இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய இறை வார்த்தையானது இறைவனுக்கு உகந்தவர்களாக இறைவன் கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகிய குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமைகளும் இந்த அகிலத்தில் பிறந்த அத்தனை பேருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். சிறு குழந்தைகள் செய்கிற சின்னஞ்சிறு காரியங்களை கூட தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகின்ற நபர்களாக நமது வாழ்வை அலங்கரித்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். குழந்தைகளை இறைவன் பெயரால் ஏற்றுக் கொள்வதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் கடவுள் நமக்கு கொடுத்த பணி என்பதை உணர்ந்தவர்களாக நீங்களும் நானும், அப்பணியை, கடமையை உணர்ந்தவர்களாக செயல்படுவதற்கான ஆற்றலை இறைவன் நமக்கு தர வேண்டுமாய் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக