வெள்ளி, 14 ஜூன், 2024

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்! (10-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 

இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இன்றைய இறை வார்த்தையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவை குறித்து நாம் வாசிக்க கேட்கிறோம். நாம் எப்படிப்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்த இயேசுவின் வார்த்தைகள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. ஏழை எளியவர் மீது அக்கறை கொண்டவர்களாகவும் அவர்களின் மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக எண்ணுகிற நபர்களாகவும் நீங்களும் நானும் நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள இந்த வார்த்தைகள் நமக்கு அழைப்பு தருகின்றன. இயேசு தருகின்ற இந்த அழைப்பை இதயத்தில் இருத்தி சிந்தித்தவர்களாக நமது வாழ்வை இயேசுவின் வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்மிடம் சரி செய்யப்பட வேண்டியவைகளை எல்லாம் சரி செய்து கொண்டு இயேசுவின் பாதையில் இணைந்து பயணிப்போம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...