இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
கடவுளின் ஆவியால் இயக்கப்படுகின்ற நாம் ஒவ்வொருவருமே, கடவுளுக்கு உகந்தவர்களாக நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம். தன்னுடைய சீடர்களை அழைத்து அவர்களுக்கு பலவிதமான அதிகாரங்களை கொடுத்து இந்த அகிலத்தில் அனைவருக்கும் நற்செய்தியை அறிவித்து அனைவரையும் ஆண்டவரின் சீடராக மாற்ற வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் அவரது இறப்பையும் உயிர்ப்பையும் உலகிலிருந்த பலருக்கும் அறிவித்து, பலரும் இந்த இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு தங்கள் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ளுகின்ற வகையில் வழிகாட்டுகின்ற நல்லதொரு முன்மாதிரிகளாக செயல்பட்டார்கள்.
அத்தகைய முன்மாதிரிகளாக நீங்களும் நானும் நமது வாழ்வை அமைத்துக் கொண்டு நாம் அறிந்த ஆண்டவரை அடுத்தவருக்கு அறிவிக்கவும், நாம் அறிவிக்கின்ற ஆண்டவருக்கு ஏற்றதொரு வாழ்வை நமது வாழ்வாக மாற்றிக் கொள்ளவும், இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறைவேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக