வெள்ளி, 24 மே, 2024

இறையாட்சியை சிறு குழந்தைகள் போல் ஏற்றுக் கொள்வோம்! (25-5-29)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

     இன்றைய இறை வார்த்தையானது இறைவனுக்கு உகந்தவர்களாக இறைவன் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகிய குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமைகளும் இந்த அகிலத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். சிறு குழந்தைகள் செய்கிற சின்னஞ்சிறு காரியங்களை கூட தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகின்ற நபர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். குழந்தைகளை இறைவன் பெயரால் ஏற்றுக் கொள்வதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் கடவுள் நமக்கு கொடுத்த பணி என்பதை உணர்ந்தவர்களாக நீங்களும் நானும், அப்பணியை, கடமையை உணர்ந்தவர்களாக செயல்படுவதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

வியாழன், 23 மே, 2024

இறைவன் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்! (24-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

   இன்றைய இறைவார்த்தையானது கணவன் மனைவிக்கான உறவை பற்றி நமக்கு இன்னும் ஆழமாக உணர்ந்து கொள்ள வலியுறுத்துகிறது. இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாக இருந்து என் வாழ்நாள் முழுவதும் உன்னை மதிக்கவும் நேசிக்கவும் வாக்களிக்கிறேன் என்ற வார்த்தைப்பாட்டினை கடவுளுக்கு முன்னிலையில், அருள்பணியாளர்களை சாட்சியாக கண்டு, உறவுகளை சாட்சியாக கொண்டு, கொடுத்து இணைந்த ஒவ்வொரு தம்பதியினரும், 
தங்கள் வாழ்வில் வருகிற இடர்பாடுகளின் போதெல்லாம், தங்கள் கொடுத்த அந்த வாக்குறுதியின் அடிப்படையில் ஒருவர் ஒருவருக்கு அன்பை அதிகரித்துக் கொண்டு, விட்டுக் கொடுப்பவர்களாக, சகிப்புத் தன்மையோடு இணைந்து இந்த அகிலத்தில் வாழ வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக் கொள்ள அழைக்கப்படுகிறோம். 

       இறைவனின் முன்னிலையில் வாக்குறுதி கொடுத்த ஒவ்வொருவருமே தங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கு உகந்த வாழ்வை தங்கள் வாழ்வாக அமைத்து கொண்டு இணைந்து பலவிதமான அறப்பணிகளை முன்னெடுப்பவர்களாக, இல்லற வாழ்வை அலங்கரித்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நமது வாழ்வுக்கான பாடமாக நாம் நமது இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். இந்த இறைவார்த்தை தருகின்ற வாழ்வுக்கான பாடத்தை இனி வருகின்ற நாட்களில் எல்லாம் பின்பற்றுகின்ற மனிதர்களாக, நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக்கொண்டு, இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இறைவனுக்கு உகந்த குடும்பமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தியவர்களாக இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 


நிலை வாழ்வை நோக்கி! (23-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    இன்றைய இறை வார்த்தையானது, நாம் இயேசுவின் பெயரால் மற்றவருக்கு செய்கின்ற சின்னஞ்சிறிய காரியங்களுக்கான கைமாறை கண்டிப்பாக பெற்றுக் கொள்வோம் என்பதை மனதில் இருத்திக்கொண்டு, தவறுகளை குறைத்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு உகந்தவர்களாக, இந்த அகிலத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை நமது வாழ்வின் வாழ்வுக்கான பாடமாக இன்றைய இறைவார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ள நாம் அத்தனை பேரும் அழைக்கப்படுகிறோம். 

   இயேசுவின் பெயரால் எத்தனை விதமான இடர்பாடுகளை சந்தித்தாலும், இறைவன் நம்மை காக்க வல்லவர், இடர்பாடுகளுக்கு மத்தியில் நாம் கடந்து செல்வதற்கான ஆற்றலைக் கொடுப்பவர் என்பதை உணர்ந்தவர்களாக, உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக, இயேசுவுக்கு உகந்தவர்களாக, சென்ற இடமெல்லாம் நன்மை செய்த அந்த இயேசுவைப் போல நீங்களும் நானும் நன்மைகளை அதிகம் செய்து, ஆண்டவருக்கு உகந்தவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

நம் சார்பாக இருக்கிறார்! (22-5-2024)


 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய இறை வார்த்தையானது, இயேசுவின் பெயரால் இந்த அகிலத்தில் பலவிதமான அறப்பணிகளையும், ஆன்மீகப் பணிகளையும், நீங்களும் நானும், முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இயேசுவின் பெயரால் இருக்கின்ற அத்தனை நபர்களுக்கும் நன்மை செய்கின்ற நபர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள ஆற்றல் வேண்டியவர்களாக இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.ஃ

யார் பெரியவர்? (21-5-2024)


 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வாழ்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

       தங்களுள் யார் பெரியவர் என்ற மனநிலையோடு இயேசுவின் சீடர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, சிறு பிள்ளையை முன்னிறுத்தி என் பெயரால் இச்சிறு பிள்ளையை ஏற்றுக் கொள்ளுகிறவரே எனக்குரியவர் என்ற வார்த்தைகளை இயேசு உதிர்க்கின்றார். 
             குழந்தைக்குரிய மனநிலை கொண்ட மனிதர்களாக நாம் வாழுகிற சமூகத்தில் எப்படிப்பட்ட நிகழ்வுகளை சந்தித்தாலும், இடர்பாடுகளை சந்தித்தாலும், அத்தனைக்கும் மத்தியிலும் அனைத்தையும் மன்னித்து மனதார மற்றவர்களை ஏற்றுக்கொண்டு, நம்மால் இயன்ற நன்மைத்தனங்களை அவர்களுக்கு செய்கிற நபர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுவது ஆண்டவருக்கு உகந்த ஒரு வாழ்வு என்பதை உணர்ந்தவர்களாக, கடவுள் விரும்புகிற மக்களாக நமது வாழ்வை இன்றைய நாளில் அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் அழைக்கப்படுகிறோம். இந்த இறை வார்த்தை தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக, இறைவன் விரும்புகிற மக்களாக, நீங்களும் நானும் நமது வாழ்வை இன்றைய நாளில் நெறிப்படுத்திக் கொள்ள இறைவனிடத்தில் இறைவேண்டல் செல்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

