்தத் தூய ஆவியானவர் படைப்பின் தொடக்கத்தில் இருந்தே இருந்து வருகிறார். தொடக்கத்தில் கடவுளின் ஆவி நீரின் மீது அசைந்தாடிக் கொண்டிருந்தது என தொடக்கநூல் 1 அதிகாரம் 1 வது வசனத்தில் நாம் வாசிக்கலாம். கடவுளின் ஆவியானவருக்கு பலவிதமான ஆற்றல்கள் உண்டு. ஏன் நம்மில் உள்ள அனைத்து ஆற்றலுமே தூய ஆவியாரின் ஆற்றல் என்றால் அது மிகையாகாது. தொடக்க காலத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் பயணம் செய்தபோது அதாவது எகிப்தில் அடிமைகளாக இருந்தவர்கள் விடுதலை பெற்று கானான் நாட்டை நோக்கி பாலைநிலத்தில் பயணம் செய்து கொண்டிருந்த நாட்களில் பகலில் மேகம் தூணாகவும் இரவில் நெருப்பு தூணாகவும் இருந்து வழி நடத்தியவர் இந்த தூய ஆவியானவர். கடவுளின் ஆவியானது மனிதனுக்கு வலிமையைக் கொடுக்கிறது திருவிவிலியத்தில் நீதிமொழிகள் புத்தகம் 14ம் அதிகாரத்தில் 6 ஆம்; வசனத்தில் நாம் வாசிக்கலாம் கடவுளின் ஆவி சிம்சோனின் மீது இறங்கி வர ஆட்டை இரண்டாக கிழிப்பது போல சிங்கங்களை இரண்டாக கிழித்தெறிந்தார் என வாசிக்கலாம். எப்பொழுது எல்லாம் தூய ஆவியானவர் சிம்சோனின் மீது இறங்கி வந்தாரோ அப்போதெல்லாம் சாதாரண மனிதன் செய்யும் காரியங்களை விட மிகவும் வலிமை மிகுந்த காரியங்களை சிம்சோன் செய்தான் என விவிலியத்தில் இறந்த நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய முதல் வாசகத்தில் கூட இயேசுவை சிலுவையில் அறைந்ததற்குப் பிறகு சீடர்கள் அச்சமுற்று பயந்து மறைந்து வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி அன்னை மரியாவும் சீடர்களும் ஒரு மாடி அறையில் அமர்ந்து செபித்து கொண்டிருக்கும் பொழுது தூய ஆவியானவர் அவர்கள் மீது இறங்கி வந்தார். தூய ஆவியைப் பெற்றுக் கொண்டவர்கள் புது படைப்பாற்றல் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக எவரையும் கண்டு அஞ்சாது அனைவர் முன்னிலையிலும் வந்து நின்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அங்கிருந்த அனைவருக்கும் அறிவித்தார்கள். அவர்கள் அறிவித்தது அவர்களது மொழியில் ஆனால் அங்கு பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள் ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழியில் அதனை புரிந்து கொண்டார்கள் என்பதனை இன்றைய முதல் வாசகங்கள் நமக்கு தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. எங்கெல்லாம் மக்கள் கூடி செபிக்கிறார்களோ அங்கெல்லாம் தூய ஆவியானவர் பொழியப்படுகிறார். தூய ஆவியானவரை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு நமது செபமும் மனமும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். உலகிலுள்ள அனைவரிடத்திலும் கடவுளின் ஆவியானவர் இறக்கிறார். ஆனால், காலத்தின் சூழல் காரணமாக மனிதன் தன்னுடன் இருக்கும் கடவுளின் ஆவியை புரிந்து கொள்வதில்லை. மனிதன் கடவுளின் ஆவியானவரை உணர்ந்து கொள்ள வேண்டும். கடவுளின் ஆவி கூறுவதை கேட்டு அதன்படி அவன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே திருஅவை திருவருள்சாதனங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தூய ஆவியை அவனுக்கு நினைவுபடுத்தி அவனுக்காக கூடி