ஞாயிறு, 9 ஜூன், 2024

நமது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவோம்! (3-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 இன்றைய இறை வார்த்தையானது நாம் ஒவ்வொருவருமே நமக்கு என்ன கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர செய்து மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நமது வாழ்வை அமைத்துக் கொள்ள இன்றைய இறைவார்த்தையானது நமக்கு அழைப்பு விடுக்கிறது.  

    திராட்சை தோட்ட உரிமையாளர் திராட்சை தோட்டத்தை பண்படுத்தி, அதை கூலி ஆட்களிடம் கொடுத்து மேற்பார்வையிட சொல்கிறார். ஆனால் மேற்பார்வையாளர்களோ அந்த உரிமையாளரிடமிருந்து அந்த நிலத்தை அவர் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவருக்கு உரிய பங்கை அவருக்கு கொடுக்காமல், அந்த நிலத்தை அபகரித்துக் கொள்ள எண்ணுகிற போது, இத்தகைய மனிதர்களை அந்த தோட்ட உரிமையாளர் தோட்டத்தில் நிலையாக வைத்திருக்க விரும்ப மாட்டார் எனச் சொல்லுவதன் வாயிலாக, நீங்களும் நானும் இந்த அகலத்தில் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறோம் பலவிதமான பொறுப்புகளும் கடமைகளும் நமக்கு இந்த அகிலத்தில் இருக்கிறது. இந்த பொறுப்புகளையும் கடமைகளையும் உணர்ந்து நாம் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நம் பணிகளை செய்ய வேண்டும். மற்றவர்களின் நம்பிக்கைக்கு எதிராக நமது வாழ்வு அமையுமாயின், நாம் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவோம் என்பதை இன்றைய இறை வார்த்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

 இறை வார்த்தை சுட்டிக்காட்டுகிற இந்த வாழ்வுக்கான பாடத்தை இதயத்தில் இருத்திக் கொண்டு, நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டு நாளும், இயேசுவின் பாதையில் இணைந்து பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...