ஞாயிறு, 19 மே, 2024

இவரே உம் மகன்! இவரே உம் தாய்! (20-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  

 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
      இன்றைய முதல் வாசகம், முதல் பெற்றோரின் பாவத்தை சுட்டிக் காட்டுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம் முதல் பெற்றோரின் பாவத்தால் இழந்த உறவை மீண்டும் இறைவன் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக, தன்னுடைய ஒரே தாயை நமக்குத் தாயாக கொடுத்த நிகழ்வை நாம் வாசிக்க கேட்கின்றோம். இந்த இறை வார்த்தைப் பகுதிகளை இதயத்தில் இருத்தி சிந்திக்கிற போது ஆண்டவர் நமக்கு கொடுத்த அன்புத் தாயாகிய அன்னை மரியாவின் மீது ஆழமான அன்பை வளர்த்துக்கொண்டு அன்னை மரியாவின் வழியாக ஆண்டவரிடத்தில் இறை வேண்டலை முன்னெடுக்கவும், அன்னை மரியா ஆண்டவருக்கு உகந்த வாழ்வை தம் வாழ்வாக அமைத்துக் கொண்டது போல நீங்களும் நானும் நமது வாழ்வை அன்னை மரியாவின் வாழ்வு போல ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக நாம் நமது வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். இந்த வாழ்வுக்கான பாடத்தை வெறும் வார்த்தையாக எண்ணி கடந்து விடாமல், இந்த வார்த்தைகளை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக இந்த அகிலத்தில் கடவுளின் திட்டத்திற்கு தன்னை முழுவதுமாக கையளித்து வாழ்ந்த அந்த அன்னையை நமக்கு அன்னையாக கொடுத்த ஆண்டவருடைய பண்பை உணர்ந்து கொண்டவர்களாக நீங்களும் நானும் அன்னை மரியாவைப் போல் அகிலத்தில் பல அறப்பணிகளை முன்னெடுக்கவும், ஆன்மீகப் பணிகளை முன்னெடுக்கவும், ஆண்டவருக்கு உகந்த வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளவும் இறைவனிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

தூய ஆவியார் பெருவிழா (19-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  


இன்றைய இறை வார்த்தையானது தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுக்க வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. 

தூய ஆவியானவரின் குரலுக்கு இயேசுவின் சீடர்கள் செவிகொடுத்தார்கள். அதன் விளைவாக யாருக்கெல்லாம் அஞ்சி நடுங்கி பயந்து போனார்களோ அத்தகைய மனிதர்களின் முன்னிலையில் போய் நின்று இயேசுவின் இறப்பை குறித்தும் உயிர்ப்பை குறித்தும் உறுதியோடும் உரக்கச் சொல்லுகிற நபர்களாக தங்கள் வாழ்வை அவர்கள் மாற்றிக் கொண்டார்கள் இந்தத் தூய ஆவியானவருக்கு நாமும் செவி கொடுக்கிற போது, இந்த அகிலத்தில் இருக்கின்ற அநீதிகளைக் கண்டு அஞ்சாமல், நீதியையும் உண்மையையும் உரக்கச் சொல்லுகிற நபர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை சீடர்களின் சீடர்களின் வாழ்வில் இருந்து நமது வாழ்வுக்கான பாடமாக கற்றுக்கொள்ள இன்றைய இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம்.
       நமக்கு நன்மை தீமையை எடுத்துரைக்கும் அத்தூய ஆவியாரின் குரலுக்கு செவி கொடுத்து நமது வாழ்வை ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு உகந்த ஒரு வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

சனி, 18 மே, 2024

இவரது சான்று உண்மையானது!(18-05-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

இன்றைய இறை வார்த்தையானது, இறைவன் மீது ஆழமான அன்பு உறவு கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் சமகாலத்தில், இயேசுவின் சீடர்களுள் ஒருவரான யோவான் இயேசுவின் மீது அதிக அன்பு கொண்டிருந்தார் என்பதும், இந்த யோவானுக்கு அழிவு என்பது இல்லை என்பதும் இயேசுவின் சீடர்களின் மன நிலையாக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் இவருக்கு என்னவாகும் என்று கேள்வியை இயேசுவை நோக்கி எழுப்பிய போது ஆண்டவர் அதே அன்பு கொண்டவர்களாக ஒவ்வொருவரும் தமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார்.. இந்த யோவானை போலவே நீங்களும் நானும் இயேசுவின் மீது ஆழமான அன்பு கொண்டவர்களாக யோவானை போலவே இயேசுவுக்கு சான்று பகருகின்றவர்களாக இயேசுவைப் பற்றி இறுதிவரை அறிவிக்கின்ற நபர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இந்த இறை வார்த்தை வழியாக அழைக்கப்படுகிறோம். இந்த இறைவா வார்த்தை தருகின்ற அழைப்பை இதயத்தில் இருத்திக்கொண்டு ஆண்டவர் இயேசுவை இன்னும் அதிகமாக அன்பு செய்கின்ற நபர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள ஆண்டவரிடத்தில் இன்றைய நாளில் அருள் வேண்டுவோம் இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...