செபிக்கின்றது. ஆனால், தூய ஆவியை பெற்றுள்ள மனிதன் பல நேரங்களில் இந்த தூய ஆவியை மறந்து தீய ஆவியின் செயல்களுக்கே முன்னுரிமை தருகிறான். அதை அவன் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இறைவனது நோக்கம். எனவே தான் பவுல் இன்றைய இரண்டாவது வாசகத்தில் குறிப்பிடுகிறார் நீங்கள் ஊனியல்புக்கு உரியவற்றை பின்பற்றி நடப்பீர்களானால் கடவுளின் மக்களாக இருக்க மாட்டீர்கள். கடவுளின் ஆவியைக் கொண்டு தீய ஆவியின் செயல்பாடுகளை கலைந்தால் தான் நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவராக முடியும் என்கிறார். தூய ஆவியால் வலிமை பொருந்தி காணப்பட்ட சிம்சோன் தீய ஆவியின் செயல்பாட்டிற்கு செவிகொடுத்து ஊனியல்பில்புக்கு அடிமையாகி அவன் தலை முடிகள் எல்லாம் இழந்து, அவனது கண்கள் பிடுங்கப்பட்டு, வலிமையற்ற ஒரு நாபராக மாறினான.; பிறர் எள்ளி நகையாடும் மனிதனாக வலம் வந்தான் என்று திருவிவிலியத்தில் நீதிமொழிகள் புத்தகம் 16 ஆம் அதிகாரம் 21 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கலாம். வலிமையை இழந்த சிம்சோன் தீய ஆவியை விட்டுவிட்டு தூய ஆவியானவரே ஏற்பதற்கு மீண்டும் திரும்பி வந்தான். ஆண்டவரை நோக்கி மன்றாடினான். ஆண்டவரே மீண்டும் ஒரே ஒரு முறை உமது தூய ஆவியை என்னுள் அனுப்பியருளும் என்னையும் என் இனத்தாரையும் எள்ளிநகையாடும் இந்த மக்களை நான் அழிக்க வேண்டுமென்றான். தீய ஆவியின் செயல்பாட்டை விட்டுவிட்டு தூய ஆவியானவர் பற்றிக் கொள்ள மீண்டும் இறைவனிடத்தில் சரணாகதி அடைந்தான். ஆவியானவர் அவன் மீது இறங்க அவன் தன்னையும் தன் இனத்தாரையும் துன்புறுத்திக் கொண்டிருந்த மக்கள் பலரை கொன்று குவித்து தானும் உயிரை விட்டான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எப்போதும் நம்மோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு துணையாளரை நமக்குத் தர வேண்டுமென இறைவனிடத்தில் மன்றாடுகிறார.; அவரே உண்மையை எடுத்துரைக்கும் துஸய ஆவியார். அந்த தூய ஆவியை மறந்து வாழ்ந்த நேரங்களை நினைத்து இப்பொழுது மனம் வருந்துவோம். சிம்சோனை போல நாமும் இயேசுவிடம் திரும்பி வருவோம்;. இன்றைய வழிபாட்டில் இறைவனிடம் தூய ஆவியானவரை எங்களுக்கு வழங்குமாறு கேட்போம். அருட்சாதனங்கள் மூலமாக நாம் பெற்றுக்கொண்ட தூய ஆவியானவரை மறந்த தருணங்களுக்காக மனம் வருந்தி, அவரின் குரல் கேட்டு அவரை நாம் இப்போது மீண்டும் உணர்ந்துகொள்வோம். அவரோடு தொடர்ந்து பயணிப்போம் அவர் வெளிப்படுத்தக் கூடிய உண்மைகளை கடைப்பிடித்து உண்மையின் சாட்சிகளாக வாழ தொடர்ந்து மன்றாடுவோம்.
What a great unifying power of God! Let us be guided by the power of the spirit of God!
பதிலளிநீக்குFather i am victor from trichy i saw fr.kennedy message in our family wattsapp i cant understand what he is saying pls go through it and say it is correct or not very worried we must reach our people with correct understanding w
பதிலளிநீக்குwww youtube.com
https://youtu.be/jqNmbs_jpo
pl see thuya aviyin thuya thunaiviyar you tube message heading
of father kennedy phone number 9486943434
pl