வெள்ளி, 14 ஜூன், 2024

அன்பு ஆளுகை செய்யும் குடும்பம் ஆண்டவரின் திருக்குடும்பம்! (14-6-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
 ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள் கடவுளுக்கு எதிராகவும், சக உறவுகளுக்கு எதிராகவும் நமது செயல்களை அமைத்துக் கொள்ளக் கூடாது என்பதை, வலியுறுத்துகிறது. அதிலும் குறிப்பாக கடவுளின் முன்னிலையில், வாக்குறுதி கொடுத்து தங்கள் வாழ்வை துவங்குகிற இல்லற வாழ்வில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்பதையும், ஒருவர் மற்றவர் மீதான ஆழமான அன்பும் மன்னிப்பும் விட்டுக் கொடுத்தலும் இருக்க வேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை வழியாக நாம் உணர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறோம். இயேசுவின் வார்த்தைகளை இதயத்திலிருத்தி சிந்திக்கிற நாம் ஒவ்வொருவரும் இல்லற வாழ்வில் அன்பும் அமைதியும் இன்றும் என்றும் குடி கொண்டிருக்க வேண்டுமென நிறைவேண்டல் செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். நாம் கடவுளின் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கின்ற அத்தனை குடும்பங்களுக்காகவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டலை முன்னெடுப்போம்.

     நாம் அறிந்த வகையில் உறவு சிக்கலின் காரணமாக பிரிந்திருக்கின்ற, இல்லற வாழ்வில் இருக்கின்றவர்கள், இணைந்து வாழ்வதற்கான ஆற்றலை இறைவன் தர வேண்டுமாக இன்றைய நாளில் மன்றாட அழைக்கப்படுகின்றோம். ஆண்டவர் இயேசுவின் அன்புக்குரிய மக்களாக இந்த அகிலத்தில் உள்ள ஒவ்வொருவரும் இணைந்து இறைவன் இயேசுவின் பாதையில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பும் மன்னிப்பும் இரக்கமும் தியாகமும் அதிகரிக்க வேண்டும் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாக நாம் அறிந்த அத்தனை குடும்பங்களுக்காகவும் இன்றைய நாளில் இறைவனிடத்தில் இறை வேண்டல் செய்வோம். இறைவன் நம்மை தொடர்ந்து ஆசிர்வதிப்பார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...